ஹைக்கூ அல்ல குக்கூ கவிதை

          அருகில் உள்ள மரங்கள்                       அகன்று  செல்ல,           தொலை தூர மரங்கள்          துரத்தி வர,         ரசிக்கிறேன் இயற்கையை        ரயில் பயணங்களில்…….. Thank you for reading. 🙂

கார்கிலில் வெற்றி உனக்கே(MAY – 99)

*எல்லை மீறிய எத்தர்களை அழிக்க நய வஞ்சக நரிகள் நம் நாட்டில் புகாமல் இருக்க, இளஞ்சிங்கமே! எழுந்துவிடு. தடைகள் இமயம் போன்றதெனிலும் இடித்து விடு! தாயகத்தைஇமைபோல் காக்க இன்றேபுறப்படு! திண்ணமானதீர்மானங்களை கையில்கொண்டுவிடு! தீரத்துடன்போராட முடிவெடு! துன்பங்களைதுக்கமென நினைத்துவிடு! தூக்கம்இமைகளை அணுகாமல்இருக்கவிடு! தென்படும்எதிரிகளை பந்தாடிவிடு! தேசத்தைகாக்க விழித்துவிடு! தைரியத்தைமற்றவர்க்கு புகட்டிவிடு! தொல்லையின்றிதேசத்தை வாழவிடு! தோட்டாக்களால்எதிரிகளை அழித்துவிடு! தெளத்யத்தில்வெற்றி உனக்கேபுரிந்துவிடு! *இளஞ்சிங்கமேஇன்றே புறப்பட்டுவிடு“வந்தே மாதரம்” பி.கு:-1999-ம் ஆண்டு கார்கில் போர் ஆரம்பித்த 3-ஆம் நாள்என் மனதில் தோன்றிய வரிகள். —கி.கி […]

மீள் இயக்கம்

எழும்போது மகிழ்ச்சியில்லை உள்சென்றதும் உடனே குளியல் கண்ணாடியில் தெரியவில்லை முகம் இயல்பு இயல்பாகவே குழந்தைகள் கண்ணில் குழந்தைகளாய் அலைகள் முன்னே அலைகளாய் பாதைகள் பாதைகளாக மட்டுமே பயணம் தவறிப் போவதில்லை நிலவு குளிர்கிறது சூரியன் சுட மட்டுமே செய்கிறது மேகங்கள் மேகங்களாகவே மாறித் தெரிவதில்லை பாயாசம் இனிக்கிறது வேப்பங்காய் கசக்கிறது மலர்கள் அப்படியே சுவையில் மாற்றமில்லை தட்டில் கோலங்கள் இல்லை சிகரெட் கையைச் சுடுவதில்லை வெறித்துப் பார்க்கும் விட்டம் இல்லை சிந்தனையில் சிதறல் இல்லை மறுபடியும் என […]

நாம் யார் ?

வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் ! வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்த நடை பிணங்கள் ! சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் ! நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் ! தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள் ! கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள்! […]

வெள்ளை மின்னலே…!

நீ என் அகத்திற்கு வருகிறாய் என்றதும் என் அகத்தின் உவகை உலகறியாதது. குறுகுறுப்புடனும் கூதுகலத்துடனும் காத்திருந்தேன் கண்மணியே, ஈராறு நாட்கள் பலநூறு யுகங்கள் போல்! என் தந்தை தமையனுடன் தவழ்ந்து வந்த தேரில்(காரில்) நீ வந்திறங்கியபோது – உன் வதனம் கண்டு ஒரு தேவதை என்றே எண்ணியது என் மனம். உனைப் பாராமல் உன் மேல் நான்கொண்ட ஈர்ப்பு உனைக் கண்டதும் பல மடங்கானது . கண்டதும் ஓடி வந்து கட்டியணைக்க வேண்டுமென்ற அவாவை கட்டுப் படுத்தினேன் […]

கல்லூரி பூக்கள்

அழகிய கல்லூரி பூக்களில் கல்வியே சிறந்தது என கற்கும் சில, காதல்தான் எல்லாம் என அலையும் சில, கிண்டலால் பிறர் மனதை வருத்தும் சில, கீழான பழக்கங்களால் வருத்தும் சில, குற்றம் கூறியே குறைபடும் சில-வேண்டா கூட்டம் கூடியே அழியும் சில- தானும் கெட்டு அருகிலுள்ளதையும் அழிக்கும் சில, கேவலமான வாழ்க்கையை விரும்பும் சில, கையாலாகாதவை என் பட்டம் பெறும் சில, கொட்டமடித்தே தினம் வட்டம் போடும் சில, கோபமே கொள்ளாமல் அமைதியாய் சில, கெளரவமாய் நடந்து […]