இந்த மொக்கை, மொக்கைவிரும்பி ஜெகநாதன் அண்ணன் அவர்களுக்கு சமர்ப்பனம்.
—
நா: ஏண்டா, கல்யாணமாகி மூனு மாசந்தான் ஆகுது… அதுக்குள்ள நைட்டுல வெளிய குடிக்க வந்துட்டியேடா!
ஜெ: அவ்ளோதாண்டா மாப்ள.
நா: அவளுக்குத் தெரியுமா?
ஜெ: அவளுக்கு தெரியும்… ஆனா அம்மாக்குதான் தெரியாது. எங்கம்மாவப் பொறுத்தவர இப்ப நா ஆபீஸ்ல இருக்கேன். மத்தத அவ சமாளிச்சிக்குவா.
நா: ச்ச… இந்த மாதிரி பொண்ணு எனக்கு எனக்கு கெடக்குமாடா?
பெரியண்ணன்: அவனாவது பரவால்ல… இவனப்பாரு, ஒரு மாசந்தான் ஆகுது, பொண்டாட்டி ஊர்ல இருக்கா, இவன் வீட்டுக்குள்ளயே கச்சேரி நடத்திட்டு இருக்கான்.
ரா: ஒரு மாசம்லாம் இல்லண்ணே… ஒன்னா சேந்து இருந்தது 16 நாள்தான், அதுக்குள்ள ஆடி கீடின்னு பிரிச்சிட்டானுவ.
பெ: சரி சரி, உங்க அத்தான் வற்ர வர நமக்கு பொரும கெடயாது, கொழந்தய எவ்ளோ நேரம் வச்சு பாத்துட்டே இருக்குறது? ஒரு ரவுண்ட ஊத்து…
ஜெ: உனக்கு என்னிக்கித்தான் பொரும இருந்திச்சி, இந்தா… நாங்க வெய்ட் பண்றோம்…
.
.
.
நா: வாங்க அத்தான், உங்களுக்காத்தான் வெய்ட்டிங்.
பெ: உங்களுக்கு கம்பெனி குடுக்கவேனா? எனக்கும் ஊத்து…
ஜெ: இதுக்கு ஒரு காரணமா? ஊத்தி குடிக்கவேண்டியத்தான…
.
.
.
ரா: அண்ணே, உங்க மூளைய டெஸ்ட் பண்ணனுமா?
பெ: வயசாகிப்போச்சு… உடம்புல இருக்குற எல்லாத்தையுமே டெஸ்ட் பண்ணனுண்டா… எதுக்கு?
ரா: அந்த புக்குல ஜிகே கொஸ்டின்ஸ் இருக்கு, அத ஃபில்லப் பண்ணி டெஸ்ட் பண்ணிக்கலாம்.
நா: ஓ! அந்த புக்குல அந்த மேட்டர்தான் இருக்கா?
ஜெ: என்னது? மேட்டர் புக்கா?
நா: டேய்! மேட்டர் புக்கு இல்லடா… மேட்டர் உள்ள புக்கு.
.
.
.
நா: அத்தான், நீங்க சென்னைல சரக்கு வாங்கி அடிச்சிருக்கீங்களா? எல்லாம் டூப்ளிகேட்டு.
அ: நமக்கு அதெல்லாம் தெரியாதுப்பா, ஜானிவாக்கர் அடிச்சாலும் எம்சி அடிச்சாலும் ஒரேமாரித்தா இருக்கு.
ரா: ஸ்டார் ஓட்டல்ல பீர் குடிச்சா நல்லா இருக்கு அத்தான். ஆனா டாஸ்மாக்குல எல்லாம் டீப்ளிகேட்டு… இவன் கூட ஒரு தடவ கம்லெண்ட் பண்ணான் அத்தான்.
நா: ஆமா அத்தாங்… டாஸ்மாக், அப்புறோ கொஞ்சம் பார்ல மட்டும் சரக்கு சரில்லன்னு கிங் பிசர் கம்பெனிக்கு ஒரு மெயில் பண்ணேன், அடுத்த ஒருமண்ணேரத்துல போன் பண்ணிட்டானுவ.
பெ: அப்புறோ?
நா: இங்க சரக்கு ஒன்னும் சரில்ல சார்னேன், அதுக்கு அவென் ஸ்டார் ஓட்டல்ல பிரிச்சில வச்சிருப்பாங்க, டாஸ்மாக்ல வெக்கல, அதன்ன்னான். அப்போ தூத்துக்குடி டாஸ்மாக்குல மட்டும் எப்படி நல்லாருக்குன்னேன். நாங்க நல்லாத்தான் தயாரிக்கிறோம், வேன்னா, பேக்டரிக்கு வந்து பாருங்க, ஏற்பாடு பண்றேன்னான். அதெல்லா வேனா, உங்க தயாரிப்புல ஒன்னும் சந்தேகம் இல்ல, சப்லைல ஏதோ ப்ராப்லொ, அத சரி பண்ணுங்கனு சொல்லி வெச்சிட்டேன்.
அ: நல்லவேல போவல, போருந்த… உள்ள வெச்சி கும்ரு கும்ரு கும்ரிப்பானுவ.
பெ: எனக்கெல்லாம் அப்படி ஒன்னுந்த் தெர்ர்லயே!
ஜெ: அதெல்லாம் மினிஸ்டர் பேக்டரிலர்ந்து வர்தாம்ணே.
ரா: அதெல்லாம் இல்லடா… பெரிய கடைக்கி தனி சரக்கு, சின்ன கடக்கி குவாலிட்டி கம்மியான சரக்குனு சப்லை பண்றானுவலாம்.
அ: அப்படியெல்லாம் இருக்காதுப்பா.
ரா: ஏண்டா… இப்போ ஏதோ நெட்டுல எழுதுறியே… இதெல்லாம் அதுல எழுதுவியோ?
நா: ச்சச்ச… இதெல்லாம்போயி எழுதுவேனா? ஏதாவது உருப்புடியா சொல்லு, எழுதுரேன்.
ரா: உருப்புடியானா?
நா: ஒரு ஜோக் சொல்லேன்.
ரா: ……. ஓக்கெ. இப்படித்தாண்டா, சங்கர்னு ஒருத்தரு, சரியான நக்கல் பார்டி, ஓட்டலுக்குப் போனாரு. சர்வர் பொங்கலக் கொண்டுவந்து வெச்சிட்டு, ‘பொஙகலுக்கு என்ன வேனும்னாரு’, இவரு ‘பொங்கலுக்கு ஒரு சட்ட மட்டும் எடுத்துகுடுங்க போதும்னாரு’… எப்டி?
நா: பர்வால்ல…
ரா: ஆமா… இதுல எழுதுறியே, ஏதாவது கெடச்சுதாடா?
ரா: கெடச்சது கெடச்சது. ஆரம்பிச்ச ரெண்டு மாசத்துலயே ஒரு அவார்டு கெடச்சதுடா. கீழ பாரு.
—
இண்ட்ரஸ்டிங் பிலாக்கா? அப்படியா சொல்றீங்க? இதுக்கு எனக்கு தகுதி இருக்கோ இல்லையோ தெரியாது. இண்ட்ரஸ்டிங் அவார்டா இல்லன்னாக் கூட பரவால்ல, இத ஒரு என்கரேஜிங் அவார்டா நெனச்சிக்கிறேன். என்ன இருந்தாலும் பாராட்டுறதுக்கும், பரிசு குடுக்குறதுக்கும் ஒரு மனசு வேணும்ல. அந்த வகைல, சங்கா அண்ணனுக்கு நா பெரிய நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். நன்றி அண்ணே.
—
அதே மாதிரி, எனது நண்பர்களையும் நான் ஊக்குவிக்க (ஊக்கு விக்கிறவங்க குறுக்க வராதீங்க) கடமைப்பட்டிருக்கேன். இதை ராஜ், எழில் மற்றும் ஜோதி அவங்களுக்கு என்கரேஜ்மெண்ட் அவார்டா குடுக்குறேன்.
ராஜ் – கவுண்டர் அட்டாக்கில் வல்லவர். சமீபத்தில் ஏதோ மன உழைச்சலின் காரணமாய், எழுதுவதில்லை என முடிவு செய்துவிட்டார். இதைக் கொடுப்பதன் மூலம், மீண்டும் அவரை எழுதுவதற்கு அழைக்கிறேன்.
எழில் – மச்சான் எழில், 2007 ல் எழுத ஆரம்பித்து, சிலவற்றுடன் நின்றுவிட்டார். மீண்டும் இப்போது எழுத ஆரம்பித்துள்ளார். அவர் மீண்டும் நின்றுவிடாமல் இருக்க இந்த என்கரேஜ்மெண்ட் அவார்ட் உதவட்டும்.
ஜோதி – எதிர்பதிவையும் எதிர்ப்பவருக்குப் பிடிக்கும்விதத்தில் போட்டவர். பின்னூட்டத்தில் தனி கவனம் காட்டுபவர். இவரும் தொடர்ந்து எழுத இந்த ஊக்குவிப்பு.
நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவர்களை, நண்பர்களை இந்த அவார்டைக் கொடுத்து ஊக்குவிப்பீர்கள் என நம்புகிறேன்.
நன்றி.
—
-ஏனாஓனா.
மாப்பு,
இதுக்கு கண்டிப்பா நன்றினு ஒத்த வார்த்தைய சொல்லி நான் நிறுத்த போறதில்ல.. இதுக்கு கண்டிப்பா ஒரு பதிவ போட்டு என் எண்ணத்த சொல்ல போறேன். ஒருத்தர மனசு விட்டு பாராட்டுரதுன்றது யாருக்கும் அவ்வளவு சாதாரணமா அமையுற குணம் இல்ல.. அது உங்களுக்கு அது நிறையவே இருக்கு.
உங்க ஊக்குவிப்பு ஒண்ணே போதும், நான் பதிவு எழுத.. இதுக்கு மேலே எழுத வார்த்த வர மாட்டேங்கிது..!!!
விருதை மதித்து உடனே தொடர்ந்ததற்கு நன்றி. தகுதில்லாம் இருக்குங்க!, கூச்சப்படாம தூள் கிளப்புங்க! இதிலேயே பாருங்களேன் அப்படியே தம்பி ஜெகநாதனுக்காக ஒரு மொக்கையைப் போட்டு ஒரு ஃப்ளோவுல கொண்டு வந்து மத்தவங்களுக்கு விருது குடுத்திருக்கீங்களே! நல்லாருக்கு! நீங்க விருது குடுத்திருக்கிறவங்களை இதுவரை படித்ததில்லை. இதை ஒரு அறிமுகமாக எடுத்து அவர்களையும் படித்துப் பார்க்கிறேன்.
அப்புறம் அந்த பொங்கல் ஜோக், தம்பியோட ”பொறுமை”யைச் சோதிக்கிற ஜோக்குக்குப் பதிலடியா?! சபாஷ் சரியான போட்டி!
தம்பி ஜெகநாதா! உன்னோட அடுத்த மொக்கை என்ன?
என்னங்க இது? விருதா? ரொம்பவும் கூச்சமா இருக்குங்க.. ஆனாலும் உங்க அன்பை தட்ட முடியல.. கண்டீப்பா ஏத்துக்கிறேன்.. நானும் மற்றவங்கள அறிமுகப்படுத்துறேன்.
ஐயோ அவார்டெல்லாம் கொடுக்கிறாங்க அப்பு…………!!
மிக்க நன்றி. விருதுக்கெல்லாம் நான் ஒர்த்தான்னுதான் தெரியல, இருந்தாலும் என்னையும் மதிச்சு விருது கொடுத்த முதல் (ஒரே) ஆள் நீங்கதான். மிக்க மகிழ்ச்சி. சர்ரி,. என் பதிவுகள் அவ்வளோ நல்லாவா இருக்கு?? என்னம்மோ போங்க, எதோ உங்கள மாதிரி அப்பாவி ஆளுங்க இருக்கிறதாலதான் எதோ நம்ம பொழப்பு ஓடுது,..
சங்கா said…
//தகுதில்லாம் இருக்குங்க!, கூச்சப்படாம தூள் கிளப்புங்க!//
நன்றிண்ணே!
//இதை ஒரு அறிமுகமாக எடுத்து அவர்களையும் படித்துப் பார்க்கிறேன்.//
பாருங்க, நல்லாருக்கும்.
//அப்புறம் அந்த பொங்கல் ஜோக், தம்பியோட ”பொறுமை”யைச் சோதிக்கிற ஜோக்குக்குப் பதிலடியா?! சபாஷ் சரியான போட்டி!//
அதப் பத்தி தெரியலயே! அது என்னன்னு பாக்குறேன்.
//தம்பி ஜெகநாதா! உன்னோட அடுத்த மொக்கை என்ன?//
அதுக்குத்தான் வெய்ட்டிங்.
//எழில். ரா said…
உங்க ஊக்குவிப்பு ஒண்ணே போதும், நான் பதிவு எழுத.. //
இன்னும் நல்லா, நிறைய எழுதுங்க.
//குறை ஒன்றும் இல்லை !!! said…
என்னங்க இது? விருதா? ரொம்பவும் கூச்சமா இருக்குங்க.. ஆனாலும் உங்க அன்பை தட்ட முடியல.. கண்டீப்பா ஏத்துக்கிறேன்.. நானும் மற்றவங்கள அறிமுகப்படுத்துறேன்.//
நன்றி ராஜ்.
// jothi said…
என் பதிவுகள் அவ்வளோ நல்லாவா இருக்கு?? என்னம்மோ போங்க, எதோ உங்கள மாதிரி அப்பாவி ஆளுங்க இருக்கிறதாலதான் எதோ நம்ம பொழப்பு ஓடுது,..//
என்னங்க இது. நம்மளே நம்மள பாராட்டிக்கலன்னா யாரு வந்து பாராட்டுவாங்க. உண்மையிலேயே நல்லாத்தான் இருக்கு உங்க பதிவுகள். கலக்குங்க.
//கிறுக்கல் கிறுக்கன் said…
ஐயோ அவார்டெல்லாம் கொடுக்கிறாங்க அப்பு…………!!//
நீங்களும் நல்லா எழுதுங்க, கூடிய சீக்கிரம் இதே மாதிரி உங்களுக்கும் கிடைக்கும்.
என்னங்க இது. நம்மளே நம்மள பாராட்டிக்கலன்னா யாரு வந்து பாராட்டுவாங்க. உண்மையிலேயே நல்லாத்தான் இருக்கு உங்க பதிவுகள். கலக்குங்க.
thanks
என்னையும் ஒரு மனுசனா மதிச்சு, இடுகையப் போட்டு, இடுகையிலியே சரக்கயும் ஊத்தி.. (போனவாரம் சித்ரா காலண்டர் ராசிபலன்ல நம்ம கன்னி ராசிக்கு – 'ஓசிக்குடி'ன்னு போட்டிருந்துச்சு; அதுக்கு அர்த்தம் இப்பதான் புரியுதுப்பா!) அவ்வ்வ்வ்…!! மாப்ள, ஒரிசினல் கிங்பி அடிச்சமாதிரி மப்பு கண்ணக் கட்டுது!
//அவளுக்கு தெரியும்… ஆனா அம்மாக்குதான் தெரியாது//
சங்கத்து உண்மையெல்லாம் அப்பிடியே வெளிய சொல்லப்பிடாது. ரொம்ம்ம்ப லேட்டா வந்ததுக்கு நீ கிங்பி காலி பாட்டில்லை சாணைப் பிடிச்சு என்னைக் குத்தலாம்டா மாப்பு!! மன்னிச்சுக்கோவ்வ்வ்! என்னமா லந்து பண்ணியிருக்காரு ஆளு! சூப்பரப்பு! அவார்டுக்கு வாழ்த்துக்கள் மாப்பு!
பட்டையக் கிளப்பு! நீ இன்னும் பெரிய்ய்ய பெரிய அவார்ட்டெல்லாம் வாங்கி வெற்றி நடைபோட இப்பவே எங்க சங்கா அண்ணன் விரலைக் கீறி ரத்தத் திலகம் வைக்கிறேன் மாப்ள!!! பட்டாசுக் கிளப்பு! அப்புறம் மாப்ள அவார்ட் கொடுத்த மக்களுக்கும் வாழ்த்துக்களச் சொல்லி ரத்தத் திலகம் வைக்கி….. ண்ணா.. ண்ணா.. ஏன் சங்கா அண்ணன் இப்பிடி தெறிச்சுக் கிட்டு ஓடறாரு????
//சங்கத்து உண்மையெல்லாம் அப்பிடியே வெளிய சொல்லப்பிடாது.//
அட நீங்க வேற, அன்னைக்கி நைட்டே அவங்க அம்மாகிட்ட மொத்த கூட்டமும் மாட்டி, அவன் அவனோட பொண்டாட்டிகிட்ட தனி அர்ச்சனை வாங்கி… அதெல்லாம் தனிக்கத.
—
நா அண்ணேன்னேன், நீங்க என்ன மாப்பு ஆக்கி, நீங்க மாம்ஸ் ஆகி ரொம்ப க்ளோஸ் ஆக்கிட்டீங்க.
நன்றி.