முக்கு: தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை இங்கே தனியே பதிவிடுவதால், இனி தேன்கூட்டில் அந்த மாதிரி தகவல்கள் இடம்பெறாது. வெளிநாட்டில் அண்ணன் கிகிஅண்ணன் கிகி இப்போது சார்ஜாவில் இருக்கிறார், மனைவியுடன். சொந்த விசயமாக சென்றுள்ள அவர், டிசம்பர் முழுவதும் அங்கேதான் இருப்பார். குப்பைத்தொட்டி நான் ஆதவன் நான் ’கவனித்துக்கொள்கிறேன்’ என சொல்லியிருக்கிறான். நல்லா கவனிச்சுக்கோப்பா. — பதிவர் சந்திப்புகள்வரும் வாரம் ஏதேனும் ஒரு நாள் நண்பர் ரோமியோபாய் சந்திக்க வருவதாகச் சொல்லியிருக்கிறார். வீட்டுக்குப் போகும் வழியில் சைதாப்பேட்டை ரயில் […]
தயக்கம், வியப்பு, உற்சாகம், மழை
நான் எழுத ஆரம்பித்த நேரமோ என்னவோ, மூன்று மாதங்களாகப் பதிவர் சந்திப்பே நடைபெறவில்லை. ஒரு வழியாக நேற்று நடந்தது. சந்திப்பு ஐந்து மணிக்கு, மெரினாவில், காந்தி சிலை முன்பு. நான்கு மணிக்கு கேபிள்ஜி சொன்னபடி பதிவர் வெங்கி ராஜாவை அசோக் பில்லரில் கோர்த்துக்கொண்டு மெரினா நோக்கிச் சென்றேன். காந்தி சிலை அடையும்போது மணி 4.45, ஆங்காங்கே மக்கள் கூட்டம். ‘அங்க பாருங்க, கேமராவும் கையுமா நாலு பேரு நிக்கிறாங்க, நம்ம சங்கத்து ஆளுங்களாத்தான் இருக்கும்’, என்றார் வெங்கி. […]
சிறுகதைப் பட்டறையில் பா.ரா.
சிறுகதைப் பட்டறை – எனது பார்வையில் – இதற்கு முன்னால் எழுதியது. சிறுகதைப் பட்டறையில் பா.ராகவன் அவர்களுடைய பகுதி இதோ. பவர் பாயிண்டில் அவர் அளித்ததை முடிந்த அளவு குறிப்பு எடுத்து இங்கு அளித்திருக்கிறேன். பத்திரிக்கைகளுக்கு எழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது கண்டிப்பாகப் பயன்தரும். — சிறுகதை நன்கு பிடிபட்ட, நவீன இலக்கியப் பரிச்சயமுள்ள, சிற்றிதழ் வாசிப்பு அனுபவமுள்ள நண்பர்களுக்கு இது உதவாது, வார இதழ்களில்/பத்திரிக்கைகளில் எழுத விருப்பம் உள்ளவர்களுக்கே இது. நல்ல சிறுகதைக்கு இலக்கணம் கிடையாது உண்மையை […]
சிறுகதைப் பட்டறை – எனது பார்வையில்
நான் மிகவும் எதிர்பார்த்த சிறுகதைப் பட்டறை, 13-09-2009 (ஞாயிற்றுக்கிழமை) இனிதே நடந்தது. இதைப் பற்றி சில பதிவுகள் வந்துவிட்டன. இருப்பினும் எனது பார்வையில் உங்களுக்கு சிறிது கிடைக்கலாம் என்பதற்காக இந்தப் பதிவு. சொன்னதுபோல மொத்தம் 4 எழுத்தாளர்கள் பேசினார்கள். முதலில் பாஸ்கர் சக்தி அவர்கள்இவருடைய பேச்சிலிருந்து நான் அறிந்துகொண்டது:* நிறைய படிக்கனும்* ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். அதையே தொடரலாம். நல்லா இருக்குன்னு பிறர் சொன்னதற்காக, நமது மண்டையில் ஏறாதவற்றை திணிக்க முயல வேண்டாம்.* கதையில் சுவாரஸ்யம் முக்கியம்.* […]
ஏதாவது கெடச்சுதா?
இந்த மொக்கை, மொக்கைவிரும்பி ஜெகநாதன் அண்ணன் அவர்களுக்கு சமர்ப்பனம்.—நா: ஏண்டா, கல்யாணமாகி மூனு மாசந்தான் ஆகுது… அதுக்குள்ள நைட்டுல வெளிய குடிக்க வந்துட்டியேடா! ஜெ: அவ்ளோதாண்டா மாப்ள. நா: அவளுக்குத் தெரியுமா? ஜெ: அவளுக்கு தெரியும்… ஆனா அம்மாக்குதான் தெரியாது. எங்கம்மாவப் பொறுத்தவர இப்ப நா ஆபீஸ்ல இருக்கேன். மத்தத அவ சமாளிச்சிக்குவா. நா: ச்ச… இந்த மாதிரி பொண்ணு எனக்கு எனக்கு கெடக்குமாடா? பெரியண்ணன்: அவனாவது பரவால்ல… இவனப்பாரு, ஒரு மாசந்தான் ஆகுது, பொண்டாட்டி ஊர்ல […]
சண்டை வராமலிருக்க ஒரே வழி
போனதடவ மச்சான் சக்கரை அட்வைஸ்+தத்துவ மழையில் ஒரு பதிவு போட்டிருந்தார். ஆனா நமக்குத்தான் ஒரு எழவும் புரியல. பதிவுலக வரலாறு தெரிஞ்சாத்தான் இவங்களோட பேனா சண்டை (பேனா முனை, கத்தி முனையை விடக் கூர்மையானது) புரியும் போல இருக்கு. புரியலன்னா போய்கிட்டே இருடா ஏனாவானான்னு(எவனோ ஒருவன், ஹி ஹி ஹி…) போய்கிட்டே இருந்தேன். இந்தத் தடவ பைத்தியக்காரனோட பதிவப் பார்த்தேன். சரி, நமக்கு இப்பவும் புரியாதுன்னு அப்படியே விட்டுருக்கனும். ஆபீஸ்ல, ஒரு வார புயலுக்குப் பின்னாடி, கொஞ்சம் […]
Recent Comments