(2) வீட்டு புரோக்கர்

வீடு தேடுதல் (1) ன் தொடர்ச்சி… அடுத்து புரோக்கர்கள். இவர்களை நான் விரும்புவதே இல்லை. நான் பார்த்த பல புரோக்கர்களில் இருவரைத்தான் மனிதர்களாகப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இவர்கள் வாயைத் திறந்தால் வார்த்தைக்குப் பதிலாக பொய்தான் வந்து விழும். அதிலும் ஒரு மாத வாடகையை கமிசனாகக் கேட்பார்கள். அதற்குத் தகுந்த உழைப்பு இருக்கிறதா என்றால், இல்லை. மனதிற்குப் பிடித்தமான சரியான வீட்டைக் காண்பித்து, நல்ல விலைக்கு முடித்துக் கொடுத்தால் இவர்கள் கேட்கும் விலை நியாயமானதுதான். ஆனால் இவர்கள் செய்வதோ […]

வீடு தேடுதல் (1)

ஏதோ ஒரு காரணத்துக்காக வீடு மாத்தனும்னு முடிவு பண்ணிருவோம். அடுத்து வீடு தேடனும். எப்படியெல்லாம் தேடலாம்? பேப்பர் விளம்பரம், இணையம், தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தல் மற்றும் புரோக்கர்கள். வழக்கமான பேப்பர்களில் வாடகை வீடு பற்றிய விளம்பரம் குறைவாகத்தான் இருக்கும். இதுபோன்ற வேலைகளுக்கு ஃப்ரீ ஆட்ஸ்தான்(Free Ads) சரி. சென்னையில் வியாழன்தோறும் கடைகளில் கிடைக்கும். இப்போது இங்கும் புரோக்கர்கள் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். விளம்பரம் பார்த்து போன் செய்தால் பத்துக்கு எட்டு புரோக்கர்கள் கொடுத்த விளம்பரமாகத்தான் இருக்கின்றன. அதனாலென்ன என்கிறீர்களா? […]