வழக்கமாக தமிழ்ப் படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. தேவையில்லாமல் நூறு ரூபாயையும், மூன்று மணி நேரத்தையும் வீணடிக்கும் அளவுக்கு வேலை இல்லாமல் இல்லாததால், தேர்ந்தெடுத்த படங்களை மட்டுமே சென்று பார்ப்பேன். சமீப காலமாக நிறைய தம்ழ்ப்படங்களைப் பார்ப்பது போன்று தோன்றுகிறது. நல்லதுதான்.இவைதான் சமீபத்தில் பார்த்த படங்கள். உதயம் காம்ப்லக்ஸில் பார்த்தேன். மிகச் சிறிய படம். ஆங்காங்கே சுவாரஸ்யமான விசயங்கள் இருந்தாலும், முழுதும் லயித்துப் பார்க்க முடியவில்லை. அடியில், சீட்டின் அழுத்தம் அடிக்கடி தெரிந்தது. இந்தப் படத்தில் முக்கியமாக எனக்குப்படுவது, […]
மீண்டும் ஒரு முறை
மீண்டும் ஒரு முறை பதிவு எழுத முயற்சி செய்யலாம் எனத் தோன்றியது. ஏன் எழுதுவது நின்று போனது என்று யோசித்துப் பார்க்கிறேன், சரியாகத் தெரியவில்லை, அதைப் பற்றி மேலும் யோசித்து அறிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம். திருமணத்திற்குப் பிறகு எழுதுவது சிறிது குறைந்தது. குழந்தை பிறந்த பிறகு படிப்பதும் குறைந்தது. குழந்தையைப் பற்றி சொல்லிக்கொண்டெ போகலாம். வெர்னிகா. ஒரு குழந்தை பிறந்தது முதல், வளர்வதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. […]
தூக்கமில்லா நோயும் சில உண்மைக் கனவுகளும்
இந்தப் படத்துக்கும் நமக்கும் ரொம்ப நாளா ஒரு கனெக்சன். சில பல ஆண்டுகளுக்கு முன்னாடி நம்ம நண்பன் நம்மல சைடு போஸ்ல பாத்துட்டு, நீ அந்தப் போஸ்டர்ல இருக்குற மாதிரியே இருக்கன்னு ஒரு பிட்டப் போட்டான். போதாக்குறைக்கு அவன் ஒரு ஹாண்ட் தேர்ந்த கணினிக் கலைஞன் வேற. நம்மல அபப்டி நில்லு, இப்படித் திரும்பு, கொஞ்சம் குனி அப்டின்னு ஆங்கிள் ஆங்கிளா போட்டோ எடுத்து அப்படியே ஒரு வேலை பண்ணிக் காட்டினான். அதான் இது… அப்பவே சொன்னான், […]
தென்மேற்குப் பருவக்காற்று
நேற்று தென்மேற்குப் பருவக்காற்று பார்க்கச் சென்றிருந்தேன். பதிவர் வண்ணத்துப்பூச்சி சூர்யா அழைத்தார். பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்புக் காட்சி என்றும், பதிவர்களை அழைத்திருப்பதாகவும் சொன்னார். Four Frames எனது அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்ததால் வசதியாகப் போயிற்று. கிளம்பும் வேளையில் தூறல் ஆரம்பித்தது. இருந்தாலும் படம் பார்க்கும் ஆர்வத்திலும், பதிவர்களை சந்திக்கும் ஆர்வத்திலும் கிளம்பிவிட்டேன். பலர் தூறல் காரணமாக வரவில்லை. இருப்பினும், பிரபல பதிவர்கள் கேபிள் சங்கர் மற்றும் ஜாக்கிசேகர், சூர்யா, காவேரி கணேஷ், சமீபத்தில் புத்தகம் வெளியிட்ட சுரேகா ஆகியோர் […]
Despicable Me (2010)
ஒரு ஊர்ல ஒரு பலே திருடன் இருந்தானாம். அவந்தான் உலகத்துலயே பெரிய திருடன். அவனை மிஞ்ச ஆளே கிடையாதாம். ஒரு நாள், அவனையும் மிஞ்சுற அளவுக்குப் பெரிய திருடன் ஒருத்தன் முளைச்சானாம். நம்ம பலே கில்லாடி பண்ணின திருட்டுக்களையெல்லாம் மிஞ்சுற அளவுக்கு ஒரு திருட்டு பண்ணினானாம். அப்படி என்னத்த திருடினான் தெரியுமா? பிரமிடு ஒன்ன திருடிட்டானாம். அதக் கேள்விப்பட்ட நம்ம மெகா திருடன் இத விட பெருசா ஒன்ன திருடி, நாமதான் பெரிய திருடன்னு நிரூபிக்கத் திட்டம் […]
சத்தம் போடாதே, நிசப்தம் கூடாதே!
வழக்கமாக வீட்டிற்கு வந்தவுடன், நேரமிருப்பின் ஏதாவதொரு படத்தைப் போட்டுப் பார்ப்பது வழக்கம். நல்ல தெளிவான சப்தம், ஆக்சன் மற்றும் த்ரில்லர் காட்சிகளில் வீடே அதிரும். இதுநாள் வரை எனக்கு அதில் பிரச்சனை இல்லை, இப்போது தங்கமணி. வழக்கமாக இந்த நேரங்களில் தங்கமணி சமையலறையில் இருப்பார். இங்கே சரவுண்டு சவுண்டு அதிகமாகும்போதெல்லாம் அங்கிருந்து டிடிஎஸ் எபெக்டில் வரும். “ஏங்க இப்படி சத்தமா வைக்கிறீங்க, கொஞ்சம் கொறச்சு வச்சுப் பாத்தா ஆவாதா? எத்தன வாட்டிதான் சொல்றது?”. நான் என்ன வேண்டுமென்றா […]
Recent Comments