எங்கே இருக்கின்றாய்

Published by: 17

என்னவளே

நெற்றிக்கு பொட்டு வைத்தாய்;

நிலவையே நீ தொட்டு வைத்தாய்;

என்னை மட்டும் ஏன் விட்டு வைத்தாய்?

கண்ணுக்கு மை தீட்டுகின்றாய்;

கண்ணானவன் எனை மட்டும் ஏன் வாட்டுகின்றாய்?

உன் உதடுகள் மின்னுதடி சாயத்தில்;

என் உள்ளமன்றோ உருகுதடி காயத்தில்;

ஆயிரம் கவிதைகள் கிடைத்துவிட்ட ஆதாயத்தில்;

பல்லாயிரம் கற்பனையில் மிதக்கின்றேன் ஆகாயத்தில்;

ஆகாயத்தில் கார்மேகங்கள்

சூழ்ந்த்தால் ஆலாபனை பாடுகிறேன் வாடி

முகத்தில் கருரோமங்கள்

சூழ்வதால் ஆகிவிடுகின்றன தாடி

காதலை தேடிப்போனேன் கவி பாடி

காதலி உன் பெயரை உரைக்குதே என் நாடி,

சொன்னதை மறந்துவிட்டு போனாய் நீ ஓடி,

சுகராகம் பாடுகின்றாய் யாரோடோ கூடி,

வானத்துக்கு பூமியின் மீது காதல்,

வஞ்சி உனக்கு என்னோடு மோதல்,

ஏனோ என் விழி கண்ணீரால் நனையுதடி,

எப்படி பொறுக்கின்றாய்

எங்கே இருக்கின்றாய்?

N B: என் நண்பனின் வருத்தம்

என் கவிதை வழியாய்(95-ஆம் ஆண்டு கிறுக்கியது)

—கி.கி

Thank you for reading. 🙂

17 comments

  1. ☀நான் ஆதவன்☀

    கி.கி அண்ணே ஒரு நிமிசம் ஷாக் ஆயிட்டேன். எங்க நம்ம பெஸ்கி தான் இந்த கவிதையெல்லாம் எழுதிட்டானோன்னு….. 🙂

    நல்லாயிருக்குண்ணே!

  2. Beski

    நல்லாயிருக்கு கிகி.

    // ☀நான் ஆதவன்☀ said…
    கி.கி அண்ணே ஒரு நிமிசம் ஷாக் ஆயிட்டேன். எங்க நம்ம பெஸ்கி தான் இந்த கவிதையெல்லாம் எழுதிட்டானோன்னு….. :)//

    யோவ் என்ன நக்கலா? ஒரு கவித எழுதி அனுப்பி வைக்கவா?

  3. Jana

    அடடா…உங்கள் "பழைய பனையோலைகள்கூட" நல்லா இருக்குதே. கலக்குங்க நண்பரே..

  4. அடலேறு

    //முகத்தில் கருரோமங்கள்
    சூழ்வதால் ஆகிவிடுகின்றன தாடி//
    அதி உன்னதமான கருத்து. அந்த நண்பர் யாரு?

  5. ஊடகன்

    // ஆயிரம் கவிதைகள் கிடைத்துவிட்ட ஆதாயத்தில்;

    பல்லாயிரம் கற்பனையில் மிதக்கின்றேன் ஆகாயத்தில்; //

    எதுகை மோனையோடு எழுத பட்டதால் சிறப்பாக உள்ளது…..

  6. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    // ☀நான் ஆதவன்☀ said…
    கி.கி அண்ணே ஒரு நிமிசம் ஷாக் ஆயிட்டேன். எங்க நம்ம பெஸ்கி தான் இந்த கவிதையெல்லாம் எழுதிட்டானோன்னு….. :)\

    குறைவாக மதிப்பிட வேண்டாம், என் தம்பி ஒரு ”கொலைக்கவிஞன்” mind it

    //நல்லாயிருக்குண்ணே!\

    நன்றி ஆதவன்

  7. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    //அடலேறு said…\

    என் பதிவிற்கு உங்களது முதல் வருகைக்கு நன்றி

    //முகத்தில் கருரோமங்கள்
    சூழ்வதால் ஆகிவிடுகின்றன தாடி//
    அதி உன்னதமான கருத்து. அந்த நண்பர் யாரு?\

    என் கல்லூரி நண்பன்.

  8. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    ஊடகன் said…
    // ஆயிரம் கவிதைகள் கிடைத்துவிட்ட ஆதாயத்தில்;

    பல்லாயிரம் கற்பனையில் மிதக்கின்றேன் ஆகாயத்தில்; //

    எதுகை மோனையோடு எழுத பட்டதால் சிறப்பாக உள்ளது….\

    முதல் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

Leave a Reply