எந்திரனும் எனது பார்வைகளும்

எந்திரன் எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்த படம். எதிர்பார்ப்பா, அப்படி என்ன எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம்? ஒரு சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக, சினிமா விரும்பியாக, இயக்குனர் ஷங்கரின் ரசிகனாக? அல்லது இப்படி, ரஜினி படம் சொதப்பவேண்டும் என்ற எண்ணத்துடன்? கேப்புக்கு கேப்பு விளம்பரம் போட்ட சன் பிக்சர்ஸ் மேல் உள்ள வெறுப்பில் கவுந்து போகட்டும் என்ற எதிர்பார்ப்பில்? இருக்கலாம். அனைத்தும் ஒரு எதிர்பார்ப்பே. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சன் பிச்சர்ஸின் எதிர்பார்ப்பு மட்டும் நன்றாக ஈடேறியிருக்கிறது. மற்ற எல்லாம் அவுட். ஆட்டம் […]

ஒரு கதை பல கோணங்கள்

சமீபத்தில் INCEPTION படம் பார்த்தேன். பிரமித்துப் போனேன். இப்படியொரு இடியாப்பச் சிக்கலான கதையை, கண் முன்னே தெரியும்படி, நம்பும்படி, முக்கியமாக புரியும்படி எடுத்திருக்கும் இப்படக் குழுவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. சிறு நேரம்கூட திரையை விட்டு நம் கவனத்தைத் திருப்பினால் படம் வேறுவிதமாகப் புரிந்துவிடும். நல்ல வேளை பக்கத்தில் இருந்த மனைவி தொந்தரவு செய்யாதது எனது பணத்தை மிச்சப்படுத்தியது. இருந்தாலும் இன்னும் இரண்டு முறை பார்க்கவேண்டும். அது என்ன இரண்டு முறையா? சொல்கிறேன். கதைப்படி, ஒரு கனவை […]

தந்தை, மகன் மற்றும் பயணம்

இரண்டும் சமீபத்தில் பார்த்த படங்கள், அடுத்தடுத்து. அதெப்படி இந்த இரு படங்களும் இவ்வாறு பார்க்க நேர்ந்ததென்று தெரியவில்லை. அந்த அளவுக்கு இரண்டுக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன.இரண்டிலும் ஒரு தந்தை, ஒரு மகன், ஒரு பயணம். இரண்டுமே மனதைப் பாதித்த காட்சிகள், முடிவுகள். ஆனால் ஒவ்வொரு கதைக்களமும் முழுதும் வெவ்வேறு, நோக்கம் ஒன்று. முதலில் தி ரோடு. கற்பனைக் களம். உலகம் அழியும் தருவாயில் என்னவெல்லாம் நடக்குமென்கிற கற்பனை. திடீர் திடீரென்று காட்டுத்தீ,  நிலநடுக்கம், மழை என மிரட்டும் உலகம். […]

கோவா – சிரிக்க மட்டும்

கோவா – உண்மையிலேயே சரியான பெயர்தான். இரண்டு முறை இதுவரை கோவா சென்றிருக்கிறேன். அதில் ஒரு தடவை குடும்பத்துடன். ஹ்ம்ம்ம். இன்னொரு தடவை கல்லூரி நாட்களில், அதகளம். போனதும் தெரியவில்லை வந்ததும் தெரியவில்லை. ஆனா திரும்பி வரும்போது ஜாலியா இருந்ததா ஒரு ஞாபகம். காசெல்லாம் ’தண்ணியா’ செலவாகி வெறுங்கையா இருந்தது அந்தப் பயணம். ஆனா வெறுமையா இல்லை. சரி கோவா படத்துக்கு வருவோம். ஏற்கனவே வெங்கட்டோட படங்கள் இரண்டு பாத்ததுனால, கதை இருக்காதுன்னு தெரிஞ்சுதான் போனேன். என்னோட […]

நாணயம் மற்றும் The Bank Job

நாணயம் எந்த எதிர்பார்ப்புமில்லாது சென்ற படம். ஆரம்பம் முதலே திரையில் பயங்கர ரிச்னஸ். வந்த இடங்கள் எல்லாம் என்னைப் போன்ற சாமானியர்கள் பார்க்காத இடங்கள். ஆனால் கதையின் ஓட்டத்திற்குள் தானாக சென்றுவிட்டேன். ஒரு பெரிய வங்கியில் வேலை பார்க்கும் இளைஞன் பிரசன்னா. உலகத்திலேயே பாதுகாப்பான பெட்டக வசதியை வடிமைத்து அந்த வங்கியில் செயல்படுத்துகிறார். சொந்தமாகத் தொழில் தொடங்க இரண்டு கோடி வங்கி கடனுக்காக காத்திருக்கிறார், அதே வங்கியில். திடீரென முளைக்கும் காதல். காதலிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி […]

2009ல் IMDB ன் டாப் படங்கள்

சில படங்களைப் பற்றி நண்பர்களிடம் பேசும்போது, எப்படி இந்த மாதிரி படங்களெல்லாம் கிடைக்கிறது என என்னிடம் கேட்பதுண்டு. அது ஒன்றும் பெரிய விசயமில்லை, சில படங்கள் நண்பர்கள் வாய்வழி வரும் பரிந்துரை. மற்ற படங்கள் எல்லாம் www.imdb.com பரிந்துரைதான். ஒரு படத்தின் டொரண்ட் கிடைத்தவுடன் இங்கு சென்று அதன் ரேங்கிங் எவ்வளவு என்று முதலில் பார்ப்பேன். பின்பு யூ.எஸ். யூ.கே. நிலவரம். ஏனென்றால் ரேங்கிங் மட்டும் வைத்து ஒரு படத்தை முடிவுசெய்துவிட முடியாது. குறைவான ரேட்டிங் உள்ள […]