என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா

’என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா – அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. சாதாரணமாய், காதலர்கள் மாதிரியா பழகினோம்? கணவன் மனைவி போலல்லவா இருந்தோம். புருசா என்றும் பொண்டாட்டி என்றுமல்லவா அழைத்துக்கொண்டோம். மொபைலில் கூட பெயருக்கு பதில் அப்படித்தானே பதிந்து வைத்திருந்தோம். நீதாண்டா என் உயிர், நீ இல்லாம என் வாழ்க்கைய நெனச்சுக்கூட பாக்க முடியலடா, என்றெல்லாம் சொன்னாளே! இப்போது உயிராவது, மயிராவது என்றல்லவா போய்விட்டாள்’. ’எத்தனை முறை என்னுடன் படுத்திருப்பாள்? உன் நெஞ்சு என் மஞ்சம் என்றும், உன் […]

சின்ன மனசு – போட்டிக்கான சிறுகதை

சுரேஷ் ரயில் நிலையம் நோக்கி வேகமாக நடந்தான். அவனுக்கு, இஷ்டப்பட்ட வாழ்க்கை கிடைக்கப் போகும் சந்தோசம் மனது முழுதும் நிரம்பியிருந்தது. ‘நாளைலருந்து காலைலயே எந்திரிக்க வேணாம், சுப்பம்மா டீச்சரோ பாட்டியோ அடிக்க மாட்டாங்க, இஷ்டம்போல வெளாடலாம், ஆத்திலோ குளத்திலோ குளிக்கலாம், நெனைச்ச நேரம் ஐஸ்கிரீம் சாப்டலாம், எதையும் கண்டிக்க அப்பா இருக்க மாட்டார்’ என்று எண்ணியவாறே ரயில் நிலையம் உள்ளே நுழைந்தான். சுரேஷ், வயது 11, ஆறாம் வகுப்பு படிக்கிறான். அப்பா, அம்மா அரசு வேலையில். சொந்த […]