பிடிக்கும்… ஆனா பிடிக்காது

இந்த சுவாரஸ்யமான தொடர்பதிவிற்கு அழைத்த அண்ணன் இனியவன் என்.உலகநாதன் மற்றும் ஆதவன், ஜனா அவர்களுக்கு எனது நன்றிகள். விதிமுறைகள்: 1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஆறு பேராகவும் இருக்கலாம்3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம். உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்று இருக்கிறதா எனப் பார்த்தேன், இல்லை. அதையும் விதிமுறையில் சேர்த்திருக்கலாம். கருத்து:இவரைப் […]

ஒரு நல்லவனின் பிரார்த்தனை – சிறுகதை

எட்டு மணி வரை தூங்கிப் பழகிவிட்டேன். இனி ஐந்து மணிக்கே எழ வேண்டும். இல்லையெனில் வாழ்க்கையை ஓட்ட முடியாது. சிக்கனம் என்பதே மிகச் சிக்கனமாக இருந்த என் மனது, இப்போது தாராளமாக அதைப் பற்றி அசை போடுகிறது. இனி இரவு நேரங்களில் சுற்றுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எத்தனை நாள்தான் இந்தப் போராட்டம் எனப் பார்த்துவிடலாம். சிலர் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்கிறார்கள் என்பார்கள். எனது விசயத்தில் இனி அது சிக்கனத்தைக் குறிக்கும். வரும்காலத்தில் இதன் அர்த்தமே தலைகீழாகப் […]

எவனோ ஒருவனின் வரலாறு

எவனோ ஒருவனின் வரலாறு – கேக்கவே நல்லா இருக்குல்ல? (இல்லன்னாலும் ஆமான்னு சொல்லனும்), அதுக்குத்தான் இப்படி பேர வச்சேன். எவனோ ஒருவன் சொன்னான், எவனோ ஒருவனுடன் போனேன், எவனோ ஒருவன் வந்தான், எவனோ ஒருவன் நல்லா எழுதுறான் (ஆதவா, வேணாம், நிறுத்திக்கிறேன்)…. ஏதோ டாட் காம்னு பேரு கிடச்சுது, அத வச்சதுக்கு அப்புறம் அதுக்கு ஏத்தமாதிரி எவனோ ஒருவன்னு வச்சாச்சு. இப்ப பேரையும் மாத்தியாச்சு. இத சொல்ல ஒரு பதிவு போடனுமேன்னு நெனச்சுட்டு இருந்தப்போதான், நம்ம ஆதவன் […]

நாம் யார் ?

வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் ! வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்த நடை பிணங்கள் ! சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் ! நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் ! தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள் ! கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள்! […]

நிறம் மாறும் குணங்கள்

சிறு வயதில் பேய்ப்படம் பார்ப்பது ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும். அன்றைய தினங்களில் (3 – 6 வகுப்புகள் படிக்கும்போது) டிவி டெக் வாடகைக்கு எடுத்துப் படம் பார்க்கும் வழக்கம் ஒன்று உண்டு. ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்தால் 4-5 கேசட்டுகளை வாங்குவார்கள். அதில் ஒரு ஆங்கில ஆக்சன் படமோ பேய்ப்படமோ கட்டாயம் இருக்கும். ஆக்சன் படம் என்றால் ஜாக்கிசான், புரூஸ்லி படம். பேய்ப்படம் என்றால் இவில் டெட். அவ்வளவுதான் அப்போதைய ஹாலிவுட் அறிவு. யார் வீட்டிலாவது […]