நீ என் அகத்திற்கு வருகிறாய் என்றதும் என் அகத்தின் உவகை உலகறியாதது. குறுகுறுப்புடனும் கூதுகலத்துடனும் காத்திருந்தேன் கண்மணியே, ஈராறு நாட்கள் பலநூறு யுகங்கள் போல்! என் தந்தை தமையனுடன் தவழ்ந்து வந்த தேரில்(காரில்) நீ வந்திறங்கியபோது – உன் வதனம் கண்டு ஒரு தேவதை என்றே எண்ணியது என் மனம். உனைப் பாராமல் உன் மேல் நான்கொண்ட ஈர்ப்பு உனைக் கண்டதும் பல மடங்கானது . கண்டதும் ஓடி வந்து கட்டியணைக்க வேண்டுமென்ற அவாவை கட்டுப் படுத்தினேன் […]
கல்லூரி பூக்கள்
அழகிய கல்லூரி பூக்களில் கல்வியே சிறந்தது என கற்கும் சில, காதல்தான் எல்லாம் என அலையும் சில, கிண்டலால் பிறர் மனதை வருத்தும் சில, கீழான பழக்கங்களால் வருத்தும் சில, குற்றம் கூறியே குறைபடும் சில-வேண்டா கூட்டம் கூடியே அழியும் சில- தானும் கெட்டு அருகிலுள்ளதையும் அழிக்கும் சில, கேவலமான வாழ்க்கையை விரும்பும் சில, கையாலாகாதவை என் பட்டம் பெறும் சில, கொட்டமடித்தே தினம் வட்டம் போடும் சில, கோபமே கொள்ளாமல் அமைதியாய் சில, கெளரவமாய் நடந்து […]
எங்கே இருக்கின்றாய்
என்னவளே நெற்றிக்கு பொட்டு வைத்தாய்; நிலவையே நீ தொட்டு வைத்தாய்; என்னை மட்டும் ஏன் விட்டு வைத்தாய்? கண்ணுக்கு மை தீட்டுகின்றாய்; கண்ணானவன் எனை மட்டும் ஏன் வாட்டுகின்றாய்? உன் உதடுகள் மின்னுதடி சாயத்தில்; என் உள்ளமன்றோ உருகுதடி காயத்தில்; ஆயிரம் கவிதைகள் கிடைத்துவிட்ட ஆதாயத்தில்; பல்லாயிரம் கற்பனையில் மிதக்கின்றேன் ஆகாயத்தில்; ஆகாயத்தில் கார்மேகங்கள் சூழ்ந்த்தால் ஆலாபனை பாடுகிறேன் வாடி முகத்தில் கருரோமங்கள் சூழ்வதால் ஆகிவிடுகின்றன தாடி காதலை தேடிப்போனேன் கவி பாடி காதலி உன் பெயரை […]
நிறம் மாறும் உறவுகள்
”ஏங்க போய்த்தான் ஆகணுமா” “வேற என்ன செய்யச் சொல்ற” “நாம இங்க ஏதாவது வியாபாரம்…” “என்ன வியாபாரம் பண்ண முடியும் அப்படி பண்றதா இருந்தாலும்பணத்துக்கு எங்கே போறது” “வெளிநாட்டுக்கு போக செலவு செய்யிற காசுல வியாபாரம் ஆரம்பிக்கலாமில்லையா”? “ஆரம்பிக்கலாம்,ஆன வருமானம் அதிகமாக ஒன்றும் வராதே” “கிடைக்கிறத வச்சுட்டு,நாமும் பிள்ளையும் ஒரு வேளை கஞ்சி குடித்தாவது நிம்மதியா இருக்கலாம் “இந்தாப்பாரு உனக்கு இப்போ ஆறு மாதம்,அடுத்த மாதம் நீ உன் அம்மா வீட்டுக்கு போயிடுவ அப்படி ஒரு 6 […]
யார் குருடன்?
ஆதவன் அணையும் அந்தி வேளை அழகாக இருந்தது ஆகாயக காட்சி பறவைகளின் அணிவரிசை பார்த்தேன் பரவசமாய் மாலை நேரத்து மழையை வரவேற்க்கும் வானவில் மகிழ்ந்தேன் அதைக்கண்டு சற்றே திரும்பினேன் என்னை கடந்து சென்றனர் சில கண் தெரியாதவர்கள் நான் கண்ட ரசித்தவற்றை இவர்கள் கண்டு ரசிக்க முடியாதே என்று கண் கலங்கினேன் திடீரென ஒரு அசரிரீ என் முன்னால் கேட்டது “ஏண்டா சாவு கிராக்கி கண்னு தெரியாதா உனக்கு காயப் போட்டிருக்க கருவாடு மேல நடக்கிற” அப்போதுதான் […]
கேரளாக்காரர்கள் கேனையர்களா?
13/9/09 அன்று தொலைகாட்சியின் சானல்களை புரட்டிக்கொண்டிருந்த போது ஏஷியா நெட் சானல் வந்ததும் நமது குப்பைத்தொட்டி – ஆதவன் சொன்னது போல் சுவராசியமாக ஏதாவது கிடைக்குமா என்று பார்தேன் நான் பார்த்தது மதிய நேரம் என்பதால் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது படத்தின் பெயர் ”பாண்டிப்படை” படத்தின் பெயரில் என்ன இருக்கிறது என்கிறீர்களா. 400 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் நாடாகவே இருந்து,தற்போதும் நமது உதவியால் வயிற்றைக் கழுவும் கேரள நாட்டவர் அழைப்பது ”பாண்டிகள்” என்று ஆனால் அவர்களுக்கு இங்கு […]
Recent Comments