பிளாக்கர் – சட்டையை மாற்றுவது எப்படி?

Published by: 4

புதுச்சட்டை – இங்கே சட்டையை மாற்றுவது எப்படி என ஒரு அனானி கேட்டிருந்தார் (அவர் எந்த சட்டையைக் கேட்டார் என்பது வேறு விசயம்)… அதனால்…

முதலில், உங்களுக்குப் பிடித்த டிசைனை செலக்ட் செய்ய வேண்டும். இலவச டெம்ப்லேட்டுகளை பல தளங்கள் கொடுக்கின்றன… கூகுளில் free blogger templates என தேடினால் பல தளங்களை அள்ளித் தட்டும். அவைகளில் நோண்டிப் பார்த்து உங்களுக்குப் பிடித்த டிசைனைத் தெரிவு செய்து டவுன்லோடு செய்யவும். (இது பெரும்பாலும் XML FILE ஆக இருக்கும், இங்கு XML ஐ எப்படி அப்லோடு செய்வது என்றே பார்க்கலாம்)
[உதாரணத்திற்கு: http://b-themes.blogspot.com/2007/10/underground-blogger-template.html ]

பின்பு, பிளக்கரில் லாகின் செய்து dashboard க்கு செல்லவும்; இனி படங்களுடன் தொடரவும்…



(முதல் படம் – க்ளிக்கிப் பார்க்கவும்)
1. layout க்கு செல்லவும்
2. அதற்கு கீழே உள்ள Edit HTML க்கு செல்லவும்
3. இது மிகவும் முக்கியம். இப்போது நீங்கள் வைத்திருக்கும் சட்டையை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளவும். பின்னால், புதுப்பித்த சட்டை ஒத்துவரவில்லை என்றால், இந்த பழைய சட்டையை மாற்றிக்கொள்ள வசதியாய் இருக்கும்.
4. Browse ஐ க்ளிக் செய்து, நீங்கள் வைத்துள்ள புது சட்டையின் XML ஃபைலை கொடுக்கவும். பின் Upload ஐ க்ளிக்கவும்.

(இரண்டாம் படம்)
5. நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் widget கள் புதிய சட்டையில் default ஆக வராது. மீண்டும் அனைத்தையும் சேர்க்க வேண்டும். எனவே, இங்கு வருவதற்கு முன்னாலேயே, Page Elements க்கு சென்று widget களை காப்பி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த எச்சரிக்கை செய்திதான் இது.
6. கீழே உள்ள PREVIEW ஐ க்ளிக்கினால், புதிய சட்டை போட்ட பின் எப்படி இருக்கும் என ஒரு முறை பார்த்துக் கொள்ளலாம்.
7. PREVIEW ஓக்கே எனில், CONFIRM & SAVE பண்ணலாம். இப்போது உங்கள் தளம் புதுச்சட்டையுடன் மாறியிருக்கும். PREVIEW உங்களுக்கு திருப்தி இல்லையெனில் CANCEL பண்ணிக்கொள்ளலாம்; மீண்டும் வேறு சட்டையைத் தேடிப் பிடித்து அணிய முயற்சி செய்யலாம்.

இந்த வழிமுறைகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால் சொல்லவும்.

வேறு தேவைகள் / சந்தேகங்களுக்கு பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்.

Thank you for reading. 🙂

4 comments

  1. Beski

    புரியலியே சார்…
    நா கொஞ்சம் ட்யூப் லைட்டு (அதிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ரொம்பவே…).

    கொஞ்சம் விளக்கமாக கேட்கவும்.

Leave a Reply