கேரளாக்காரர்கள் கேனையர்களா?

Published by: 23

13/9/09 அன்று தொலைகாட்சியின் சானல்களை புரட்டிக்கொண்டிருந்த போது ஏஷியா நெட் சானல் வந்ததும் நமது குப்பைத்தொட்டி – ஆதவன் சொன்னது போல் சுவராசியமாக ஏதாவது கிடைக்குமா என்று பார்தேன் நான் பார்த்தது மதிய நேரம் என்பதால் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது படத்தின் பெயர் ”பாண்டிப்படை” படத்தின் பெயரில் என்ன இருக்கிறது என்கிறீர்களா. 400 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் நாடாகவே இருந்து,தற்போதும் நமது உதவியால் வயிற்றைக் கழுவும் கேரள நாட்டவர் அழைப்பது ”பாண்டிகள்” என்று ஆனால் அவர்களுக்கு இங்கு சிவப்புக் கம்பள வரவேற்பு.

அந்த திரைப்படத்தில் ஒரு காட்சி தமிழ் நாட்டில் உள்ள ஒரு இடத்தில் 30 ஏக்கர் நிலத்தை ஒருவர் விற்க தமிழ்நாடு முழுவதிலிருந்தும்,மற்றும் கர்நாடகா,ஆந்திராவிலிருந்தும் ஆள் கொண்டு வருவார்.ஆனால் இங்குள்ள ஒரு தாதா அவர்களையெல்லாம் கொன்று விடுவார். பின் அந்த இடத்தின் சொந்தக்காரர் தன் வேலையாளிடம் இனி கேரளாவிலிருந்துதான் ஆள் கொண்டு வர வேண்டும் என்பார்.உடனே வேலையாள் சொல்வான் கேரளாக்காரர்கள் புத்திசாலிகள் அவர்கள் வர மாட்டார்கள் என புகழ்வார். அந்த புகழ்ச்சியில் தப்பில்லை எனதான் நான் நினைக்கிறேன்.கேரளக்காரர்கள் புத்திசாலிகள் தான் உதாரணத்துக்கு சில.

நான் கடந்த மாதம் நண்பன் ஒருவனுடைய திருமணத்திற்க்கு எர்ணாக்குளத்திற்கு இரயிலில் சென்றுகொண்டிருந்தேன்.பாலக்காடு தாண்டி வடகஞ்சேரி எனும் இடத்திற்க்கு முன்பாக இரயில் என்ன காரணத்தினாலோ வேகம் குறைந்து நின்றது.அப்போது வெளியே 20-25 போலீஸ்காரர்கள் சேர்ந்து 10-15 பேரை பிடித்து வைத்திருந்தார்கள் வெளியே நின்ற ஒருவரிடம் என்ன என்று விசாரித்ததற்கு சாக்கு மூட்டையில் மணல் அள்ளி செல்கிறார்கள் அதனால் போலீஸை வரவைத்து பிடித்தோம் என்றார்கள்.ஆம் அவர்கள் மண்வளத்தை காத்தால் தான் நீர் வளம் நிலைக்கும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

நம் தமிழ் நாட்டிலோ லாரி,லாரியாக அள்ளினாலும் கேட்க ஆளில்லை.அதையும் மீறி கேட்டால் அடி பொடி அரசியல் வாதியிலிருந்து ஆட்சியில் இருப்பவர்கள் வரை நம்மை தட்டுவார்கள்.இப்படி திருடி நம் தமிழ் நாட்டிலேயே விற்றால் பரவாயில்லை,இதனை இங்கிருந்து ஆறுகள் நிறைந்த கேரளாவுக்கே கடத்தி விற்ப்பார்கள்.

அடுத்து ரேஷன் அரிசி நம் தமிழ்நாட்டில் முதலமைச்சர் 2 ரூபாய்க்கும்,1 ரூபாய்க்கும் அரிசி வழங்கினால் நம்மை விட சந்தோஷிப்பவர்கள் கேரளத்தவரே.இங்கு அரிசி விலை குறைந்தால் அங்கும் விலை குறையுமோ கட்ததலும் அதிகரிக்கும்.இதற்கு முதல் முக்கிய காரணம்,நம் மக்களோ விலை குறைவாக கிடைக்கும் அரிசி என்பதால் இந்த அரிசியை சமைத்தால் எங்க வீட்டு நாய் கூட சாப்பிடல என்று பெருமை பேசுபவர்களாகவே இருக்கிறார்கள் எனவே கேரள நாட்டாவர் புத்திசாலிகளே.

அடுத்து தண்ணி பிரச்சனை,நம் தமிழ் நாட்டில் விவசாயம் நன்றாக நடந்தால்தான் அவர்களுக்கு அரிசி முதலான தானியங்களும்,காய் கறிகளும் கிடைக்கும்.ஆனால் பெரியார் அணையிலிருந்து கொள்ளளவை உயர்த்த அனுமதிக்க மாட்டார்கள்.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் வந்துவிடும் என்று.அதெல்லாம் நமக்கு உறைக்காது கர்நாடகாவில் நிறைய தமிழர்கள் வாழ்வதால் நாமும் அதிகம் முரண்டு பண்ணமுடியாது என நினைத்து கொண்டாலும்,கேரள நாட்டவர் 20% பேர் தமிழ் நாட்டில் தான் வேலை செய்கிறார்கள்.65% மாணவர் தொழில்கல்வி பயில தமிழ் நாட்டிற்க்குதான் வருகிறார்கள்.இருந்தாலும் நாம் இன்னும் பல்லிளித்துக் கொண்டு சுயலாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாக நம்மை நாமே சுரண்டி அவர்களுக்களிக்கிறோம்.எனவே அவர்களின் வளம் கெடாமல், நம் வளத்தால் வாழும் அவர்கள் புத்திசாலிகளே.

—கி.கி

(இன்னும் வரும் இதன் தொடர்ச்சி)

Thank you for reading. 🙂

23 comments

  1. basheer

    செருப்பால அடிச்சாலும் செருப்பு புதுசா இருக்கான்னு பாக்கறது நம்ம நாய்புத்தி.கொப்பரை தேங்காய்க்கு சரியான விலை கெடக்கலேன்னு டூவீலருக்கு லுப்ரிகேசன் ஆயிலா யூஸ் பண்ண புத்திசாலிங்க.அவனுங்க மூத்திரத்த குடிச்சாலும் நமக்கு புத்தி வரப்போறதில்ல.

  2. Jay

    ஏமாறுவபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கவே செய்வான். இதுதான் தமிழன் கேனைப் பயலானதுக்கு யார்தான் காரணமோ??

  3. நான்

    இன்று நான் எழுத மறந்த கதை..

    மிக நன்று….தலைப்பு இப்படி வைக்காலாம்

    தமிழர்கள் எப்போதும் நண்டுகள்…முட்டாள்கள்

  4. Unknown

    அநாவசியமாக இன்னொரு மாநிலத்தவரை புண்படுத்துவது ​போல எழுதணுமா கிகி? நம்மை நாமே சுயவிமர்சனம் என்ற ​பெயரில் குரூரமாக ​கேவலப்படுத்திக் ​கொள்வது கூட பரவாயில்லை எனலாம். ஆனால் அதற்கு அடுத்த மாநிலத்தவரை வம்புக்கு இழுக்கணுமா என்ன? யாராவது ​கேரளாக்காரரைக் ​கேட்டால் தமிழ்நாட்டில் மலையாளிகளை எப்படி கேவலப்படுத்துகிறார்கள் என்று அவர் தரப்பு நியாயத்தைச் சொல்லுவார். தாராளமா ……. இருந்தா கேரளான்னு நினைச்சுக்கோ-ன்னு பாடித்திரிஞ்சவங்கதானே நாம?? இதில் கேரள அம்மைகளும், ​சேச்சிகளும் ​சேர்த்திதானே? பிற ​மொழி​மேல் எப்போதும் உயர்வான மதிப்பு ​வைத்திருக்கும் சமூகம் / ​மொழி நிச்சயம் ​செழித்திருக்கும் என்று நம்புகிறேன். வர்த்தகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அது நமக்கு பயன்படும். எப்போதும் அங்கிங்கு என்று சில உரசல்கள் இருக்கத்தான் செய்யும். அதை கவனமாக தவிர்ப்பதில்தான் நம் பக்குவம் வெளிப்படும்.

  5. க.பாலாசி

    நல்ல பகிர்வு….உங்களின் பதிவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன. எங்கு சென்றாலும் இழிவுபடுத்தபடுகிறவன் லிஸ்டில் முதலில் தமிழன்தான் இருப்பான்..அது எப்படின்னே தெரியல..நெத்தியிலையே எழுதியிருக்குமான்னும் தெரியல… கேரளான்னு இல்ல ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலத்திலும் நம் தமிழர்கள் தான் தரம் குறைந்து போகிறார்கள்…அடிப்படையில் சில அரசியல் காரணங்களும் இருக்கிறது…

  6. Beski

    கருத்துரை விட்டுச்சென்ற அனைவருக்கும் நன்றி.
    தற்போது கிகி வெளியூர் சென்றிருக்கிறார், வந்தபின் பதிலுரை அளிப்பார்.
    -ஏனாஓனா.

  7. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    //Mayooresan said…
    ஏமாறுவபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கவே செய்வான். இதுதான் தமிழன் கேனைப் பயலானதுக்கு யார்தான் காரணமோ??\

    வருகைக்கு நன்றி,

    தமிழன் கேனைப் பயலானதுக்கு தமிழனே காரணம்

  8. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    // M.S.E.R.K. said…
    முட்டாள்களெல்லாம் கெட்டவர்கள் இல்லை…..புத்திசாலிகள் எல்லாம் நல்லவர்கள் இல்லை ! தற்போதைய நிலமை ஒருநாள் மாறும் என்று நம்புவோம்.\

    வருகைக்கு நன்றி M.S.E.R.K,

    நிலமை ஒருநாள் மாறினால் நலமே

  9. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    ஜெகநாதன் =உலக நாயகன் அவர்களே உங்களுக்கு ஒரு பாடலில் வந்த ஒரு வரிதனே தெரியும், மலையள படங்களில் தமிழர்ளை எப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறார்கள் என தெரியுமா?

    //எப்போதும் அங்கிங்கு என்று சில உரசல்கள் இருக்கத்தான் செய்யும். அதை கவனமாக தவிர்ப்பதில்தான் நம் பக்குவம் வெளிப்படும்\

    அப்படியா எனக்கு தெரியாம போச்சே.

  10. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    //கேரளான்னு இல்ல ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலத்திலும் நம் தமிழர்கள் தான் தரம் குறைந்து போகிறார்கள்…அடிப்படையில் சில அரசியல் காரணங்களும் இருக்கிறது…
    \

    அரசியலைவிட தனி மனித விழிப்புணர்வு இல்லாமையே காரணம்

  11. CM ரகு

    தமிழன் என்றுமே ஏமாளி தான் …
    நமக்குள் ஒற்றுமை இல்லாதவரை…
    பொறாமை என்னும் ஆமை தொலைந்தால்தான் தமிழன் ஏமாறுவது/ஏமாற்றப்படுவது நிற்கும் ….
    உலகத்தில் எங்கு பார்த்தாலும்,
    ஒரு தமிழனின் விழ்ச்சியின் காரணமாய் சக இனத்தவனே இருப்பான்…
    தேவை மனநிலையில் மாற்றம்…
    விரைவில் வரும் என்று எதிர்பார்ப்போம்….
    நன்றியுடன்..
    ரகு

Leave a Reply