தூக்கமில்லா நோயும் சில உண்மைக் கனவுகளும்

இந்தப் படத்துக்கும் நமக்கும் ரொம்ப நாளா ஒரு கனெக்சன். சில பல ஆண்டுகளுக்கு முன்னாடி நம்ம நண்பன் நம்மல சைடு போஸ்ல பாத்துட்டு, நீ அந்தப் போஸ்டர்ல இருக்குற மாதிரியே இருக்கன்னு ஒரு பிட்டப் போட்டான். போதாக்குறைக்கு அவன் ஒரு ஹாண்ட் தேர்ந்த கணினிக் கலைஞன் வேற. நம்மல அபப்டி நில்லு, இப்படித் திரும்பு, கொஞ்சம் குனி அப்டின்னு ஆங்கிள் ஆங்கிளா போட்டோ எடுத்து அப்படியே ஒரு வேலை பண்ணிக் காட்டினான். அதான் இது… அப்பவே சொன்னான், […]

தென்மேற்குப் பருவக்காற்று

நேற்று தென்மேற்குப் பருவக்காற்று பார்க்கச் சென்றிருந்தேன். பதிவர் வண்ணத்துப்பூச்சி சூர்யா அழைத்தார். பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்புக் காட்சி என்றும், பதிவர்களை அழைத்திருப்பதாகவும் சொன்னார். Four Frames எனது அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்ததால் வசதியாகப் போயிற்று. கிளம்பும் வேளையில் தூறல் ஆரம்பித்தது. இருந்தாலும் படம் பார்க்கும் ஆர்வத்திலும், பதிவர்களை சந்திக்கும் ஆர்வத்திலும் கிளம்பிவிட்டேன். பலர் தூறல் காரணமாக வரவில்லை. இருப்பினும், பிரபல பதிவர்கள் கேபிள் சங்கர் மற்றும் ஜாக்கிசேகர், சூர்யா, காவேரி கணேஷ், சமீபத்தில் புத்தகம் வெளியிட்ட சுரேகா ஆகியோர் […]

(2) வீட்டு புரோக்கர்

வீடு தேடுதல் (1) ன் தொடர்ச்சி… அடுத்து புரோக்கர்கள். இவர்களை நான் விரும்புவதே இல்லை. நான் பார்த்த பல புரோக்கர்களில் இருவரைத்தான் மனிதர்களாகப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இவர்கள் வாயைத் திறந்தால் வார்த்தைக்குப் பதிலாக பொய்தான் வந்து விழும். அதிலும் ஒரு மாத வாடகையை கமிசனாகக் கேட்பார்கள். அதற்குத் தகுந்த உழைப்பு இருக்கிறதா என்றால், இல்லை. மனதிற்குப் பிடித்தமான சரியான வீட்டைக் காண்பித்து, நல்ல விலைக்கு முடித்துக் கொடுத்தால் இவர்கள் கேட்கும் விலை நியாயமானதுதான். ஆனால் இவர்கள் செய்வதோ […]

மதுரை அனுபவங்கள்

சென்ற வாரம் மதுரைக்குச் சென்றிருந்தேன். பெரிதாக மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை. முன்பு, 2006ல் ஒரு ஆறு மாதங்கள் அண்ணாநகரில் இருக்கும் சுகுணா ஸ்டாப்புக்கு அருகில் தங்கியிருந்தேன். ஓட்டல் சாப்பாடாக இருந்தாலும், அங்கிருந்த நாட்கள் சுக அனுபவமாக இருந்தது. அவ்வளவு அருமையான ஓட்டல் சாப்பாடு, சென்னை வந்த பிறகுதான் தெரிகிறது. இப்போது ஆரப்பாளையம் அருகே உள்ள, தங்கமணியின் அண்ணன் ஒருவருடைய கல்யாணம். அவர் உறவினர்கள் வீட்டில் தங்கச் சென்றுவிட்டார், எனக்கு அவர்களிடத்தில் அவ்வளவு பழக்கம் இல்லாததால் ஆரப்பாளையம் அருகிலிருக்கும் […]

Despicable Me (2010)

ஒரு ஊர்ல ஒரு பலே திருடன் இருந்தானாம். அவந்தான் உலகத்துலயே பெரிய திருடன். அவனை மிஞ்ச ஆளே கிடையாதாம். ஒரு நாள், அவனையும் மிஞ்சுற அளவுக்குப் பெரிய திருடன் ஒருத்தன் முளைச்சானாம். நம்ம பலே கில்லாடி பண்ணின திருட்டுக்களையெல்லாம் மிஞ்சுற அளவுக்கு ஒரு திருட்டு பண்ணினானாம். அப்படி என்னத்த திருடினான் தெரியுமா? பிரமிடு ஒன்ன திருடிட்டானாம். அதக் கேள்விப்பட்ட நம்ம மெகா திருடன் இத விட பெருசா ஒன்ன திருடி, நாமதான் பெரிய திருடன்னு நிரூபிக்கத் திட்டம் […]

வீடு தேடுதல் (1)

ஏதோ ஒரு காரணத்துக்காக வீடு மாத்தனும்னு முடிவு பண்ணிருவோம். அடுத்து வீடு தேடனும். எப்படியெல்லாம் தேடலாம்? பேப்பர் விளம்பரம், இணையம், தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தல் மற்றும் புரோக்கர்கள். வழக்கமான பேப்பர்களில் வாடகை வீடு பற்றிய விளம்பரம் குறைவாகத்தான் இருக்கும். இதுபோன்ற வேலைகளுக்கு ஃப்ரீ ஆட்ஸ்தான்(Free Ads) சரி. சென்னையில் வியாழன்தோறும் கடைகளில் கிடைக்கும். இப்போது இங்கும் புரோக்கர்கள் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். விளம்பரம் பார்த்து போன் செய்தால் பத்துக்கு எட்டு புரோக்கர்கள் கொடுத்த விளம்பரமாகத்தான் இருக்கின்றன. அதனாலென்ன என்கிறீர்களா? […]