சுடச்சுட பிளாக்கிங்

இந்த வாரம் வெளிமாநிலத்திற்குச் செல்வதால்  roaming  ல் booster ஏதாவது உள்ளதா என ஏர்டெல் தளத்தை மேய்ந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் அவை கண்களுக்குத் தட்டுப்பட்டன 3G என்ற எழுத்துக்கள். எவ்வளவு நாட்களாக காத்திருந்தேன் இந்த வசதிக்காக. அதன் விலை விபரங்கள் பார்த்ததும் மேலும் மகிழ்ச்சி. என்னால் உபயோகிக்கக்கூடிய விலைதான். ஒரு புறம் மகிழ்ச்சி, ஒரு புறம் கோபம், விளம்பரம் ஏதும் செய்து தெரியப்படுத்தவில்லையே என்று. அப்படி என்ன இருக்கிறது இதில் என்ற எண்ணமா? அதைக் கடைசியில் நீங்களே புரிந்துகொள்வீர்கள். […]

அவதிப்படும் 100 அடி ரோடு

(படம் beta.thehindu.com லிருந்து எடுக்கபட்டது) சென்னையில் வாகன நெரிசலைச் குறைக்க மேம்பாலங்கள் ஆங்காங்கே முளைத்துக்கொண்டே இருக்கின்றன. நல்ல விசயம்தான். ஆனால், அது கட்டி முடிக்கப்படும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியில் சில பாதைகள் மறைக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அதனால் ஏற்படும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் சொல்லமுடியாத அயற்சியைத் தருகிறது. என்ன செய்ய? பல காலத்து நன்மைக்காக சில காலம் கஷ்டம் அனுபவிப்பதில் குறையேதுமில்லை. ஆனால் இதுபோன்று ஏற்படும் கூடுதல் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்துத் […]

ஏதோ ஒன்னு

படிக்கவும் முடியல, எழுதவும் முடியல. சில நேரம் படிக்காம படுக்கவும் முடியல. ஒரு சில விசயங்களைப் பழகிட்டோம்னா திரும்ப விடுறது எனக்கு கொஞ்சம் கஷ்டம். அது எல்லாமே ஒரே மாதிரியா இருக்காது. இப்போ காபி குடிக்கிறத எடுத்துக்கலாம். வீட்டுல இருக்குறவரைக்கும் காலைல எந்திரிச்ச உடனே காபி குடிக்கனும்போல இருக்கும். அம்மா கேட்டவொடனே குடுக்கலைனா சண்டையே வரும். அந்த சமயத்துல எங்காவது வெளியூரு போயிருந்தா, காலைல எந்திரிச்சவொடனே எங்கயாவது தேடிப்பிடிச்சாவது குடிக்கிறது பழக்கம். அப்புறம் சென்னை வந்ததுக்கு அப்புறம் […]

காட்டுநிற நாட்கள்

கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின் என வாழ்க்கையை இரு கட்டங்களாகப் பிரிக்கலாம் (க.மு., க.பி.) என்கிறான் நண்பனொருவன். ஏனென்றால் கல்யாணத்திற்குப் பின் பெரிய மாற்றம் இருக்குமாம். மேலும் அவன் கூறியது… ”கல்யாணத்திற்குப் பின் ஒரு ஆணின் சுதந்திரம் அனைத்தும் பறிபோய்விடும். ஆனால் பெண்களுக்கு சில சுதந்திரங்கள் கிடைக்கும். கல்யாணம் ஆன முதல் இரு மாதங்களுக்கு உன்னை வெளியில் பார்க்கவே முடியாது. பின் சில நேரங்களில் பார்க்கலாம். சில வருடங்கள் கழித்து நீயே என்னை போன் செய்து அழைப்பாய் […]

தந்தை, மகன் மற்றும் பயணம்

இரண்டும் சமீபத்தில் பார்த்த படங்கள், அடுத்தடுத்து. அதெப்படி இந்த இரு படங்களும் இவ்வாறு பார்க்க நேர்ந்ததென்று தெரியவில்லை. அந்த அளவுக்கு இரண்டுக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன.இரண்டிலும் ஒரு தந்தை, ஒரு மகன், ஒரு பயணம். இரண்டுமே மனதைப் பாதித்த காட்சிகள், முடிவுகள். ஆனால் ஒவ்வொரு கதைக்களமும் முழுதும் வெவ்வேறு, நோக்கம் ஒன்று. முதலில் தி ரோடு. கற்பனைக் களம். உலகம் அழியும் தருவாயில் என்னவெல்லாம் நடக்குமென்கிற கற்பனை. திடீர் திடீரென்று காட்டுத்தீ,  நிலநடுக்கம், மழை என மிரட்டும் உலகம். […]

ஆறு கேள்விகள் ஏழு பதில்கள்

ஒருவனுக்கு ஒருத்திஎன்றான்ஏனென்றேன்ஒழுக்கமென்றான்ஒருத்தி இறந்தால்என்றேன்இன்னொருத்தியென்றான்ஒருவன் இறந்தால்என்றேன்ஒருத்திதானென்றான்சமனில்லை என்றேன்ஒழுக்கமென்றான். ஒருவனுக்கு ஒருத்திஎன்றாள்ஏனென்றேன்விருப்பமென்றாள்ஒருத்தி வெறுத்தால்என்றேன்இன்னொருத்தனென்றாள்விரும்பினாலும் கூடசேர்த்துக்கொண்டாள்ஒருத்தியின் அவனுக்குஎன்றேன்அவன் விருப்பம்என்றால்சமநிலையோ? சமநி(ல்)லை. -அதி பிரதாபன். Thank you for reading. 🙂