பாதகம்

Published by: 16

நண்பனே! உன்
தங்கையல்லாத நங்கையை – நீ

தங்கையென அழைக்கும் முன்

சிறிது யோசி

உன்னால்

அண்ணனாக மட்டும்

இருக்கமுடியுமா என்பதை.
ஏனென்று தெரியுமா நண்பனே?!
நண்பி காதலியாக மாறினால் பாதகமில்லை,

தங்கை காதலியாக மாறினால்- அது போல்

பாதகம் வேறில்லை.
ஆகையால்
நட்புடன் பழகு,
நல்லெண்ணத்துடன் பழகு.
பி.கு:-
எனது பாலிடெக்னிக் நண்பன் ஒருவன் சில அழகான பெண்களை கண்டவுடன் நீ என் சிஸ்டர் மாதிரியே இருக்க எனக்கூறி பழகி சிறிது நாட்கள் கழிந்து அவள்தான் என் காதலி என்று கூறுவான். அவனுக்கு நான் கிறுக்கிய ஆட்டோகிராஃப் (1997)
—கி.கி
Thank you for reading. 🙂

16 comments

  1. க.பாலாசி

    //நண்பி காதலியாக மாறினால் பாதகமில்லை,
    தங்கை காதலியாக மாறினால்- அது போல்
    பாதகம் வேறில்லை.//

    மிகவும் அழகான, சிந்திக்கதக்க வரிகள் அன்பரே…

    தொடருங்கள் உங்கள் எழுத்துலக பயணத்தை…வாழ்த்துக்கள்.

  2. Unknown

    பெரிய்ய ஆட்டோகிராப் புயலா இருந்திருப்பீங்க ​போல.
    அதைவிட பாலிடெக்னிக்லேயே கவி டெர்ரரா வேற இருந்திருப்பீங்க போல..

  3. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    //க. பாலாஜி said…
    //நண்பி காதலியாக மாறினால் பாதகமில்லை,
    தங்கை காதலியாக மாறினால்- அது போல்
    பாதகம் வேறில்லை.//

    மிகவும் அழகான, சிந்திக்கதக்க வரிகள் அன்பரே…

    தொடருங்கள் உங்கள் எழுத்துலக பயணத்தை…வாழ்த்துக்கள்.\

    உங்கள் ஊக்கங்கள் இருக்கும் வரை தொடரும் இந்த கிறுக்கல் பயணம்

  4. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    //ஜெகநாதன் said…
    பெரிய்ய ஆட்டோகிராப் புயலா இருந்திருப்பீங்க ​போல.\

    அப்படீன்னு சொல்ல முடியாது.

    //அதைவிட பாலிடெக்னிக்லேயே கவி டெர்ரரா வேற இருந்திருப்பீங்க போல..\

    ஹி ஹி அப்படியெல்லாம் இல்லை

Leave a Reply