நாள்: 12-டிசம்பர்-2016 புயல் வலுவாக இருக்கும் என்று முன்பே சொல்லப்பட்டது, 100km/h வேகத்தில் காற்று அடிக்குமாம். இதற்கு முன்பே புயலைப் பார்த்ததில்லை, எனவே இதன் வீரியம் புரியவில்லை. வழக்கம்போல திங்கள் கிழமை அலுவகம் சென்றாயிற்று. கிளம்பும் முன்னே, அலுவல மெயிலைப் பார்த்தேன், விடுமுறை இல்லை என்ற அறிவிப்பே இருந்தது. வந்தபின்தான், விடுமுறை அறிவிப்பு வந்தது. திரும்பவா முடியும்? மழை விட்டவுடன் செல்லலாம் என்று இருந்துவிட்டேன். சிரமப்பட்டுத்தான் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தேன். என்னுடன் சிலர் இருந்தனர், அலுவலகத்தில். காற்று […]
செல்லாக் காசு
நாள்: டிசம்பர் 20, 2016 நவம்பர் 8ம் தேதி (8/11), இந்த நாள் வரை மட்டுமே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும். நாளை முதல் செல்லாது என, நாட்டின் பிரதமர் திரு. மோடி அவர்கள் அறிவித்தார். அன்று இரவு, தாமதமாகத்தான் வீட்டுற்கு வந்தேன். வாட்ஸாப்பில் முதலில் ஒரு செய்தி இது பற்றி… நம்பவில்லை. வழக்கம்போல புரளியாக இருக்குமென்று நினைத்தேன். மீண்டும் அதே செய்தி பலரிடமிருந்து வந்தவுடன் புரிந்துகொண்டேன். மறுநாள் அலுவலகம் வரும்போது வழியில் சில […]
ஒரகடம் டூ தாம்பரம்
சென்னையைப் போன்று பேருந்து வசதி வேறெங்கும் இல்லையென்ற நினைப்பு எனக்கு. சென்னையை விட்டால் பெங்களூர்தான் தெரியும். இங்கு அதிகம் பேருந்தில் செல்வதில்லை. பொதுவாக, எங்குமே செல்வதில்லை. பிறகு எப்படித் தெரியும்? ஆனாலும், ஊருக்குச் செல்லும்போது, தொடர்வண்டி நிலையம் செல்ல பேருந்துவசதி போதுமானதாக இல்லை. எப்படியும் இரு பேருந்துகள் மாறிச்செல்லவேண்டும். குழந்தை குட்டி வைத்துக்கொண்டு இதெல்லாம் எதற்கு என டாக்சிதான். ஆட்டோவெல்லாம் நமது பட்ஜெட்டுக்கு ஒத்துவராது! டாக்சி சொல்லி, அது நேரத்திற்கு வந்து, பெங்களூர் டிராபிக்கிற்குள் புகுந்து ட்ரெயினைப் […]
பெங்களூரில் சில நம்பிக்கைகள்
ஒரே நாளில் இரு வெவ்வேறு மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் ஒரு துருவம் என்றால் இன்னொருவர் எதிர் துருவம். குக்கரில் விசில் வருவதில்லை. கேஸ்கெட்டை மாற்ற வேண்டும் என்றார் தங்கமணி. அழைத்துக்கொண்டு மெயின் ரோடு அருகே இருக்கும் கடைக்குச் சென்றேன். கேஸ்கெட்டையும் எடுத்துச் சென்றிருந்தோம். அது ஒரு ஹிந்திவாலா கடை. கொண்டுவந்தது கொடுத்ததும் உள்ளே சென்று, கொஞ்ச நேரம் தேடிய பின், ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார். நான் ஒன்றன்மேல் ஒன்று வைத்துப் பார்த்தேன். அவன் கொடுத்தது கொஞ்சம் […]
டிவி வாங்குவது எப்படி
ஊட்டி நண்பர் ஏற்கனவே சொல்லியிருந்தார். ஊரிலிருந்து ஒரு “கலைஞர் டிவி”யைக் கொடுத்துவிட்டிருக்கிறார்கள், நண்பர் ஒருவரிடம் இருக்கிறது, சென்று வாங்கவேண்டும் என்று. இரண்டு வாரத்திற்கு முன்னால் கிளம்பலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால் முடியவில்லை. வெள்ளி இரவு மறுநாள் போகலாம் என பேசிக்கொண்டோம். மறுநாள் காலை கல்லூரியில் படித்த நண்பனின் நிச்சயதார்த்தம். அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தேன். மழை வேறு. வீட்டிற்கு கிளம்பவும் மழை விடவும் சரியாக இருந்தது. வழக்கம்போல மழைவிட்ட டிராபிக். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். அப்போதுதான் நண்பர் […]
கடந்த வெள்ளிக்கிழமை
இந்த வெள்ளியும் வழக்கம்போல விடிந்தது. முந்தைய நாள் மாலை மழை பெய்தபடியால் அன்றும் பெய்யும் என்றே தோன்றியது. அதனால் அன்று காரில் கிளம்பினேன். அதற்கு முந்தைய நாள் வியாழக்கிழமை, உடன் பணிபுரியும் தோழி ஒருவருக்குப் பிறந்தநாள் என்று மதிய உணவுக்கு வெளியில் செல்லவேண்டியது இருந்தது. மூன்று மணி நேரம் காலி. வந்த பின்னும் அங்கே இங்கே என்று சிலருக்கு உதவி செய்தபடியால், என்னுடைய வேலைகளை முடிக்க இயலவில்லை. அதனால் வெள்ளிக்கிழமை அந்த வேலைகளையும் சேர்த்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் […]
Recent Comments