ஒரு வழியா ஊருக்குப் போனேன்

வலையுலகில் மேய்ந்துகொண்டிருக்கும்போது சில நேரங்களில் ஓரங்களில் வரும் கிளப் மகிந்த்ரா அல்லது வேறு ஏதாவது டூர் விளம்பரத்தைப் பார்ப்பேன். நமக்கு மட்டும் ஏன் இது மாதிரி சுற்றுலா செல்ல வாய்ப்பு அமைவதில்லை என எண்ணியதில்லை. இப்போதுதான் புரிகிறது. வீட்டிலிருப்பவர்கள்தான் வெளியே செல்ல திட்டமிட வசதியாய் இருக்கும். வெளியே இருக்கும் நமக்கு விடுமுறை கிடைத்தால் வீட்டிற்குச் செல்லத்தான் திட்டமிடத்தோன்றுகிறது. வீட்டைவிட்டு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன, திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன, ஆனால் நான் மாறவேயில்லை. இப்போதும் […]

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை பதிவு எழுத முயற்சி செய்யலாம் எனத் தோன்றியது. ஏன் எழுதுவது நின்று போனது என்று யோசித்துப் பார்க்கிறேன், சரியாகத் தெரியவில்லை, அதைப் பற்றி மேலும் யோசித்து அறிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம். திருமணத்திற்குப் பிறகு எழுதுவது சிறிது குறைந்தது. குழந்தை பிறந்த பிறகு படிப்பதும் குறைந்தது. குழந்தையைப் பற்றி சொல்லிக்கொண்டெ போகலாம். வெர்னிகா. ஒரு குழந்தை பிறந்தது முதல், வளர்வதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. […]

குரங்கு அருவிக்கு ஒரு குட்டி விசிட்………

ஜூலை 29-ம் தேதி கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு நானும் என் மனைவியும் மற்றும் 2 தம்பிகளுமாக இரண்டு இரண்டுசக்கர வாகனத்தில் சென்றோம் .சென்றது தம்பிகளில் ஒருவனுக்கு மண்டையில் உள்ள மசாலா பாக்கெட் சேதமடைந்துள்ளதா என்பதை CT SCAN செய்து பார்ப்பதற்காக. அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் சந்தோஷத்தை கொண்டாட என்ன செய்யலாம் என யோசித்தோம். மனைவி கூட வந்ததால் டாஸ்மாக் செல்ல முடியவில்லை. எனவே பொள்ளாச்சியிருந்து வால்பாறை செல்லும் வழியில் 30-வது கிலோமீட்டரில் உள்ள […]