அன்று ஓரு இரவில்………(3)

நண்பர்கள் சொன்ன போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, நடுவில் வெளிச்சத்தை பார்த்து பயந்தாலும் சுடுகாட்டிற்கு சென்று பூவை பறித்து, பின் என்னுடைய அறைக்குச்செல்லலாம் என கிளம்பினேன். கிளம்பிய 5 நொடிக்குள் அங்கு சட சடவென வித்தியாசமான சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் எரிந்துக்கொண்டிருந்த பெண்ணின் உடல் எழும்பிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்து நான் பயந்தேன் என யாராவது நினைத்தால் தவறு. உடலை எரிக்கும்போது அப்படி எழும்பும் என்பது எனக்கு தெரியும், அதனால் பயப்படவில்லை. சுடுகாட்டில் அந்தக்காட்சியை பார்த்துவிட்டு நான் நடக்க […]

அன்று ஓரு இரவில்………(2)

…………..வெளிச்ச புள்ளிகள் என்னை நெருங்க நெருங்க, என் உடலெல்லாம் சிறிது நடுங்க துவங்கியது. //குறை ஒன்றும் இல்லை !!! said… அப்புறம் அந்த ரெண்டு வெளிச்ச் புள்ளி ஏதாவடு மிருகம் தானே? இல்ல வண்டியா?\ நண்பர் நினைததுபோல் ஏதாவது மிருகமா..? இல்ல எதாவது வண்டியா..? என பலவாறு யோசித்து பார்த்தேன் ஆனால் அப்படி தோன்றவில்லை. ஏனென்றால் அந்த வெளிச்சப்புள்ளிகள், ஒரே நேர்க்கோட்டில் வராமல் வளைந்தும், நெளிந்தும், மேலும், கீழுமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. திரும்பி வந்த வழியே […]

அன்று ஒரு இரவில்……….

நான் சத்தியமங்கலத்திற்கு அருகாமையில் உள்ள தூக்கநாயக்கன் பாளையத்தில் பட்டய படிப்பில் காலடி எடுத்து வைத்த முதலாம் ஆண்டு (1994) நடந்த திகில் சம்பவம். நான் அங்கு படிக்க சென்ற காலத்தில் என் சக நண்பர்களிடம் “நான் நாகர்கோவில்காரன் எனக்கு பயம் என்பது கிடையாது, இரவானாலும் பகலானாலும் எவ்விடத்திற்கும் செல்ல அஞ்சமாட்டேன், சுடு காட்டிற்கு வேண்டுமானாலும் இரவில் செல்வேன்” என பிதற்றி திரிவேன் (உண்மையும் கூட) இதை அடிக்கடி கேட்ட நண்பர்கள் என்னை என்றாவது சோதித்து பார்க்கும் திட்டத்தில் […]