காலடி தடங்கள்

Published by: 16

அதே மாலை நேரம்,

அதே காற்று,
அதே கடல் அலை,
அதே கால் தடங்கள் மணலில்-
என் காதலியினுடையது.


அன்று தொலைவில் கண்ட தடங்கள்
நேற்று அருகில் வந்த தடங்கள்
இன்று என்னை விட்டுச்சென்ற தடங்கள்.
அன்று
உன் காலடி தடங்களாலேயே
உன் வருகையை அறிந்தவன் நான்.
இன்று
பின்தொடர்கிறேன் உன் தடங்களை,
உனக்குத்தெரியாமல்.
சில நாட்கள் காணவில்லை உன் கால் தடங்கள்,-பின்
கண்டடைந்தேன் உன் கால் தடங்களை-நீ
சரணடைந்தவனின் கால் தடத்தோடு.


ஆண்டுகள் பல உருண்டோடின,
மீண்டும் கண்டேன் உன் கால்தடத்தை,
இரு ஜோடி தடத்தின் அருகே
ஒரு ஜோடி குட்டி தடத்தோடு.

..


நெருங்கினேன் அந்த கால் தடங்களை ஆர்வத்தோடு,

நொறுங்கினேன் குட்டி கால்தடத்தை நீ அழைத்தபோது
நான் உன்னை அழைத்து வந்த பெயரால்?!!
இனி உன் தடங்களை தொடரமாட்டேன் துரோகியே!!!!
பி.கு:-
ஆம் பெற்றோருக்காக என்னைவிட்டுச்சென்று,நான் அவளை அழைத்து வந்த பெயரை தன்மகளுக்கு வைத்து ,என் நினைவில் கணவனுடன் வாழும் அவள் ஒரு
துரோகியே
மீண்டும் பி.கு:-
இது என் அனுபவக் கவிதை அல்ல
—கி.கி



Thank you for reading. 🙂

16 comments

  1. jothig

    கவிதை படம் எல்லாமே சரி தான். சிலிர்ப்பாகத்தான் இருக்கிறது. என்னுடைய ஒரே ஒரு கேள்வி உங்களிடம். இது வரையில் உங்கள் வாழ்க்கையில் காதல் செய்து திருமணம் செய்து வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் பணம் இருக்கிறதோ இல்லையோ தொடக்கத்தில் இருவரிடத்தில் உள்ள அதே அன்புள்ளம் கொண்டு இன்றுவரை அல்லது கடைசி வரை வாழ்ந்து கொண்டுருப்பவர்களை நீங்கள் சந்தித்து உண்டா? இருந்தால் மின் அஞ்சல் மூலம் தெரிவிக்கவும் எண்ணிக்கையை. இல்லாவிட்டால் அதன் சமூக காரணத்தை அடுத்த இடுகையில் விவரிக்கவும். அதற்காக நான் காதலுக்கு எதிரி அல்ல.

  2. ப்ரியமுடன் வசந்த்

    //ஆம் பெற்றோருக்காக என்னைவிட்டுச்சென்று,நான் அவளை அழைத்து வந்த பெயரை தன்மகளுக்கு வைத்து ,என் நினைவில் கணவனுடன் வாழும் அவள் ஒரு
    துரோகியே//

    அப்டியெல்லாம் நம்மள ஞாபகம் வச்சுக்கிடமாட்டாங்க பெஸ்கி

  3. Beski

    //அப்டியெல்லாம் நம்மள ஞாபகம் வச்சுக்கிடமாட்டாங்க பெஸ்கி//

    வசந்த்,
    என்னுடன் இங்கு கிறுக்கல் கிறுக்கனும் எழுதுகிறார்… இதை எழுதியது அவரே… இதற்கு அவரும் பதில் சொல்வார்.

    என்னைப் பொருத்தவரை, கடைசி வரை ஞாபகம் வைத்திருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். கல்யாணத்திற்குப் பிறகு நட்பாகத் தொடர்வதும் இருக்கிறது…

  4. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    //jothig said…
    கவிதை படம் எல்லாமே சரி தான். சிலிர்ப்பாகத்தான் இருக்கிறது.\

    நன்றி

    //என்னுடைய ஒரே ஒரு கேள்வி உங்களிடம். இது வரையில் உங்கள் வாழ்க்கையில் காதல் செய்து திருமணம் செய்து வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் பணம் இருக்கிறதோ இல்லையோ தொடக்கத்தில் இருவரிடத்தில் உள்ள அதே அன்புள்ளம் கொண்டு இன்றுவரை அல்லது கடைசி வரை வாழ்ந்து கொண்டுருப்பவர்களை நீங்கள் சந்தித்து உண்டா? இருந்தால் மின் அஞ்சல் மூலம் தெரிவிக்கவும் எண்ணிக்கையை.\

    2 குடும்பங்களை எனக்குத்தெரியும்.

    //இல்லாவிட்டால் அதன் சமூக காரணத்தை அடுத்த இடுகையில் விவரிக்கவும். அதற்காக நான் காதலுக்கு எதிரி அல்ல.\

    காதலித்து, திருமணம் செய்து பின் மணம் வீசாதோர் பலர் உண்டு. அதைக்குறித்து விரைவில் ஒரு இடுகை இடுகிறேன்.

  5. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    //பிரியமுடன்………வசந்த் said…
    ஆம் பெற்றோருக்காக என்னைவிட்டுச்சென்று,நான் அவளை அழைத்து வந்த பெயரை தன்மகளுக்கு வைத்து ,என் நினைவில் கணவனுடன் வாழும் அவள் ஒரு
    துரோகியே

    அப்டியெல்லாம் நம்மள ஞாபகம் வச்சுக்கிடமாட்டாங்க பெஸ்கி\

    பிரியமுடன் வசந்த் அவர்களுக்கு, பிரியமுடன் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் கி.கி என்ற பெயரில் (கிறுக்கல் கிறுக்கன்)கிறுக்குவது பெஸ்கியின் அண்ணன் ஷல்லூம் .

  6. ப்ரியமுடன் வசந்த்

    //
    பிரியமுடன் வசந்த் அவர்களுக்கு, பிரியமுடன் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் கி.கி என்ற பெயரில் (கிறுக்கல் கிறுக்கன்)கிறுக்குவது பெஸ்கியின் அண்ணன் ஷல்லூம் .//

    சொல்லவேயில்ல…..

  7. Unknown

    // என்னைப் பொருத்தவரை, கடைசி வரை ஞாபகம் வைத்திருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். கல்யாணத்திற்குப் பிறகு நட்பாகத் தொடர்வதும் இருக்கிறது… //

    தல/மாப்பு..

    இத பத்தி சீக்கிரம் ஒரு பதிவு போடறேன். அது கண்டிப்பா என்னோட அனுபவமாத்தான் இருக்கும்..!

  8. Beski

    //எழில். ரா said…
    இத பத்தி சீக்கிரம் ஒரு பதிவு போடறேன். அது கண்டிப்பா என்னோட அனுபவமாத்தான் இருக்கும்..!//

    கண்டிப்பா நீங்க இதச் சொல்லுவீங்கன்னு தெரியும். எதிர்பார்க்கிறேன்.

Leave a Reply