ஆற்காட்டாருக்கு நன்றி

Published by: 9

அன்று ஞாயிற்று கிழமை,

வீட்டின் முன்புற அறையில் வெறும் தரையில் அமர்ந்து எனது சகோதரன் அதிபிரதாபன் அளித்த கிமு கிபி என்ற புத்தகத்தை மூன்றாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் கேரளாவிலிருந்து விடுமுறை கழிக்க வந்திருக்கும் எனது சகோதரி பீனா(BEENA) “எந்தா அச்சாச்சா வாயுக்குந்நு(என்ன அண்ணா படிக்கிறீர்கள்) என்று கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தாள்.

அவளுக்கு புத்தகத்தை குறித்து சில விஷயங்களை மலையாளத்தில் கூறி புரிய வைத்தேன். அதன் பின் அத்தை மகள் நித்தியா ”அத்தான் சமயமே போவல்ல என்னத்தையாவது செல்லுங்க”(சொல்லுங்க) என்றபடி வந்தமர்ந்தாள்.

அப்புறம் எனது மனைவி “ஆரம்பிச்சிட்டாரா அவருடைய வரலாற்றை என்று கேட்டபடி ஜோதியில் ஐக்கியமானாள்.

கையில் இருந்த கிமு கிபி புத்தகம் விசிறியாக பயன்பட எங்கள் பேச்சு தொடர்ந்தது அதனிடையே எங்கள் வீட்டில் தங்கி ஏரோநாட்டிக் படிக்கும் சிசிலன்(SICILAN) லேப்டாப்பில் சார்ஜ் தீர்ந்த படியால் டைம் பாஸாக்காக ஏதாவது பேசலாம் என்று வந்தமர்ந்து, பேச்சினிடையே “வெறுந்தரையில் படுத்து உறங்கிஎன்று காளை ராகத்தில் கீரல் விழுந்த ரெக்காட போல பாடி பாடி காதில் ரத்தம் வரவைத்துக் கொண்டிருந்தான். இதனிடையே செல்போனில் சார்ஜ் திர்ந்துவிட்டபடியால் என் மனைவியின் சகோதரனும், ஃபேன் ஓடாததால் என் தம்பி சதிஷ்(SATHESH)-ம் பேச்சில் கலந்து கொண்டனர்.

கிட்டதட்ட மூன்று மணி நேரம் பல விஷயங்களை குறித்து பேசினோம்,ஒருவரை ஒருவர் கலாய்த்தோம்.

அந்த நேரத்தில் கரன்ட் வந்துவிட எனது மனைவியின் சகோதரனும்,சிசிலனும் அவரவர் லேப்டாப்பில் அமர, மனைவியும்,அத்தை மகளும் TV முன் அமர,எனது தங்கையும்,சதிஷீம் எனது லேப்டாப்பில் கேமில் மூழ்கிவிட நான் மீண்டும் தனிமைபடுத்தபட்டேன்.

அப்புறம் என்ன செய்ய நானும் COMPUTER முன் அமர்ந்து ஏதோ.காம்ல் ஏதாவது எழுதலாம் என அமர்ந்தேன்.

என்ன தலைப்புக்கும் செய்திக்கும் தொடர்பு இல்லையே என நினைக்கிறீர்களா. நிறையவே தொடர்பு இருக்குங்க. ஞாயிற்றுக் கிழமையானால் கூட அனைவரும் அமர்ந்து பேசுவது என்பது கரண்ட் கட்டால் மட்டுமே நடக்கிறது. அப்புறம் ஆற்காட்டாருக்கு நன்றி சொல்லித்தானே ஆகவேண்டும்.


— கி.கி.

Thank you for reading. 🙂

9 comments

  1. ☀நான் ஆதவன்☀

    //அப்புறம் ஆற்காட்டாருக்கு நன்றி சொல்லித்தானே ஆகவேண்டும். //

    ஆமா இல்லையா பின்ன… உங்களை ஒரு வழியா பதிவு எழுத வச்சுட்டாரே 🙂

  2. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    //மோகன் குமார் said…
    தாமதமான திருமண வாழ்த்துக்கள் நண்பா. பேர் மாத்தியாச்சா? சொல்லவே இல்ல\

    ஹலோ மோகன் நான் அதிபிரதாபன் இல்லை, அவனுடைய அண்ணன். எனக்கு திருமணமாகி 5 வருடங்களாகின்றன

Leave a Reply