அருகில் உள்ள மரங்கள் அகன்று செல்ல, தொலை தூர மரங்கள் துரத்தி வர, ரசிக்கிறேன் இயற்கையை ரயில் பயணங்களில்…….. Thank you for reading. 🙂
கார்கிலில் வெற்றி உனக்கே(MAY – 99)
*எல்லை மீறிய எத்தர்களை அழிக்க நய வஞ்சக நரிகள் நம் நாட்டில் புகாமல் இருக்க, இளஞ்சிங்கமே! எழுந்துவிடு. தடைகள் இமயம் போன்றதெனிலும் இடித்து விடு! தாயகத்தைஇமைபோல் காக்க இன்றேபுறப்படு! திண்ணமானதீர்மானங்களை கையில்கொண்டுவிடு! தீரத்துடன்போராட முடிவெடு! துன்பங்களைதுக்கமென நினைத்துவிடு! தூக்கம்இமைகளை அணுகாமல்இருக்கவிடு! தென்படும்எதிரிகளை பந்தாடிவிடு! தேசத்தைகாக்க விழித்துவிடு! தைரியத்தைமற்றவர்க்கு புகட்டிவிடு! தொல்லையின்றிதேசத்தை வாழவிடு! தோட்டாக்களால்எதிரிகளை அழித்துவிடு! தெளத்யத்தில்வெற்றி உனக்கேபுரிந்துவிடு! *இளஞ்சிங்கமேஇன்றே புறப்பட்டுவிடு“வந்தே மாதரம்” பி.கு:-1999-ம் ஆண்டு கார்கில் போர் ஆரம்பித்த 3-ஆம் நாள்என் மனதில் தோன்றிய வரிகள். —கி.கி […]
வலையில் வந்தவை-2
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.. ஏன் தெரியுமா? “பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று.. இப்படிக்கு Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம் அவள் என்னை திரும்பி பார்த்தாள்.. நானும் அவளைப் பார்த்தேன்.. அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள் நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்.. இப்படிக்கு பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல் திருதிரு வென முழிப்போர் சங்கம் காதல் One Side –ஆ பண்ணினாலும் Two side-ஆ பண்ணினாலும் கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது இப்படிக்கு காதல் பற்றி Four Side-ம் […]
ஆற்காட்டாருக்கு நன்றி
அன்று ஞாயிற்று கிழமை, வீட்டின் முன்புற அறையில் வெறும் தரையில் அமர்ந்து எனது சகோதரன் அதிபிரதாபன் அளித்த கிமு கிபி என்ற புத்தகத்தை மூன்றாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் கேரளாவிலிருந்து விடுமுறை கழிக்க வந்திருக்கும் எனது சகோதரி பீனா(BEENA) “எந்தா அச்சாச்சா வாயுக்குந்நு” (என்ன அண்ணா படிக்கிறீர்கள்) என்று கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தாள். அவளுக்கு புத்தகத்தை குறித்து சில விஷயங்களை மலையாளத்தில் கூறி புரிய வைத்தேன். அதன் பின் அத்தை மகள் நித்தியா ”அத்தான் […]
நில் கவனி செல்லாதே செய்.
நீங்கள் எப்போதாவது உங்கள் கேஸ் சிலிண்டரின் (expiry date’) காலக் கெடு குறித்து கேள்வி பட்டதுண்டா, உண்டெனில் கவனித்ததுண்டா?! கவனித்ததில்லையெனில் இனி கவனியுங்கள். அதைப்பற்றி தெரியாது என்றால் நான் சொல்கிறேன் கேளுங்கள். சிலிண்டரின் பிடியில் A or B or C or D-ம் அதனுடன் 2 இலக்க எண்ணும் இருக்கும். எ.கா:- D-06,A-13 இதன் பொருள் 1. A for March (First Qtr),A மார்ச் முதல் காலாண்டு் 2. B for June (Second […]
நாம் யார் ?
வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் ! வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்த நடை பிணங்கள் ! சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் ! நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் ! தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள் ! கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள்! […]
Recent Comments