வானம்

அவள் மிக அழகானவள்.நீளமாய் இருப்பாள், நீலமாய் இருப்பாள். மிகவும் பிரகாசமான சூரியனைப் பொட்டாகக் கொண்டிருப்பாள், அந்தப் பொட்டின் நிறம் அவளது மனநிலையக் காட்டும்.சில நேரங்களில் மஞ்சளாய் மங்களகரமாக, சில நேரங்களில் சிவப்பாய் பத்திரகாளியாக, சில நேரங்களில் பெரிதாய் பட்டிக்காடு போல, சில நேரங்களில் சிறிதாய் பட்டணம் போல. அவள் வெட்கப்படும்போது கூந்தலை அள்ளி முகத்தை மறைத்துக்கொள்வாள்.அந்தக் கூந்தல் கருமையாகவோ, வெண்மையாகவோ, இரண்டும் கலந்தோ அல்லது அவளது பொட்டின் நிறத்தை உள்வாங்கி, அழகிய வர்ண மாயாஜாலம் செய்ததுபோலவோ இருக்கும். […]

கமலா தியேட்டர் – புதுப் பொலிவுடன்

நேற்று சென்னை வடபழனியிலிருக்கும் கமலா தியேட்டருக்குச் சென்றிருந்தேன். சீரமைக்கப் பட்டு புதுப் பொலிவுடன் இருந்தது. இதற்கு முன் 2 வருடங்களுக்கு முன் சென்ற ஞாபகம். அப்போது ஒன்றுதான் இருந்தது, இப்போது கமலா – ஸ்கிரீன் 1, ஸ்கிரீன் 2 என இரண்டாக இருந்தது. டிக்கட் கவுண்டரில் இருந்து, பாத்ரூம் வரை அனைத்தும் புதுப்பிக்கப்பட்டிருந்தது. இண்டீரியர் அருமை, அனைத்து இடங்களிலும். டிக்கட் கவுண்டர் – கனினி மயமாக்கப்பட்டுள்ளது, ஒரே தாளில் அனைவருக்கும் பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கட், தாள் கூட […]

குழந்தைக்குப் பெயர் வைக்கும் போது…

உங்கள் குழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி?பெயர் வைக்கும்போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்னென்ன?பெயர் வைத்தால் மட்டும் போதுமா? அதை மெய்ண்டெய்ன் செய்வது எப்படி?! மற்ற இடங்களில் எப்படியோ தெரியாது, தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இது பயன்படலாம்.(இங்கு ரெக்கார்டுகளில் என்பது ரேசன் கார்டு, லைசன்ஸ், டி.சி., பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றைக் குறிக்கும்) பெயரின் நீளம்பெயரை முடிந்த அளவு சுருக்கமாகவும், சிறியதாகவும் வைக்கவும். அனந்தராமகோபாலகிருஷ்ணன் எனுமாறு வைத்தால், பிற்காலத்தில் படிவங்கள் நிரப்பும் போது குழந்தைகள் பெற்றோரை நினைத்துப் பார்க்கக் கூடும். […]

பதிவர் கூட்டம்

பிளாக் எப்போ, எப்படி படிக்க ஆரம்பித்தான் என்று அவனுக்கு மறந்தே விட்டது. ஆனால் முதல் முதலில் படித்தது டோண்டு பதிவுகளைத்தான். அங்கு கிடைத்த லிங்குகளை வைத்து பதிவு உலகம் என்று ஒன்று இருப்பதாகத் தெரிந்து கொண்டான். படிக்கப் படிக்க ஆர்வம் அதிகமாகியதே தவிர குறைந்தது இல்லை. பொது அறிவு, நாட்டு நடப்பு, எண்ணங்கள், வாதங்கள் மற்றும் வாழ்க்கை நடைமுறை இப்படி பரந்து விரிந்து கிடக்கும் பதிவுலகம் அவனை சுலபமாக தனதாக்கிக்கொண்டது. பொதுவாக இவ்வுலகம் இவனுக்கு பிடிப்பதற்கு காரணம், […]