பாதகம்

நண்பனே! உன் தங்கையல்லாத நங்கையை – நீ தங்கையென அழைக்கும் முன் சிறிது யோசி உன்னால் அண்ணனாக மட்டும் இருக்கமுடியுமா என்பதை. ஏனென்று தெரியுமா நண்பனே?! நண்பி காதலியாக மாறினால் பாதகமில்லை, தங்கை காதலியாக மாறினால்- அது போல் பாதகம் வேறில்லை. ஆகையால் நட்புடன் பழகு, நல்லெண்ணத்துடன் பழகு. பி.கு:- எனது பாலிடெக்னிக் நண்பன் ஒருவன் சில அழகான பெண்களை கண்டவுடன் நீ என் சிஸ்டர் மாதிரியே இருக்க எனக்கூறி பழகி சிறிது நாட்கள் கழிந்து அவள்தான் […]

யூனிவர்சலில் ஒரு ஏமாளி

கடந்த ஒரு வருடத்தில் நான்கு முறை யூனிவர்சலில் மொபைல் வாங்கியிருக்கிறேன். பெரிய கடை, மொத்த விற்பனையாளர், அங்குதான் விலை குறைவாய் இருக்கும் என்றிருந்த மூடநம்பிக்கை. முதல்முறை, புரசைவாககத்தில் இருக்கும் கிளை. இணையத்திலேயே விபரங்கள் எல்லாம் பார்த்து, ஒரு நோக்கியா மொபைல் முடிவு செய்தாயிற்று. காண்பித்தார்கள்…’என்ன விலை?’’9000 ரூபாய்.’’நெட்ல 8000 தான போட்டிருந்தது?’’அது டாக்ஸ் இல்லாம சார்.’இவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என வாங்கியாயிற்று. (பின்புதான் தெரிந்தது டாக்ஸ் 4%தான் என்று) இரண்டாம் முறை, தீபாவளி சிறப்பு விற்பனை. […]

குரங்கு அருவிக்கு ஒரு குட்டி விசிட்………

ஜூலை 29-ம் தேதி கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு நானும் என் மனைவியும் மற்றும் 2 தம்பிகளுமாக இரண்டு இரண்டுசக்கர வாகனத்தில் சென்றோம் .சென்றது தம்பிகளில் ஒருவனுக்கு மண்டையில் உள்ள மசாலா பாக்கெட் சேதமடைந்துள்ளதா என்பதை CT SCAN செய்து பார்ப்பதற்காக. அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் சந்தோஷத்தை கொண்டாட என்ன செய்யலாம் என யோசித்தோம். மனைவி கூட வந்ததால் டாஸ்மாக் செல்ல முடியவில்லை. எனவே பொள்ளாச்சியிருந்து வால்பாறை செல்லும் வழியில் 30-வது கிலோமீட்டரில் உள்ள […]