காலடி தடங்கள்

அதே மாலை நேரம், அதே காற்று, அதே கடல் அலை, அதே கால் தடங்கள் மணலில்- என் காதலியினுடையது. அன்று தொலைவில் கண்ட தடங்கள் நேற்று அருகில் வந்த தடங்கள் இன்று என்னை விட்டுச்சென்ற தடங்கள். அன்று உன் காலடி தடங்களாலேயே உன் வருகையை அறிந்தவன் நான். இன்று பின்தொடர்கிறேன் உன் தடங்களை, உனக்குத்தெரியாமல். சில நாட்கள் காணவில்லை உன் கால் தடங்கள்,-பின் கண்டடைந்தேன் உன் கால் தடங்களை-நீ சரணடைந்தவனின் கால் தடத்தோடு. ஆண்டுகள் பல உருண்டோடின, […]

வெண்குழல் ஊதுபத்தி ——–(1)

வெள்ளையாய் ஒரு குழல்- அதில் விடுகிறான் புகைச் சுழல்- அது உருவாவதை கண்டு மகிழ்கிறான் -ஆனால் தான் உருகுவதை அறிய மறுக்கிறான் நண்பனே ! அதன் மென் புகை போல் உன் மென்னுயிரும் தினம் மென்மையாக அழிவதை ஏன் உணர மறுக்கிறாய்?! நாம் அதனை வேகமாக உறிஞ்சுவதால் நம்மை அது வேகமாக உறிஞ்சிவிடுகிறது உலகத்திலிருந்து விதவை என்று வாழ்வளித்தால் அவள் விளக்கேற்றுவாள்- இல்லை இல்லை அவளே விளக்காவாள்- ஆனால் வாழ்வளித்தவனின் உயிரையே அணு அணுவாக சுவைத்தளிப்பாள் பி.கு:- […]

நட்பே… நீ எனக்கு நட்பாக வேண்டும்.

மழலைப் பருவத்தில்ர்மழலைப் பருவத்தில் பார்த்து வியக்க ஒரு நட்பு… குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாட ஒரு நட்பு… காளைப் பருவத்தில் ஊர் சுற்ற ஒரு நட்பு… வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க ஒரு நட்பு… முதிர்ந்த பின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு… நட்புகள் ஆயிரம் இருந்தும் நட்பின் தேவை குறையவில்லை… தேவையின் போது தோள்களில் சாய நட்பு வேண்டும்… துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்… மகிழ்ச்சியின் போது மனம் மகிழ நட்பு […]

இன்னும் இன்னமும்…….

உன்னை என் முன்னால் மண்டியிட வைத்திருப்பேன் மந்திரம் தெரிந்திருந்தால்…….! எனக்காய் நீ தவமிருக்கச் செய்திருப்பேன் தந்திரம் தெரிந்திருந்தால்…….! என்னிடம் உன்னை சரணடைய வைத்திருப்பேன் சாதுரியம் தெரிந்திருந்தால்…….! என்னை நீ சுற்றி வர செய்திருப்பேன், சூழ்ச்சி தெரிந்திருந்தால்…….! ஆனால்…. உன்னை காதலிக்க மட்டுமே தெரிந்திருக்கிறேன்?! ஆகையால் என் காதல் கை கூடுமோ என்னும் நினைவில் நிமிடங்கள் யுகங்களாய் சுகங்கள் இழந்து வாழ்கிறேன், இன்னும் இன்னமும்…… பி.கு:- இது நான் காதலிக்கும் முன் 1995-ம் ஆண்டு கல்லூரி முதலாமாண்டு ஆங்கில […]

ஏன் அலைய விட்டாய்………..

உனக்குரியவன் சகலத்திலும் சிறந்தவனாய், சாந்த குணத்தினனாய்,- நன்கு சிரித்து பேசும் முகத்தினனாய்,- உன்னிடம் சீற்றம் சிறிதும் கொள்ளாதவனாய் சுத்த மனத்தினனாய், சூது வாது அற்றவனாய்,- எங்கும் செல்வாக்கு மிக்கவனாய், சேனையையும் அடக்கும் திறத்தினனாய், சைத்தான்யம் விரும்பாதவனாய், சொல்லில் மாறாதவனாய்,- உனக்கு சோகம் உருவாக்காதவனாய்,- சகல சௌபாக்கியம் தருபவனாய் இருக்கின்றான் அப்படி இருந்த போதிலும் உன் மனதை ஏன் அலைய விட்டாய்?? என் இனிய தோழியே!!!!!!!! பி.கு:-நல்ல கணவன் இருந்தும் மனதை அலையவிடும் தோழிகளுக்கு எழுதியது (sep -1996) […]

நிஜமானதால்…………

பரிச்ச்சய பார்வையில் துவங்கி- அந்த பார்வைலேயே பரிணமித்த புன்சிரிப்பாய் தோழமை பிரிவோம் என்பதை உணராமல் பிணைத்துக்கொண்ட நட்பு முடிவுரை தெரியாமல் முகப்புரை நெருக்கம் தொங்கின முகங்குளுடன் தொலைத்த நட்பு தொடர் ரணங்களாய் மனதில் இலையுதிர் காலமாய் போன ஊடலில் இனிய வசந்தத்தின் தேடலாய் மனது சாலையோரத்தில் ரோமியோக்கள் போல சத்தமிட்டு திரிந்தது இனிய நினைவுகளாய் நெஞ்சில் நிஜங்களின் நிழலாய் நினைவில் நிறுத்த -சில நிழற்படங்கள் நட்பை காதலென்று நினைத்து மூக்குடைபட்டது நினைவின் ஒரு மூலையில் சுத்தமான காதலை […]