ஒரு கரு நான்கு கதைகள்

முன்கதைச்சுருக்கம்:அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர் (நிலாரசிகன், அடலேறு, ஜனா, அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் – இவர்கள்தான் கதையில் நடமாடும் பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம். குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும்,அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின் பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் […]

ஒரு தீவிரவாதியின் மறுபக்கம் – Flugten (The Escape)

கடந்த வாரத்தில் கிடைத்த ஒரு மாலை ஓய்வு நேரத்தில் படம் பார்க்கலாமே என்று நினைத்தபோது, கண்ணில் பட்டதுதான் இந்தப் படம். Flugten (The Escape). டென்மார்க் படம். போஸ்டரைப் பார்த்தவுடனேயே மனதில் ஒரு கதை ஓடிவிட்டது. நம்ம கதாநாயகியை தீவிரவாதிகள் பிடித்துக்கொண்டு போய்விட, அவள் தப்பி வருவதுதான் கதை போல இருக்குமென்று. படம் ஆரம்பித்தவுடனே அது போலவே நடந்தது. ஆனால் அடுத்த 20 நிமிடத்தில் நாம் நினைத்த திரைக்கதை அனைத்தும் தவிடுபொடி. டென்மார்க் நிருபர் நமது கதாநாயகி […]

நில் கவனி செல்லாதே செய்.

நீங்கள் எப்போதாவது உங்கள் கேஸ் சிலிண்டரின் (expiry date’) காலக் கெடு குறித்து கேள்வி பட்டதுண்டா, உண்டெனில் கவனித்ததுண்டா?! கவனித்ததில்லையெனில் இனி கவனியுங்கள். அதைப்பற்றி தெரியாது என்றால் நான் சொல்கிறேன் கேளுங்கள். சிலிண்டரின் பிடியில் A or B or C or D-ம் அதனுடன் 2 இலக்க எண்ணும் இருக்கும். எ.கா:- D-06,A-13 இதன் பொருள் 1. A for March (First Qtr),A மார்ச் முதல் காலாண்டு் 2. B for June (Second […]

புதுத்தகம்

கதிரவன் ஸ்டோர். பள்ளி நாட்களில் மறக்க முடியாத கடை. இந்தக் கடை முதலாளி பெரும்பாலன மாதங்கள் ஈ ஓட்டிக்கொண்டிருப்பார். கடையில் ஒரே ஒரு உதவியாளர் மட்டுமே இருப்பார். ஆனால் ஜூன் மாதம் வந்துவிட்டால் அவருக்கும் அவரது கடைக்கும் தனி மவுசு வந்துவிடும். கடையில் அதிகமாக மூன்று பேரைப் போட்டிருப்பார். கடையில் கூட்டம் நிரம்பி வழியும். சொந்தபந்தம், தெரிந்தவர்களெல்லாம் இப்போதுதான் தங்களது நெருக்கத்தைக் காண்பித்துக்கொண்டிருப்பார்கள், கடை வாசலில். கதிரவன் ஸ்டோர் ஒரு புத்தகக் கடை. புத்தகக் கடை என்றதும் […]

தீபாவளி சிறப்புப் பதிவு 2009?

2009 தீபாவளி கடந்து நாட்களாகிவிட்டாலும், அன்புத் தம்பி அன்புத்தம்பி அழைத்ததற்காக இந்த தீபாவளி் தொடர் பதிவு.   1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?சிறு குறிப்பு என்ன, கொஞ்சம் பெருசாவே தெரிஞ்சுக்குங்க. இங்க, இங்க, இங்க, இங்கயெல்லாம் போய் பாத்து தெரிஞ்சுக்கலாம். (இன்னும் ரெண்டு தொடர் பதிவு எழுதினா நம்ம ஜாதகமே நெட்டுல வந்துரும் போல இருக்கு…) 2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?கல்லூரி மூன்றாம் ஆண்டில் வந்த […]

தேன்கூடு – 2009/11/11

பதிவர் சந்திப்பு தள்ளிவைப்புசென்ற வாரம் நடைபெறவிருந்த பதிவர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அநேகமாக வரும் சனிக்கிழமை இருக்கலாம். போன தடவை மழை வந்துவிட்டதே என கூரைக்குள் கூடுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தடவை அந்த இடத்திற்கே செல்ல முடியாதபடி மழை. இயற்கையை வெல்ல யாரால் முடியும். அடுத்த தடவை அவரவர் இடத்திலேயே இருந்தபடி பதிவர் சந்திப்பு நடத்துவது பற்றி யோசனை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். 🙂 இமெயில் அட்டாச்மெண்ட்இமெயிலில் அட்டாச்மெண்ட் அனுப்பவது பற்றிய சுவையான கட்டுரை ஒன்றை சமீபத்தில் […]