டிவி வாங்குவது எப்படி

ஊட்டி நண்பர் ஏற்கனவே சொல்லியிருந்தார். ஊரிலிருந்து ஒரு “கலைஞர் டிவி”யைக் கொடுத்துவிட்டிருக்கிறார்கள், நண்பர் ஒருவரிடம் இருக்கிறது, சென்று வாங்கவேண்டும் என்று. இரண்டு வாரத்திற்கு முன்னால் கிளம்பலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால் முடியவில்லை. வெள்ளி இரவு மறுநாள் போகலாம் என பேசிக்கொண்டோம். மறுநாள் காலை கல்லூரியில் படித்த நண்பனின் நிச்சயதார்த்தம். அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தேன். மழை வேறு. வீட்டிற்கு கிளம்பவும் மழை விடவும் சரியாக இருந்தது. வழக்கம்போல மழைவிட்ட டிராபிக். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். அப்போதுதான் நண்பர் […]

கடந்த வெள்ளிக்கிழமை

இந்த வெள்ளியும் வழக்கம்போல விடிந்தது. முந்தைய நாள் மாலை மழை பெய்தபடியால் அன்றும் பெய்யும் என்றே தோன்றியது. அதனால் அன்று காரில் கிளம்பினேன். அதற்கு முந்தைய நாள் வியாழக்கிழமை, உடன் பணிபுரியும் தோழி ஒருவருக்குப் பிறந்தநாள் என்று மதிய உணவுக்கு வெளியில் செல்லவேண்டியது இருந்தது. மூன்று மணி நேரம் காலி. வந்த பின்னும் அங்கே இங்கே என்று சிலருக்கு உதவி செய்தபடியால், என்னுடைய வேலைகளை முடிக்க இயலவில்லை. அதனால் வெள்ளிக்கிழமை அந்த வேலைகளையும் சேர்த்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் […]

ஒரு வழியா ஊருக்குப் போனேன்

வலையுலகில் மேய்ந்துகொண்டிருக்கும்போது சில நேரங்களில் ஓரங்களில் வரும் கிளப் மகிந்த்ரா அல்லது வேறு ஏதாவது டூர் விளம்பரத்தைப் பார்ப்பேன். நமக்கு மட்டும் ஏன் இது மாதிரி சுற்றுலா செல்ல வாய்ப்பு அமைவதில்லை என எண்ணியதில்லை. இப்போதுதான் புரிகிறது. வீட்டிலிருப்பவர்கள்தான் வெளியே செல்ல திட்டமிட வசதியாய் இருக்கும். வெளியே இருக்கும் நமக்கு விடுமுறை கிடைத்தால் வீட்டிற்குச் செல்லத்தான் திட்டமிடத்தோன்றுகிறது. வீட்டைவிட்டு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன, திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன, ஆனால் நான் மாறவேயில்லை. இப்போதும் […]

அலுப்பே நெருங்காதே

முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பின், அதை ஓட்டுவது எப்படி இருந்தது? முதன் முதலில் வாங்கிய நோக்கியா 1100 தொலைத்த தூக்கங்கள் எத்தனை? முதன் முதலில் குடித்த பாதி பாட்டில் பீர், கால் டம்ளர் ரம் – இவைகள் தந்த போதை இப்போது எதிலும் கிடைக்காதது ஏன்? பள்ளி நண்பர்களுடனான முதல் சுற்றுலா, கல்லூரி நண்பர்களுடனான கடைசி சுற்றுலா ஏக்கம் தருவது ஏன்? முதல் பணியில் வெற்றிகரமாக செய்த சிறு வேலை தந்த மகிழ்ச்சி எங்கே? […]

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை பதிவு எழுத முயற்சி செய்யலாம் எனத் தோன்றியது. ஏன் எழுதுவது நின்று போனது என்று யோசித்துப் பார்க்கிறேன், சரியாகத் தெரியவில்லை, அதைப் பற்றி மேலும் யோசித்து அறிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம். திருமணத்திற்குப் பிறகு எழுதுவது சிறிது குறைந்தது. குழந்தை பிறந்த பிறகு படிப்பதும் குறைந்தது. குழந்தையைப் பற்றி சொல்லிக்கொண்டெ போகலாம். வெர்னிகா. ஒரு குழந்தை பிறந்தது முதல், வளர்வதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. […]

(2) வீட்டு புரோக்கர்

வீடு தேடுதல் (1) ன் தொடர்ச்சி… அடுத்து புரோக்கர்கள். இவர்களை நான் விரும்புவதே இல்லை. நான் பார்த்த பல புரோக்கர்களில் இருவரைத்தான் மனிதர்களாகப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இவர்கள் வாயைத் திறந்தால் வார்த்தைக்குப் பதிலாக பொய்தான் வந்து விழும். அதிலும் ஒரு மாத வாடகையை கமிசனாகக் கேட்பார்கள். அதற்குத் தகுந்த உழைப்பு இருக்கிறதா என்றால், இல்லை. மனதிற்குப் பிடித்தமான சரியான வீட்டைக் காண்பித்து, நல்ல விலைக்கு முடித்துக் கொடுத்தால் இவர்கள் கேட்கும் விலை நியாயமானதுதான். ஆனால் இவர்கள் செய்வதோ […]