ஆறு கேள்விகள் ஏழு பதில்கள்

Published by: 19

ஒருவனுக்கு ஒருத்தி
என்றான்
ஏனென்றேன்
ஒழுக்கமென்றான்
ஒருத்தி இறந்தால்
என்றேன்
இன்னொருத்தியென்றான்
ஒருவன் இறந்தால்
என்றேன்
ஒருத்திதானென்றான்
சமனில்லை என்றேன்
ஒழுக்கமென்றான்.

ஒருவனுக்கு ஒருத்தி
என்றாள்
ஏனென்றேன்
விருப்பமென்றாள்
ஒருத்தி வெறுத்தால்
என்றேன்
இன்னொருத்தனென்றாள்
விரும்பினாலும் கூட
சேர்த்துக்கொண்டாள்
ஒருத்தியின் அவனுக்கு
என்றேன்
அவன் விருப்பம்
என்றால்
சமநிலையோ?

சமநி(ல்)லை.

-அதி பிரதாபன்.

Thank you for reading. 🙂

19 comments

  1. Beski

    // Cable Sankar said…
    அந்த பயத்துலதான் ஒரே குழம்பி போயிருக்கான் தண்டோரா///
    குழப்பலாம்னு பாத்தா எல்லாரும் நம்மள குழப்பிருவாங்க போலருக்கு…

  2. Beski

    //Sangkavi said…
    பொண்ணுபார்க்க போகும் போதே இத்தனை சிந்தனையா…..?//
    அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும்
    இல்லை
    இல்லை
    இல்லை.

  3. Beski

    //D.R.Ashok said…
    பயமா பிரதாபனுக்கா… இருக்காது//
    எல்லாரும் கேட்டுக்குங்கப்பா, டாக்டரே சொல்லியாச்சு. டா…க்டர் எம்.பி.பி.எஸ்.

  4. Beski

    நன்றி தண்டோரா.
    நன்றி கேபிள்சங்கர்.
    நன்றி சங்கவி.
    நன்றி அசோக்.

    நன்றி ஆதவா,
    எல்லாம் மாயை.

    நன்றி கார்த்திக்.
    நன்றி கண்ணகி.

  5. Beski

    நன்றி வால்பையன்.
    //தெரியலையேப்பா!//
    புரியுது.

    நன்றி ரோமியோ.
    //கல்யாணம் ஆனவர்கள் சங்கத்தில் சீக்கிரம் உறுப்பினர் ஆகிடு சகா.//
    இதை பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டமாக எடுத்துக்கொள்கிறேன்.

    நன்றி கனகு.
    நன்றி கார்த்திகைப்பாண்டியன்.

    தண்டோரா வேலை கச்சிதம்.

  6. தினேஷ் ராம்

    நான் ஆறு கேள்விகளுக்கு மூன்று அல்லது நான்கு பதில்களுக்கு மேல் தாண்டியதில்லை. உங்களால் மட்டும் எப்படி முடியுது?

  7. Unknown

    பொண்ணு –
    அந்த பயத்துலதான் –
    இத்தனை சிந்தனையா –
    பயமா பிரதாபனுக்கா –
    பொண்ணா? சொல்லவே இல்ல –
    கல்யாணம் ஆனவர்கள் சங்கத்தில் –
    உங்களால் மட்டும் எப்படி முடியுது?

    Cute Maaps!!!

Leave a Reply