தேன்கூடு – 2009/10/31

Published by: 16

கூகுளில்…
நமது பிலாக்கர் அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது பற்றிய ஒரு சிறு கட்டுரை இதோ.

பிற தளங்கள் தரும் விட்ஜெட்டுகள் மூலம் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே நம்பத்தகுந்த விட்ஜெட்டுகளை உபயோகிப்பதே நல்லது. நன்றாக இருக்கிறதென்று கிடைத்ததையெல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாது. நல்லது என எப்படி நம்புவது? கொஞ்சம் கஷ்டம்தான். Widget Codeல் ஏதாவது லிங்க் இருப்பது, அல்லது விளம்பர பாப் அப் விண்டோவை உருவாக்கும் விட்ஜெட்டுகளைத் தவிர்க்கலாம். விட்ஜெட் பாக்ஸ் ஒரு அருமையான விட்ஜெட் தரும் தளமாகும்.

அதே போல, டெம்ப்லேட்டுகளும் இதே போன்ற பிரச்சனைகளைத் தரலாம். இந்த பிரச்சனை என்பது என்னவெனில், நீங்கள் வைத்திருக்கும் விட்ஜெட்/டெம்ப்லேட், உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களின் விபரங்களை சேகரிக்கலாம், Malwareஐ நமது கணினிக்குள் சொருகும் தளத்திற்கு இணைப்பு கொடுக்கலாம், விளம்பர பாப்அப் விண்டோக்களை உருவாக்கி எரிச்சலடையச் செய்யலாம், இன்னும் சில. நல்ல டெம்ப்லேட் தரும் தளங்களில் சில இங்கே.
நான் வழக்கமாக டெம்ப்லேட்டுகள் பார்க்கும் தளங்கள் www.deluxetemplates.net மற்றும் www.allblogtools.com, இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை.

மேலும், டெம்ப்லேட் மாற்றும்போது மறக்காமல் பேகப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. புதிதாய் மாற்றிய டெம்ப்லேட் பிடிக்கவில்லையெனில், மீண்டும் பழைய அமைப்பைப் பெற இது வசதியாய் இருக்கும்.

இது போன்ற பயனுள்ள தகவல்கள் இங்கு உள்ளன.

வெளியூர் பயணம்
இந்த மாதம் – சிவகாசி.
நண்பருடன் ஒருவருடன் உரையாடிவிட்டு, பரோட்டா சாப்பிடவேண்டும், நல்ல ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றேன். காளிதாஸ் ஓட்டலுக்கு கூட்டிச் சென்றார். பரோட்டாவை பிய்த்துப் போட்டு, சால்னா ஊற்றி, அதில் ஒரு மட்டன் சுக்கா, ஒருபுறம் வெறும் வெங்காயம், மறுபுறம் தயிர் வெங்காயம் அப்படியே ஒரு அரைவேக்காடு…

பரோட்டா வாயில் போட்டதும் அப்படியே கரைந்து போயிற்று. சிவகாசி சென்றால் கண்டிப்பாக இங்கு போய் பரோட்டா சாப்பிட்டுப் பாருங்கள்.

சென்ற முறை சென்ற போதும் அன்புத் தம்பி அன்பை சந்திக்க முடியவில்லை. இந்த முறையும் முடியவில்லை. கண்டிப்பாக அடுத்த முறை எப்படியும் சந்த்த்தே தீரவேண்டும் என்று மனம் அடம்பிடிக்கிறது.

இந்த வாரம் பார்த்த படம்: 9 (படம் பேரே அவ்வளவுதான்)

அனிமேசன் படம். ஒரு கையளவு இருக்கும் பொம்மையின் உயிர்ப்பிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. அதன் முதுகில் 9 என்றிருக்கிறது. அப்படியே ஜன்னலின் வெளியே பார்த்தால் ஊரே நாசக்காடாய் அழிந்திருக்கிறது. மனிதர்களே இல்லை. வெளியே வந்தால் தன்னைப்போல சில பொம்மைகள் இருப்பது தெரிகிறது. ஒவ்வொன்றின் முதுகிலும் ஒரு எண். பின்பு (பூனை, வௌவால், பாம்பு வடிவில்) வரும் அழிக்கும் இயந்திரங்கள், அதன் மூல இயந்திரம், அதன் பின்னணி கதைகள், இந்த பொம்மைகள் உருவான பின்னணி, காரணம் ஆகியவற்றுடன் கதை செல்கிறது.

வித்தியாசமான கதை, முடிவுதான் புரியவில்லை. அனிமேசன் அருமையாக செய்யப்பட்டிருக்கிறது. கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு அற்புதம். பார்க்கலாம்.

என்ன இருந்தாலும் Ratatouille, WALL·E ஏற்படுத்திய தாக்கத்தை இனி எந்த அனிமேசன் படமும் ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

படத்தின் பெயர் 9, இது 09-09-09 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது என்பது கூடுதல் சுவாரஸ்யம். 2005ல் Shane Acker என்பவரால் உருவாக்கப்பட்ட குறும்படத்தின் மூலம் கவரப்பட்ட Tim Burton, அதை முழு நீளப் படமாக தயாரித்துவிட்டார், Shane Acker கொண்டே.
குறும்படம் இங்கே (2005)
படத்தின் ட்ரெய்லர் இங்கே (2009)

SMS ஏரியா
சிந்திக்க:
மனம் திறந்து பேசு
ஆனால்
மனதில் பட்டதையெல்லாம் பேசாதே
சிலர் புரிந்துகொள்வர்
சிலர் பிரிந்து செல்வர்.

சிரிக்க:
மனைவி: இந்த வாரம் ஃபுல்லா படத்துக்குப் போவோம், அடுத்த வாரம் ஃபுல்லா ஷாப்பிங் போவோம்.
கணவன்: சரி, அதுக்கு அடுத்த வாரம் ஃபுல்லா கோவிலுக்குப் போவோம்.
மனைவி: எதுக்கு?
கணவன்: பிச்சையெடுக்கத்தான்.

வரும் தேன்கூட்டில்…

  • கின்னஸ் சாதனை படைத்த சின்னக்குயில்…
  • பதிவர் ஜனா வீட்டில் விருந்து, ’யூத்’ பதிவர்களின் கூத்து – படங்கள்..
  • குறையொன்றும் இல்லாத பதிவருடன் ஒரு சந்திப்பு…

-அதி பிரதாபன்.

Thank you for reading. 🙂

16 comments

  1. Romeoboy

    டெம்ப்ளேட் வெப்சைட் குடுத்தமைக்கு நன்றி சகா . நான் டெம்ப்ளேட் மாத்தனும் என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் அருமையான வெப்சைட் குடுத்து இருக்கிங்க .

  2. ☀நான் ஆதவன்☀

    உபயோகமான தகவல்கள். ஆமா அந்த படம் ஆங்கில படமா? எழுத்துகளைப் பார்த்தா ஏதோ ஐரோப்பிய நாட்டு படம் மாதிரில்ல இருக்கு?

    கடைசியில என்னய்யா தேன் கூட்டுக்கு டிரைலர் போடுற? ம்ம்ம்ம்ம்ம்

  3. Beski

    நன்றி ரோமியோ,
    மாற்றிப் பாருங்கள். தகவல்கள் ஏதும் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    நன்றி ஆதவா,
    அது ஆங்கிலம்தான், போஸ்டர் நல்லா இருக்குதேன்னு கெடச்சதப் போட்டுட்டேன்.
    //கடைசியில என்னய்யா தேன் கூட்டுக்கு டிரைலர் போடுற?//
    ஒரு விளம்பரம்… என்ன இருந்தாலும் உன்ன மாதிரி வராதுல..

    வருகைக்கு நன்றி வெங்கி.

    ராஜ்,
    ஒரு சஸ்பென்ஸ் வச்சு குடுக்கலாமேன்னு பாத்தேன்.

    கேபிள்ஜி,
    அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது, அடுத்த வாரம் வந்து படங்களைப் பாத்துக்குங்க… ஹி ஹி ஹி…

    நன்றி ஜனா.

    ராஜ்,
    அது ஒன்றுமில்லை. நமக்கு பிற மொழிப் படங்கள் பார்ப்பதில் எப்போதுமே ஆர்வம்தான். எழுதுவதுதான் இல்லை. ஏற்கனவே ரொம்பபேர் எழுதுறாங்களே, நாமளும் எதுக்குன்னு விட்டுட்டேன். கேபிள்ஜிதான் எத்தனை பேர் எழுதினா என்ன, நீங்களும் எழுதுங்க என்று தைரியம் கொடுத்தார்.

    வருகைக்கு நன்றி ஜோதிஜி.

  4. Unknown

    ம்ம்.. இப்ப டவுசர் பாண்டி ​வேலையும் ​சேத்துப்பாக்க ஆரம்பிச்சிட்டீங்களா மிஸ்டர். அதி பிரதாபன் மாப்ள! நல்லாயிருக்கு உங்க ஸேப்டி-டிப்ஸ்!
    பட விமர்சனத்தை மிக ரசித்தேன்.. ​டைலமாவிலேயே பார்க்காமல் விட்ட படம் அது.. அதற்கு மாற்றாக ஸரோகேட்ஸ் போய் பார்த்தேன்!
    கணவன்-மனைவி ​ஜோக் நல்லாயிருக்கு! புல்லா சிரிச்சேன்!

  5. Beski

    நன்றி வால்.

    ஜெ மாம்ஸ்,
    //நல்லாயிருக்கு உங்க ஸேப்டி-டிப்ஸ்!//
    நன்றி மாம்ஸ்.

    //பட விமர்சனத்தை மிக ரசித்தேன்.. ​//
    அய்யய்யோ, விமர்சனம்னு எல்லாம் சொல்லாதீங்க…

  6. kanagu

    thala kalakkal 🙂 nalla irundhudu.. 🙂

    /*நண்பருடன் ஒருவருடன் உரையாடிவிட்டு, பரோட்டா சாப்பிடவேண்டும், நல்ல ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றேன். காளிதாஸ் ஓட்டலுக்கு கூட்டிச் சென்றார். பரோட்டாவை பிய்த்துப் போட்டு, சால்னா ஊற்றி, அதில் ஒரு மட்டன் சுக்கா, ஒருபுறம் வெறும் வெங்காயம், மறுபுறம் தயிர் வெங்காயம் அப்படியே ஒரு அரைவேக்காடு…*/

    yenga ipdi kolreenga… inga evanukkum parottave poda theriyala.. 🙁

    chennai oru nalla hotel ah sollunga..

    and andha padam patriya kurippu arumai.. seekram pakkuren…

    SMS rendu arumai… thalaippukku etravaaru irundhadu..

  7. Beski

    நன்றி கனகு.

    ஹோட்டல் பத்தி தெரிஞ்சுக்கனும்னா கேபிள்ஜியோட கொத்துபரோட்டா பாருங்க. அதுவும் கடைசி கொத்துல எழுதின ஹோட்டல்ல பரோட்டாதான் சூப்பர். அப்படியே தென்மாவட்ட சுவை.

    பதிவர் சந்திப்புக்கு வருவீங்கள்ல? அங்க பேசலாம்.

  8. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    தேன் கூட்டிலிருந்து நமக்கு கிடைக்கும் பொருட்கள், தேன், மெழுகு, புழு, சக்கை அதன் கூட தேனியின் கொட்டும் கிடைக்கும்.

    உன் தேன் கூட்டில் முதல் நான்கும் கிடைக்கிறது. ஆனால் கொட்டு கிடைக்கமாட்டேங்குதே,

    என்ன நான் சொல்வது சரிதானே

    அதி பிரதாபனனான எவனோஒருவனே.

    ஹை உன் பெயரை இப்படி போட்டாலும் நல்லா இருக்கே

  9. Beski

    //கிறுக்கல் கிறுக்கன் said…
    ஆனால் கொட்டு கிடைக்கமாட்டேங்குதே//
    சொல்வது சரிதான். கொட்டு வந்து தருகிறேன்.

    //அதி பிரதாபனனான எவனோஒருவனே. ஹை உன் பெயரை இப்படி போட்டாலும் நல்லா இருக்கே//
    அட ஆமால்ல?

Leave a Reply