சென்னை ஏர்போர்ட் டாக்ஸி பிக்கப் பாவங்கள்: ஓர் எளிய பயணம், இத்தனை சிக்கல்களா?

கடந்த மூன்று வருடங்களாகப் பணி மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அடிக்கடி டெல்லிக்கும், ஒரு முறை மும்பைக்கும் சென்று வந்துள்ளேன். பிற நகரங்களின் விமான நிலையங்களை விட, சென்னையில் இறங்கும்போது மட்டும் நாம் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை உண்டு; அதுதான் — டாக்ஸி பிக்கப் (Taxi Pick-up). Aerohub கட்டிடமும், பயணிகளின் அவஸ்தைகளும் முன்பெல்லாம் சென்னை டொமஸ்டிக் அரைவல் (Domestic Arrival) பகுதியிலிருந்து வெளியே வந்ததும், தேசியக் கொடி கம்பத்திற்கு அருகே நின்று ‘உபேர்’ (Uber) அல்லது […]

ஒரு குடும்ப விழாவை நடத்திய எனது நேரடி அனுபவங்கள்!

சமீபத்தில் (ஆகஸ்ட் 9, 2026 – ஞாயிற்றுக்கிழமை) என்னுடைய இரண்டாவது மகளின் ‘முதல் நற்கருணை விழா’வை (First Holy Communion) நல்லபடியாக நடத்தி முடித்தோம். ஒரு விழாவைத் திட்டமிட்டு நடத்தும்போது எவற்றையெல்லாம் சரியாகச் செய்தோம், எவற்றில் தவறுகள் நடந்தன என்பதை வருங்கால நினைவிற்கும் பயன்பாட்டிற்கும் இங்கே பதிவிடுகிறேன். விழாத் திட்டமிடலும் தங்குமிடம் / போக்குவரத்து ஏற்பாடுகளும் இந்த முக்கியமான நிகழ்வு தேவாலயத்தில் காலை 10:30 மணிக்கு ஆரம்பித்து, 12:00 மணிக்கு முடிந்தது. அதன் பிறகு அருகில் உள்ள […]

சென்னை வர்தா புயல்

நாள்: 12-டிசம்பர்-2016 புயல் வலுவாக இருக்கும் என்று முன்பே சொல்லப்பட்டது, 100km/h வேகத்தில் காற்று அடிக்குமாம். இதற்கு முன்பே புயலைப் பார்த்ததில்லை, எனவே இதன் வீரியம் புரியவில்லை. வழக்கம்போல திங்கள் கிழமை அலுவகம் சென்றாயிற்று. கிளம்பும் முன்னே, அலுவல மெயிலைப் பார்த்தேன், விடுமுறை இல்லை என்ற அறிவிப்பே இருந்தது. வந்தபின்தான், விடுமுறை அறிவிப்பு வந்தது. திரும்பவா முடியும்? மழை விட்டவுடன் செல்லலாம் என்று இருந்துவிட்டேன். சிரமப்பட்டுத்தான் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தேன். என்னுடன் சிலர் இருந்தனர், அலுவலகத்தில். காற்று […]

செல்லாக் காசு

நாள்: டிசம்பர் 20, 2016 நவம்பர் 8ம் தேதி (8/11), இந்த நாள் வரை மட்டுமே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும். நாளை முதல் செல்லாது என, நாட்டின் பிரதமர் திரு. மோடி அவர்கள் அறிவித்தார். அன்று இரவு, தாமதமாகத்தான் வீட்டுற்கு வந்தேன். வாட்ஸாப்பில் முதலில் ஒரு செய்தி இது பற்றி… நம்பவில்லை. வழக்கம்போல புரளியாக இருக்குமென்று நினைத்தேன். மீண்டும் அதே செய்தி பலரிடமிருந்து வந்தவுடன் புரிந்துகொண்டேன். மறுநாள் அலுவலகம் வரும்போது வழியில் சில […]

ஒரகடம் டூ தாம்பரம்

சென்னையைப் போன்று பேருந்து வசதி வேறெங்கும் இல்லையென்ற நினைப்பு எனக்கு. சென்னையை விட்டால் பெங்களூர்தான் தெரியும். இங்கு அதிகம் பேருந்தில் செல்வதில்லை. பொதுவாக, எங்குமே செல்வதில்லை. பிறகு எப்படித் தெரியும்? ஆனாலும், ஊருக்குச் செல்லும்போது, தொடர்வண்டி நிலையம் செல்ல பேருந்துவசதி போதுமானதாக இல்லை. எப்படியும் இரு பேருந்துகள் மாறிச்செல்லவேண்டும். குழந்தை குட்டி வைத்துக்கொண்டு இதெல்லாம் எதற்கு என டாக்சிதான். ஆட்டோவெல்லாம் நமது பட்ஜெட்டுக்கு ஒத்துவராது! டாக்சி சொல்லி, அது நேரத்திற்கு வந்து, பெங்களூர் டிராபிக்கிற்குள் புகுந்து ட்ரெயினைப் […]

பெங்களூரில் சில நம்பிக்கைகள்

ஒரே நாளில் இரு வெவ்வேறு மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் ஒரு துருவம் என்றால் இன்னொருவர் எதிர் துருவம். குக்கரில் விசில் வருவதில்லை. கேஸ்கெட்டை மாற்ற வேண்டும் என்றார் தங்கமணி. அழைத்துக்கொண்டு மெயின் ரோடு அருகே இருக்கும் கடைக்குச் சென்றேன். கேஸ்கெட்டையும் எடுத்துச் சென்றிருந்தோம். அது ஒரு ஹிந்திவாலா கடை. கொண்டுவந்தது கொடுத்ததும் உள்ளே சென்று, கொஞ்ச நேரம் தேடிய பின், ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார். நான் ஒன்றன்மேல் ஒன்று வைத்துப் பார்த்தேன். அவன் கொடுத்தது கொஞ்சம் […]