என்னவளே நெற்றிக்கு பொட்டு வைத்தாய்; நிலவையே நீ தொட்டு வைத்தாய்; என்னை மட்டும் ஏன் விட்டு வைத்தாய்? கண்ணுக்கு மை தீட்டுகின்றாய்; கண்ணானவன் எனை மட்டும் ஏன் வாட்டுகின்றாய்? உன் உதடுகள் மின்னுதடி சாயத்தில்; என் உள்ளமன்றோ உருகுதடி காயத்தில்; ஆயிரம் கவிதைகள் கிடைத்துவிட்ட ஆதாயத்தில்; பல்லாயிரம் கற்பனையில் மிதக்கின்றேன் ஆகாயத்தில்; ஆகாயத்தில் கார்மேகங்கள் சூழ்ந்த்தால் ஆலாபனை பாடுகிறேன் வாடி முகத்தில் கருரோமங்கள் சூழ்வதால் ஆகிவிடுகின்றன தாடி காதலை தேடிப்போனேன் கவி பாடி காதலி உன் பெயரை […]
யார் குருடன்?
ஆதவன் அணையும் அந்தி வேளை அழகாக இருந்தது ஆகாயக காட்சி பறவைகளின் அணிவரிசை பார்த்தேன் பரவசமாய் மாலை நேரத்து மழையை வரவேற்க்கும் வானவில் மகிழ்ந்தேன் அதைக்கண்டு சற்றே திரும்பினேன் என்னை கடந்து சென்றனர் சில கண் தெரியாதவர்கள் நான் கண்ட ரசித்தவற்றை இவர்கள் கண்டு ரசிக்க முடியாதே என்று கண் கலங்கினேன் திடீரென ஒரு அசரிரீ என் முன்னால் கேட்டது “ஏண்டா சாவு கிராக்கி கண்னு தெரியாதா உனக்கு காயப் போட்டிருக்க கருவாடு மேல நடக்கிற” அப்போதுதான் […]
கொலைகள்
கொல் என்றேன்கொல்லென்று சிரித்தாள்கொல்லாமல் கொன்றாள்கொன்றேயிருக்கலாம் அவளென்னைகொன்றால் பாவமாகுமோ?கொல்லாமல் கொன்றால்?கொலைகூடக் காதலாகுமோ?கொன்றிருக்கலாம் அவளைகொல்வதற்கு முந்திவிட்டாள்கொன்றிருந்தால் சிறையறையில்கொல்லப்பட்டதால் மணவறையில் — -ஏனாஓனா. Thank you for reading. 🙂
நட்பல்ல நயவஞ்சகம்
நட்பிற்காக எதையும் இழக்கலாம் எதற்காகவும் நட்பை இழக்கலாகாது. நல்ல வரிகள், இதை கோபிசெட்டிப்பாளையத்தில் ஒரு ஆட்டோவின் பின்புறத்திலிருந்து சுட்டது. என்னுடைய சுய, மற்றும் நண்பர்களின் சில நட்பு அனுபவங்களால் மேற்கண்ட வரிகளுக்கு தொடர்ச்சியாக நான் கிறுக்கியது நட்பிற்காக எதையும் இழக்கலாம் எதற்காகவும் நட்பை இழக்கலாகாது ஆனால்.. நீ இழப்பதற்காகவே ஒரு நட்பு இருந்தால் அந்த நட்பை இழப்பது நலம். ஏனென்றால்.. அது நட்பல்ல நயவஞ்சகம். பி.கு.:- 1996 ஜனவரி மாதம் கிறுக்கிய கிறுக்கல் இது. தற்போதும் சில […]
உன்னை கண்ட நாளிலே
உன்னை கண்ட நாளிலே என் வாழ்வில் ஒரு புதிய மாற்றம் உன்னிடம் பேசும் போதெல்லாம் என் மனதில் ஏதோ ஒரு சந்தோசம் நீ என் வாழ்வில் கிடைத்த ஒரு இன்ப அதிர்ச்சி நீ என் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவள் உன்னை நான் நினைக்காத நாளோ நேரமோ இல்லை நான் உன்னிடமிருந்து ஏதோ ஒரு வித்தியாசமான அன்பை பெற்றுக்கொண்டேன் நம் நட்பு காதலை விட புனிதமானது நாம், நட்புக்கு ஒரு இலக்கணமாக இருப்போம் பி.கு:- ஒரு தோழிக்கு […]
பாதகம்
நண்பனே! உன் தங்கையல்லாத நங்கையை – நீ தங்கையென அழைக்கும் முன் சிறிது யோசி உன்னால் அண்ணனாக மட்டும் இருக்கமுடியுமா என்பதை. ஏனென்று தெரியுமா நண்பனே?! நண்பி காதலியாக மாறினால் பாதகமில்லை, தங்கை காதலியாக மாறினால்- அது போல் பாதகம் வேறில்லை. ஆகையால் நட்புடன் பழகு, நல்லெண்ணத்துடன் பழகு. பி.கு:- எனது பாலிடெக்னிக் நண்பன் ஒருவன் சில அழகான பெண்களை கண்டவுடன் நீ என் சிஸ்டர் மாதிரியே இருக்க எனக்கூறி பழகி சிறிது நாட்கள் கழிந்து அவள்தான் […]
Recent Comments