வெள்ளை மின்னலே…!

Published by: 10


நீ

என் அகத்திற்கு வருகிறாய் என்றதும்
என் அகத்தின் உவகை உலகறியாதது.



குறுகுறுப்புடனும் கூதுகலத்துடனும்
காத்திருந்தேன் கண்மணியே,
ஈராறு நாட்கள்
பலநூறு யுகங்கள் போல்!


என் தந்தை தமையனுடன்
தவழ்ந்து வந்த தேரில்(காரில்)
நீ
வந்திறங்கியபோது – உன்
வதனம் கண்டு ஒரு தேவதை
என்றே எண்ணியது என் மனம்.



உனைப் பாராமல்
உன் மேல் நான்கொண்ட ஈர்ப்பு
உனைக் கண்டதும் பல மடங்கானது
.


கண்டதும் ஓடி வந்து
கட்டியணைக்க வேண்டுமென்ற அவாவை
கட்டுப் படுத்தினேன் தந்தையின்
கண்ணசைவில்.


உனக்கும் என் மீது
உண்மையாகவே ஒரு தனி ஈர்ப்பு
இருந்ததால் தானே
யாராவது என்னை வசைபாடினால்,
ஒரு மூலையில் அமர்ந்து
இருவர் முகத்தையும் பார்ப்பாய்…?!



எல்லோரும் இறைவனிடம் வேண்டும்
வேளையில்
என்னை உன் காலால்
தட்டுவாயே..?!



அர்த்த ராத்திரியில்
அனைவரும் சயனிக்கையில்
சத்தமில்லாமல் என் போர்வைக்குள்
நுழைவாயே..!?



பின்
என் காதில்
செல்ல கடி கடித்து
என்னை எழுப்புவாயே..!?


எழுப்பி என் மார்பில்
தலைசாய்ந்து உறங்குவாயே..?!


நான் விரும்பும் ,
என்னை விரும்பும்,
எதுவும் நிலைப்பதில்லை அன்று.

அது
உன் விஷயத்திலும்
உண்மை ஆகிவிட்டதே..?!

சத யுகங்கள் நீ என்னுடன்
இருப்பாயென அகமகிழ்ந்தேனே..?!

தச நாட்களில் எனை விட்டும்,
என் அகம் விட்டும்,
இவ்வையகம் விட்டும் சென்றாயே..?!

என் “வெள்ளை மின்னலே




—கி.கி
Thank you for reading. 🙂

10 comments

  1. Jana

    இதே அனுபவம் எனக்கும் இருந்தது. அனால் அந்த ஜீவன் ஆறுமாதங்கள் என்னுடன் நானாகவே இருந்தது. என் கண்முன்னால் என்னைப்பார்த்துக்கொண்டே அது ஆவிபிரிந்தில் இருந்து இன்றுவரை நான் வேறொன்றை அதுவாக ஏற்றதில்லை.
    நெஞ்சம் மறக்காத என் லக்கியின் ஞாபங்களை மீட்டிவிட்டீர்கள்…

  2. க.பாலாசி

    ஆரம்ப வரிகளில் காதலிக்கானது என்று யூகிக்க வைத்துவிட்டு பின்னர் இப்டி முடிச்சிட்டீங்களே தல.

    இடைபட்ட வார்த்தைகள் மிக அழகாக கோர்ந்துள்ளன. அருமை….

  3. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    @Jana

    ஜனா உங்களுக்கு 6 மாதங்கள், எனக்கு பத்தே நாட்கள். எனக்கும் உங்களைப்போல் வேறு பல வந்தாலும் அதன் மேல் இருந்த ஈர்ப்பு எதன் மேலும் வரவில்லை.

    @க.பாலாசி

    நன்றி

    @kanagu

    நன்றி தம்பி

    @Bhuvanesh

    நன்றி பாஸ்

Leave a Reply