பிளாக்கருக்கு வயது 10…

Published by: 11

பிளாக்கர் ஆரம்பித்து, வரும் ஆகஸ்டோடு 10 ஆண்டுகள் ஆகப்போகிறதாம். (அதே நேரம் கூகுளுக்கு ஆகும் வயது 20).

பிளாக்கர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்…
– ஒரு நிமிடத்திற்கு 270,000 வார்த்தைகள் பிளக்கரில் எழுதப்படுகின்றன.
– வாரத்திற்கு மில்லியன் மக்கள் தங்களது பதிவுகளை இடுகிறார்கள்
– அதிகமாக உபயோகிக்கும் நாடு யூ.எஸ்., அடுத்து பிரேசில், துருக்கி, கனடா, யூ.கே…
– பெரும்பாலான பிளாக்கர்களின் அபிமான விளையாட்டு: கால்பந்து.

விருப்பம் உள்ளவர்கள் பிளாக்கர் பற்றிய தங்களது அனுபவங்களைப் பதிவாகப் போட்டு இங்கே அளிக்கலாம்.

கூகுள் மொழிபெயர்ப்பில் இன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மொழி: பெர்சியன்.

தமிழைத் தேடினேன் இன்னும் வரவில்லை. சீக்கிரம் வந்துவிடுமெனெ நினைக்கிறேன். ஏனெனில் ஹிந்தி இருக்கிறது.

இன்று கூகுள் புத்தகங்களில் புதிதாக சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
முக்கியமாக கீழே உள்ளதுபோல, புத்தகங்களின் பக்கங்களை உங்கள் வலைப்பூ பக்கங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் சேர்க்கப்பட்டுள்ள வசதிகள்…
– புத்தகங்களினுள் இருக்கும் பக்கங்களில் தேடும் வசதி
– பக்கங்களை தம்னெய்ல்களாகப் பார்க்கும் வசதி
– வெறும் எழுத்துக்களாக மட்டும் பார்க்கும் வசதி
– பக்கங்களைப் புரட்டுவதற்கான பொத்தான்கள்

விபரமாகப் படிக்க இங்கே செல்லவும்.

Thank you for reading. 🙂

11 comments

  1. Beski

    Suresh, ஆபிரகாம், ஷோபிகண்ணு…

    தங்களது வருகைக்கும், எண்ணப்பகிர்விற்கும் நன்றிகள்.

Leave a Reply