பட்டன் காளான் -200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
தனியாதூள் – ஒரு தேக்கரண்டி(வறுத்து பொடித்தது)
கரம் மசாலா தூள் -அறை தேக்கரண்டி
ஜீரக தூள் – கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
பச்ச மிளகாய் – ஒன்று(சற்று பெரியது)
கொத்து மல்லி தழை – சிறிது
எண்ணை – 50 மில்லி
1. பட்டன் காளானை தண்ணீரில் மஞ்சள் பொடி போட்டு கழுவி நறுக்க வேண்டும்.கழுவும் போது காளானின் வெள்ளை பாகங்களில் கருப்பு புள்ளிகள் தெரிந்தால், அதை உபயோகிக்கக்கூடாது
2, வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. ஓரு வாயகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது ஜீரகம் போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கருகாமல் நன்கு பொன் முறுவலாக வதக்கவும்.
4. இஞ்சி பூண்டு வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
5. பிறகு பட்டன் காளானுடன், எல்லா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி குறைந்த தீயில் (சிம்மில்) வேகவிடவும்.
6. நன்கு வெந்து கூட்டானதும் மல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
பட்டன் காளான் மாதிறி ஏதாவது ஜிப் காளான் இருக்கா?
கலக்கலான காளான் கூட்டு…
//குறை ஒன்றும் இல்லை !!! said…
பட்டன் காளான் மாதிறி ஏதாவது ஜிப் காளான் இருக்கா?\
இருக்கு எவ்வளவு வேணும்?
//கீதா ஆச்சல் said…
கலக்கலான காளான் கூட்டு…\
நன்றி சகோதரி.
ஒரு டன் அனுப்புங்க..:)
This comment has been removed by the author.
தல.. காளான் நமக்கு புடிச்ச கூட்டுகள்ள ஒண்ணு.. அடிச்சு நகத்துவோமுல்ல..!! 🙂
//குறை ஒன்றும் இல்லை !!! said…
ஒரு டன் அனுப்புங்க..:\
ஒரு டன் முடியாது. ஒரு டின் அனுப்புகிறேன்
//எழில். ரா said…
தல.. காளான் நமக்கு புடிச்ச கூட்டுகள்ள ஒண்ணு.. அடிச்சு நகத்துவோமுல்ல..!! :\
நகத்துங்க நகத்துங்க
//கிறுக்கல் கிறுக்கன் said…
//குறை ஒன்றும் இல்லை !!! said…
ஒரு டன் அனுப்புங்க..:\
ஒரு டன் முடியாது. ஒரு டின் அனுப்புகிறேன் //
செம்ம பதில் கிகி.
புடிக்கலை pa
Alagar pattani ….. chennai
we34fd4
its ok ma