கோவா – சிரிக்க மட்டும்

கோவா – உண்மையிலேயே சரியான பெயர்தான். இரண்டு முறை இதுவரை கோவா சென்றிருக்கிறேன். அதில் ஒரு தடவை குடும்பத்துடன். ஹ்ம்ம்ம். இன்னொரு தடவை கல்லூரி நாட்களில், அதகளம். போனதும் தெரியவில்லை வந்ததும் தெரியவில்லை. ஆனா திரும்பி வரும்போது ஜாலியா இருந்ததா ஒரு ஞாபகம். காசெல்லாம் ’தண்ணியா’ செலவாகி வெறுங்கையா இருந்தது அந்தப் பயணம். ஆனா வெறுமையா இல்லை. சரி கோவா படத்துக்கு வருவோம். ஏற்கனவே வெங்கட்டோட படங்கள் இரண்டு பாத்ததுனால, கதை இருக்காதுன்னு தெரிஞ்சுதான் போனேன். என்னோட […]

நாணயம் மற்றும் The Bank Job

நாணயம் எந்த எதிர்பார்ப்புமில்லாது சென்ற படம். ஆரம்பம் முதலே திரையில் பயங்கர ரிச்னஸ். வந்த இடங்கள் எல்லாம் என்னைப் போன்ற சாமானியர்கள் பார்க்காத இடங்கள். ஆனால் கதையின் ஓட்டத்திற்குள் தானாக சென்றுவிட்டேன். ஒரு பெரிய வங்கியில் வேலை பார்க்கும் இளைஞன் பிரசன்னா. உலகத்திலேயே பாதுகாப்பான பெட்டக வசதியை வடிமைத்து அந்த வங்கியில் செயல்படுத்துகிறார். சொந்தமாகத் தொழில் தொடங்க இரண்டு கோடி வங்கி கடனுக்காக காத்திருக்கிறார், அதே வங்கியில். திடீரென முளைக்கும் காதல். காதலிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி […]

2009ல் IMDB ன் டாப் படங்கள்

சில படங்களைப் பற்றி நண்பர்களிடம் பேசும்போது, எப்படி இந்த மாதிரி படங்களெல்லாம் கிடைக்கிறது என என்னிடம் கேட்பதுண்டு. அது ஒன்றும் பெரிய விசயமில்லை, சில படங்கள் நண்பர்கள் வாய்வழி வரும் பரிந்துரை. மற்ற படங்கள் எல்லாம் www.imdb.com பரிந்துரைதான். ஒரு படத்தின் டொரண்ட் கிடைத்தவுடன் இங்கு சென்று அதன் ரேங்கிங் எவ்வளவு என்று முதலில் பார்ப்பேன். பின்பு யூ.எஸ். யூ.கே. நிலவரம். ஏனென்றால் ரேங்கிங் மட்டும் வைத்து ஒரு படத்தை முடிவுசெய்துவிட முடியாது. குறைவான ரேட்டிங் உள்ள […]

ஒரு தீவிரவாதியின் மறுபக்கம் – Flugten (The Escape)

கடந்த வாரத்தில் கிடைத்த ஒரு மாலை ஓய்வு நேரத்தில் படம் பார்க்கலாமே என்று நினைத்தபோது, கண்ணில் பட்டதுதான் இந்தப் படம். Flugten (The Escape). டென்மார்க் படம். போஸ்டரைப் பார்த்தவுடனேயே மனதில் ஒரு கதை ஓடிவிட்டது. நம்ம கதாநாயகியை தீவிரவாதிகள் பிடித்துக்கொண்டு போய்விட, அவள் தப்பி வருவதுதான் கதை போல இருக்குமென்று. படம் ஆரம்பித்தவுடனே அது போலவே நடந்தது. ஆனால் அடுத்த 20 நிமிடத்தில் நாம் நினைத்த திரைக்கதை அனைத்தும் தவிடுபொடி. டென்மார்க் நிருபர் நமது கதாநாயகி […]

தளபதி – ஒரு பார்வை

சிறு வயதில் சூப்பர் ஸ்டார் என்ற மோகம் இருந்ததுண்டு. முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கெல்லாம் அது இருந்ததில்லை, ‘ஸ்டைல்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் மட்டுமே அது அடக்கம். அப்போது பார்த்த படம் – தளபதி. இப்போதோ, திரையில் தெரியும் ஸ்டைல் என்பதையும் தாண்டி, ரஜினி என்ற மனிதனை மிகவும் பிடித்துப் போயிற்று. கடந்த ஞாயிரு மதியம் மீண்டும் தளபதி படம் பார்க்க நேர்ந்தது. அப்போது பார்த்ததற்கும், இப்போது பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்?! தளபதி = […]

முன்னோடிகள்

எவ்வளவு ஆண்டுகளுக்கு முன் சூரியன் உருவாகியிருக்கும்? பூமி? உயிர்? மனிதன்? நமக்கு முன் தோன்றிய உயிர்களில், இப்போது நம்முடன் இருப்பவற்றுள் பழமையானது எது? முதன் முதலில் தோன்றிய மனிதன் இவ்வுலகில் எங்கு வாழ்ந்திருப்பான்? முதலில் தோன்றியது ஆணா பெண்ணா? மனிதனில் முதலில் தோன்றியது பெண் என்கிறது விஞ்ஞானம். அப்படியானால் இனப்பெருக்கம்? ஹோமோசேப்பியன் என்றால்? மனிதன் உலகம் முழுவதும் பரவியது ஏன்? கப்பல் இல்லாத அக்காலத்தில் கண்டம் விட்டு கண்டம் எப்படி சாத்தியம்? இமயமலை இருந்த இடத்தில் அதற்கு […]