முன்கதைச்சுருக்கம்:அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர் (நிலாரசிகன், அடலேறு, ஜனா, அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் – இவர்கள்தான் கதையில் நடமாடும் பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம். குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும்,அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின் பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் […]
ஒரு நல்லவனின் பிரார்த்தனை – சிறுகதை
எட்டு மணி வரை தூங்கிப் பழகிவிட்டேன். இனி ஐந்து மணிக்கே எழ வேண்டும். இல்லையெனில் வாழ்க்கையை ஓட்ட முடியாது. சிக்கனம் என்பதே மிகச் சிக்கனமாக இருந்த என் மனது, இப்போது தாராளமாக அதைப் பற்றி அசை போடுகிறது. இனி இரவு நேரங்களில் சுற்றுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எத்தனை நாள்தான் இந்தப் போராட்டம் எனப் பார்த்துவிடலாம். சிலர் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்கிறார்கள் என்பார்கள். எனது விசயத்தில் இனி அது சிக்கனத்தைக் குறிக்கும். வரும்காலத்தில் இதன் அர்த்தமே தலைகீழாகப் […]
கதையின் சுதந்திரம்
மாப்ள, நேத்து உன்னைப் போல் ஒருவன் படம் பாத்தேன்டா. இதெல்லாம் ஒரு படமா? பிடிக்கவேயில்லடா எனக்கு. தீவிரவாதத்தை தீவிரவாதத்தாலயே அழிக்கிற மாதிரி ஒரு கதை. தீவிரவாதின்னாலே முஸ்லிமாத்தான் காட்டனுமா? ஏன், இந்துத் தீவிரவாதியக் காட்டி, அவன அழிக்கிற மாதிரி காட்டக் கூடாதா? அப்போ தீவிரவாதின்னாலே இந்துதானான்னு கேக்க மாட்டியா? அப்போ ரெண்டு இந்து, ரெண்டு முஸ்லிம்னு காட்டிருக்கலாம். சரி சமமா போய்ருக்கும். அப்போ கமல் இந்து முஸ்லிம் பிரச்சனையக் கிளப்புறார்னு ஒன்னு கண்டுபிடிக்க மாட்டீங்களா? இல்ல மாப்ள. […]
என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா
’என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா – அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. சாதாரணமாய், காதலர்கள் மாதிரியா பழகினோம்? கணவன் மனைவி போலல்லவா இருந்தோம். புருசா என்றும் பொண்டாட்டி என்றுமல்லவா அழைத்துக்கொண்டோம். மொபைலில் கூட பெயருக்கு பதில் அப்படித்தானே பதிந்து வைத்திருந்தோம். நீதாண்டா என் உயிர், நீ இல்லாம என் வாழ்க்கைய நெனச்சுக்கூட பாக்க முடியலடா, என்றெல்லாம் சொன்னாளே! இப்போது உயிராவது, மயிராவது என்றல்லவா போய்விட்டாள்’. ’எத்தனை முறை என்னுடன் படுத்திருப்பாள்? உன் நெஞ்சு என் மஞ்சம் என்றும், உன் […]
சின்ன மனசு – போட்டிக்கான சிறுகதை
சுரேஷ் ரயில் நிலையம் நோக்கி வேகமாக நடந்தான். அவனுக்கு, இஷ்டப்பட்ட வாழ்க்கை கிடைக்கப் போகும் சந்தோசம் மனது முழுதும் நிரம்பியிருந்தது. ‘நாளைலருந்து காலைலயே எந்திரிக்க வேணாம், சுப்பம்மா டீச்சரோ பாட்டியோ அடிக்க மாட்டாங்க, இஷ்டம்போல வெளாடலாம், ஆத்திலோ குளத்திலோ குளிக்கலாம், நெனைச்ச நேரம் ஐஸ்கிரீம் சாப்டலாம், எதையும் கண்டிக்க அப்பா இருக்க மாட்டார்’ என்று எண்ணியவாறே ரயில் நிலையம் உள்ளே நுழைந்தான். சுரேஷ், வயது 11, ஆறாம் வகுப்பு படிக்கிறான். அப்பா, அம்மா அரசு வேலையில். சொந்த […]
Recent Comments