ஏன் அலைய விட்டாய்………..

Published by: 5

உனக்குரியவன்

கலத்திலும் சிறந்தவனாய்,
சாந்த குணத்தினனாய்,- நன்கு
சிரித்து பேசும் முகத்தினனாய்,- உன்னிடம்
சீற்றம் சிறிதும் கொள்ளாதவனாய்
சுத்த மனத்தினனாய்,
சூது வாது அற்றவனாய்,- எங்கும்
செல்வாக்கு மிக்கவனாய்,
சேனையையும் அடக்கும் திறத்தினனாய்,
சைத்தான்யம் விரும்பாதவனாய்,
சொல்லில் மாறாதவனாய்,- உனக்கு
சோகம் உருவாக்காதவனாய்,- சகல
சௌபாக்கியம் தருபவனாய் இருக்கின்றான்
அப்படி இருந்த போதிலும்
உன் மனதை
ஏன்
அலைய விட்டாய்??
என்
இனிய தோழியே!!!!!!!!
பி.கு:-நல்ல கணவன் இருந்தும் மனதை அலையவிடும் தோழிகளுக்கு
எழுதியது (sep -1996)
—கி.கி
Thank you for reading. 🙂

5 comments

  1. Unknown

    அப்பாடியோவ்!சகலகலாவல்லவன்?கிட்டதட்ட ராமாயண ராமன் சாயல் அடிக்குதே?

  2. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    //கே.ரவிஷங்கர் said…
    அப்பாடியோவ்!சகலகலாவல்லவன்?கிட்டதட்ட ராமாயண ராமன் சாயல் அடிக்குதே?
    Sun Jul 12, 04:14:00 PM
    kanagu said…
    நல்ல கவிதைங்க 🙂
    Sun Jul 12, 06:20:00 PM\

    கருத்துக்களுக்கு நன்றி

  3. Laksh

    நல்ல புருஷனுக்கு எவை எவை அழகு என்று நயம் பட எடுத்து இயம்பி உள்ளீர்கள்… தோழா!!!

Leave a Reply