கொலைகள்

Published by: 18

கொல் என்றேன்
கொல்லென்று சிரித்தாள்
கொல்லாமல் கொன்றாள்
கொன்றேயிருக்கலாம் அவளென்னை
கொன்றால் பாவமாகுமோ?
கொல்லாமல் கொன்றால்?
கொலைகூடக் காதலாகுமோ?
கொன்றிருக்கலாம் அவளை
கொல்வதற்கு முந்திவிட்டாள்
கொன்றிருந்தால் சிறையறையில்
கொல்லப்பட்டதால் மணவறையில்

-ஏனாஓனா.

Thank you for reading. 🙂

18 comments

  1. Beski

    //"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said…
    பெஸ்கி,
    நல்லாயிருக்கு, தொடர்ந்து எழுதுங்க.
    //

    தங்களது ஊக்கத்திற்கும், அறிவுரைகளுக்கும் நன்றி சார். அவை எனக்கு இன்னும் தேவைப்படும்.

  2. Beski

    நன்றி கல்யாணங்களே.

    நன்றி பாலாஜி, வசந்த்.
    பின்னூட்டத்துல கொல்றீங்களே யப்பா!

  3. Cable சங்கர்

    கொன்னுட்டே என்று சொல்வதற்கு ஆசைதான்.. நான் எழுதினதே கவிதையான்னு கேள்வி கேட்டு விட்டிருக்கேன்.. இருந்தாலும் நல்லாத்தன் இருக்கு..

  4. Beski

    //☀நான் ஆதவன்☀ said…
    அவ்வ்வ்வ் சரிதான் போய்யா//
    என்னது?
    //ஆனா நல்லாயிருக்கு… கண்டினியூ பண்ணு//
    அதான பாத்தேன்… கொல்லப் பண்ணிடுவேன்.

    //Cable Sankar said…
    கொன்னுட்டே என்று சொல்வதற்கு ஆசைதான்.. நான் எழுதினதே கவிதையான்னு கேள்வி கேட்டு விட்டிருக்கேன்.. இருந்தாலும் நல்லாத்தன் இருக்கு..//
    நன்றி கேபிள்ஜி. நாமளும் ஒரு நாள் கவிஞர் ஆய்ருவோம், முயற்சி உடையார்…

  5. Beski

    //வால்பையன் said…
    இதுக்கு கொலைவெறி கவிதைன்னு பேர் வைக்கலாமா!?//

    நான் எழுதுறது கவிதைனு ஏத்துக்குற வரைக்கும், எழுதுறது எல்லாமே கொலைவெறிக் கவிதைகள்தான்.
    வேணும்னா லேபில கொலைவெறிக் கவிதைகள்னு மாத்திக்கவா?

  6. Beski

    //குறை ஒன்றும் இல்லை !!! said…
    கொன்னுட்டூங்க ….நான் பொதுவா சொன்னேன் .. கவிதைய சொன்னேன்னு தப்பா எடுத்துக்காதீங்க..//

    கொலை பற்றிய கவிதை
    கவிதையைக் கொல்லவில்லையாம்
    கொலைவெறியில் கவுண்டர்

    இப்படியெல்லாம் பின்னூட்டத்துல நக்கல் பண்ணா இப்படித்தான் திரும்பக் கொல்லுவேன்.
    அய்யய்யோ, கவிதையைச் சொல்லவில்லை, பொதுவாகச் சொன்னேன்.

  7. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    ஏய் அண்ணைக்கு நடு ராத்திரி 2.30 மணிக்கு எழும்பி எழுதினது இதுதானா , நல்லாயிருக்குன்னு நினைக்கிறேன்.

    தம்பி இந்தப்பிடி பட்டத்தை

    “கொலைக் கவிஞன்”

Leave a Reply