எக்மோர் இரயில் நிலையமும் ஒரு பயண அனுபவமும்

முதன்முறையாக எக்மோர் இரயில் நிலையம் சென்றிருந்தபோது பிரமித்துப் போனேன், எவ்வளவு இரயில்கள், அத்தனையும் சரியாக வருகின்றன போகின்றன, அதற்கான அறிவிப்புகளும் சரியாக வருகின்றன என்று. அதன்பின் பல தடவைகள் சென்றிருந்தபோதும் ஏதும் குறைபாடு கண்டதில்லை. ஆனால் நேற்று,மும்பையிலிருந்து வந்த தங்கமணியை அழைத்துவரப் போயிருந்தேன். இரவு 7.45க்கு வரவேண்டிய இரயில். அட்டவணையில் அதே நேரத்திற்கு வரும் என்றிருந்தது. ஆனால் நடைமேடை எண் இல்லை. ஒருவழியாக விசாரித்து, 7வது நடைமேடையில் வரும் என்று அறிந்து அங்கு சென்று நின்றேன் 7.30 […]

அவதிப்படும் 100 அடி ரோடு

(படம் beta.thehindu.com லிருந்து எடுக்கபட்டது) சென்னையில் வாகன நெரிசலைச் குறைக்க மேம்பாலங்கள் ஆங்காங்கே முளைத்துக்கொண்டே இருக்கின்றன. நல்ல விசயம்தான். ஆனால், அது கட்டி முடிக்கப்படும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியில் சில பாதைகள் மறைக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அதனால் ஏற்படும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் சொல்லமுடியாத அயற்சியைத் தருகிறது. என்ன செய்ய? பல காலத்து நன்மைக்காக சில காலம் கஷ்டம் அனுபவிப்பதில் குறையேதுமில்லை. ஆனால் இதுபோன்று ஏற்படும் கூடுதல் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்துத் […]

சந்தர்ப்பவாதக் கொள்ளைகள் – 2

நண்பர் ஒருவர் தனது அலுவலகத்திற்குப் புதிதாக இணைய இணைப்பு வாங்க எண்ணினார். ஏற்கனவெ அவரது வீட்டில் 512kbps unlimited வைத்திருக்கிறார், ஏர்டெல். அதன்மீது அவருக்குத் தனி மதிப்பு உண்டு, எனக்கும்தான். அதன் சேவைதான் அவரறிந்தவரை மிகவும் சிறந்ததாம். எப்பொதும் முதல் தேர்வு அதுதானாம். வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டார். அதைப் பற்றிப் பேசிய பிறகு, சிறிது மற்ற விசயங்களைப் பற்றியும் பேசினார். அப்படியே விசாரித்துக்கொண்டிருக்கையில் அவர் கேள்விப்பட்ட விசயம் ஒன்றால் ஆடிப்போய்விட்டார். 512kbps unlimitedன் மாத […]

கேரளாக்காரர்கள் கேனையர்களா?

13/9/09 அன்று தொலைகாட்சியின் சானல்களை புரட்டிக்கொண்டிருந்த போது ஏஷியா நெட் சானல் வந்ததும் நமது குப்பைத்தொட்டி – ஆதவன் சொன்னது போல் சுவராசியமாக ஏதாவது கிடைக்குமா என்று பார்தேன் நான் பார்த்தது மதிய நேரம் என்பதால் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது படத்தின் பெயர் ”பாண்டிப்படை” படத்தின் பெயரில் என்ன இருக்கிறது என்கிறீர்களா. 400 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் நாடாகவே இருந்து,தற்போதும் நமது உதவியால் வயிற்றைக் கழுவும் கேரள நாட்டவர் அழைப்பது ”பாண்டிகள்” என்று ஆனால் அவர்களுக்கு இங்கு […]

நட்பல்ல நயவஞ்சகம்

நட்பிற்காக எதையும் இழக்கலாம் எதற்காகவும் நட்பை இழக்கலாகாது. நல்ல வரிகள், இதை கோபிசெட்டிப்பாளையத்தில் ஒரு ஆட்டோவின் பின்புறத்திலிருந்து சுட்டது. என்னுடைய சுய, மற்றும் நண்பர்களின் சில நட்பு அனுபவங்களால் மேற்கண்ட வரிகளுக்கு தொடர்ச்சியாக நான் கிறுக்கியது நட்பிற்காக எதையும் இழக்கலாம் எதற்காகவும் நட்பை இழக்கலாகாது ஆனால்.. நீ இழப்பதற்காகவே ஒரு நட்பு இருந்தால் அந்த நட்பை இழப்பது நலம். ஏனென்றால்.. அது நட்பல்ல நயவஞ்சகம். பி.கு.:- 1996 ஜனவரி மாதம் கிறுக்கிய கிறுக்கல் இது. தற்போதும் சில […]

சந்தர்ப்பவாதக் கொள்ளைகள் – 1

இது சீசன் டைம் ‘என்னடா மாப்ள, தீபாவளிக்கு டிக்கட் போட்டியா?’ ‘இன்னும் இல்லடா’ ‘என்னடா நீயி, இன்னும் ஒரு வாரந்தான் இருக்கு. இப்படி டிக்கட் எடுக்காம இருக்க? ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டல்ல?’ ‘அதெல்லாம் எடுத்தாச்சு. டிக்கட்டுதான் கெடக்கல. ட்ரெயின் ரெசர்வேசன் ஓபன் பண்ண அஞ்சு நிமிசத்துலயே முடிஞ்சு போச்சாம். இப்ப வெயிட்டிங் லிஸ்ட் பாத்தா 400, 500னு எகுறுது.’ ‘பஸ் என்னடா ஆச்சு?’ ‘அத ஏண்டா கேக்குற… போன தடவ மாதிரி விட்டுறக் கூடாதுன்னு, ஒரு மாசத்துக்கு […]