எங்கே இருக்கின்றாய்

என்னவளே நெற்றிக்கு பொட்டு வைத்தாய்; நிலவையே நீ தொட்டு வைத்தாய்; என்னை மட்டும் ஏன் விட்டு வைத்தாய்? கண்ணுக்கு மை தீட்டுகின்றாய்; கண்ணானவன் எனை மட்டும் ஏன் வாட்டுகின்றாய்? உன் உதடுகள் மின்னுதடி சாயத்தில்; என் உள்ளமன்றோ உருகுதடி காயத்தில்; ஆயிரம் கவிதைகள் கிடைத்துவிட்ட ஆதாயத்தில்; பல்லாயிரம் கற்பனையில் மிதக்கின்றேன் ஆகாயத்தில்; ஆகாயத்தில் கார்மேகங்கள் சூழ்ந்த்தால் ஆலாபனை பாடுகிறேன் வாடி முகத்தில் கருரோமங்கள் சூழ்வதால் ஆகிவிடுகின்றன தாடி காதலை தேடிப்போனேன் கவி பாடி காதலி உன் பெயரை […]

கொலைகள்

கொல் என்றேன்கொல்லென்று சிரித்தாள்கொல்லாமல் கொன்றாள்கொன்றேயிருக்கலாம் அவளென்னைகொன்றால் பாவமாகுமோ?கொல்லாமல் கொன்றால்?கொலைகூடக் காதலாகுமோ?கொன்றிருக்கலாம் அவளைகொல்வதற்கு முந்திவிட்டாள்கொன்றிருந்தால் சிறையறையில்கொல்லப்பட்டதால் மணவறையில் — -ஏனாஓனா. Thank you for reading. 🙂

காலடி தடங்கள்

அதே மாலை நேரம், அதே காற்று, அதே கடல் அலை, அதே கால் தடங்கள் மணலில்- என் காதலியினுடையது. அன்று தொலைவில் கண்ட தடங்கள் நேற்று அருகில் வந்த தடங்கள் இன்று என்னை விட்டுச்சென்ற தடங்கள். அன்று உன் காலடி தடங்களாலேயே உன் வருகையை அறிந்தவன் நான். இன்று பின்தொடர்கிறேன் உன் தடங்களை, உனக்குத்தெரியாமல். சில நாட்கள் காணவில்லை உன் கால் தடங்கள்,-பின் கண்டடைந்தேன் உன் கால் தடங்களை-நீ சரணடைந்தவனின் கால் தடத்தோடு. ஆண்டுகள் பல உருண்டோடின, […]

புரிதலில்லாக் காதல்

அன்று இளசுகள் நாம். காதலுக்கு அர்த்தம் தெரியுமா நமக்கு? நாம் செய்ததுதான் காதல் என நம்பிக்கொண்டிருந்தோம். நெடுநாள் வாழ்ந்த நம் நட்புக்குள், ஏதோ ஒரு இன்பம், மெல்லிதாகப் படர ஆரம்பித்தது. அது நமக்கும் பிடித்திருந்தது. லேசாகப் படர்ந்ததினை, உரம் போட்டு வளர்க்க நாமொன்றும் அஞ்சவில்லை. நமது நண்பர்கள் கூட அவரவர் பங்குக்கு லேசாக தண்ணீர் தெளித்தனரே! படர்ந்த அந்தக் கொடி, நம் காலைச் சுற்றிய பாம்பு என நமக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. சந்தேகம் வலுத்த […]

வானம்

அவள் மிக அழகானவள்.நீளமாய் இருப்பாள், நீலமாய் இருப்பாள். மிகவும் பிரகாசமான சூரியனைப் பொட்டாகக் கொண்டிருப்பாள், அந்தப் பொட்டின் நிறம் அவளது மனநிலையக் காட்டும்.சில நேரங்களில் மஞ்சளாய் மங்களகரமாக, சில நேரங்களில் சிவப்பாய் பத்திரகாளியாக, சில நேரங்களில் பெரிதாய் பட்டிக்காடு போல, சில நேரங்களில் சிறிதாய் பட்டணம் போல. அவள் வெட்கப்படும்போது கூந்தலை அள்ளி முகத்தை மறைத்துக்கொள்வாள்.அந்தக் கூந்தல் கருமையாகவோ, வெண்மையாகவோ, இரண்டும் கலந்தோ அல்லது அவளது பொட்டின் நிறத்தை உள்வாங்கி, அழகிய வர்ண மாயாஜாலம் செய்ததுபோலவோ இருக்கும். […]

என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா

’என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா – அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. சாதாரணமாய், காதலர்கள் மாதிரியா பழகினோம்? கணவன் மனைவி போலல்லவா இருந்தோம். புருசா என்றும் பொண்டாட்டி என்றுமல்லவா அழைத்துக்கொண்டோம். மொபைலில் கூட பெயருக்கு பதில் அப்படித்தானே பதிந்து வைத்திருந்தோம். நீதாண்டா என் உயிர், நீ இல்லாம என் வாழ்க்கைய நெனச்சுக்கூட பாக்க முடியலடா, என்றெல்லாம் சொன்னாளே! இப்போது உயிராவது, மயிராவது என்றல்லவா போய்விட்டாள்’. ’எத்தனை முறை என்னுடன் படுத்திருப்பாள்? உன் நெஞ்சு என் மஞ்சம் என்றும், உன் […]