என்னடா இது!நமக்குத்தான் காதலியே இல்லையே,அப்புறம் எப்படிப் பிறக்கிறதுஇந்தக் கவிதை மாதிரியெல்லாம்? நினைத்துக் கொண்டேபைக்கை நெருங்கினேன்வருவது கண்டு ஓடியகுழந்தையின் பயம் அழகு. வெளியே எடுத்துஉதைக்கும் போது எதிரேபெட்டிக்கடைப் பெண்ணின்புன்னகை அழகு. சென்றது ஆபீஸ் நோக்கி,போட்டியின் வாலிபர்கள்பைக்கை முறுக்கியதும்எழும் சத்தம் அழகு. சப்வேயைக் கடகும்போதுமுன்னால் செல்லும்பின்னால் உள்ள துப்பட்டாபறப்பது அழகு. சிக்னல் இல்லா சந்திப்பு,நாலா புறமும் வரும்அவசரத்தில் பிறந்தவர்களின்முட்டல் அழகு. சிக்னலில் யூடர்ன்,போலீஸ்காரர் பிடிப்பாரோ?பயந்துகொண்டே திரும்பும்புது பைக் அழகு. அப்பாடா! சிக்னல் எல்லாம்கடந்து விட்டேன் என்றுநிம்மதியாய் செல்லும்அகன்ற சாலை அழகு. […]
+2 கவிதைகள் – தைரியமாயிரு
அன்றுநான் உன்னைப்பார்க்கும் போதுநீ மண்ணைப்பார்த்தாய். நேற்றுநான் உன்னைப்பார்க்கும் போதுநீ என்னைப்பார்த்தாய். இன்றுநான் உன்னைப்பார்க்கும் போதுநீ உன்னையேபார்க்கிறாய். பெண்ணேமிரளாதேகாதலுக்குஜாதி மதம் இல்லை. நாளைநான் உன்னைப்பார்க்கும் போதுதைரியமாக நீஎன்னைப் பார். இதுவே வழியெனநாளைய உலகம்நம்மைப் பார்க்கும். Thank you for reading. 🙂
+2 கவிதைகள் – கடைசி வரை…
வளரும் வரை அப்பாபார்க்கும் வரை காதலிகல்யாணம் வரை அம்மாதடுக்கும் வரை சொந்தம்கடைசி வரை…. நண்பன். Thank you for reading. 🙂
+2 கவிதைகள் – காதல்
மறக்க வேண்டுமென்றுமீண்டும் அதையேதான் நினைக்கிறேன்.மறக்க முடியவில்லைஎன்பதை விடமறப்பதற்கு மனமில்லைஎன்பதுதான் உண்மை. Thank you for reading. 🙂
+2 கவிதைகள் – கடவுள்
காதலியே,நீ என்னநிலவும் சூரியனும்கலந்த கலவையா?நினைக்கையில்இன்பமும் தருகிறாய்துன்பமும் தருகிறாய்.புதுவித கிரகமே,என்னைப் பிடித்த கெரகமே!கடவுளானாய் என்னுள்ளே,உன் மனம்கல்லானதாலா! Thank you for reading. 🙂
+2 கவிதைகள் – மனச்சாரம்
நேற்று,உன்னை நினைத்தேன்.இன்று,உன்னை நினைக்கிறேன்.நாளை,என் உயிர் உள்ள வரைஉன்னை நினைத்துக் கொண்டே இருப்பேன். (இன்னும் கொஞ்சம் ஓவரா வேனும்னா, செத்தாலும் உன்னை நினைத்துக் கொண்டே இருப்பேன்னு வச்சுக்கலாம்) Thank you for reading. 🙂
Recent Comments