வாடகை வீட்டுல இருக்குறதுனால நன்மைகளும் இருக்கு, கஷ்டங்களும் இருக்கு. வீடு நமக்குப் பிடிக்கலைனாலோ, பக்கத்து வீட்டுக்காரங்களப் பிடிக்கலன்னாலோ, தெருவைப் பிடிக்கலைனாலோ, வாசப்படி பிடிக்கலைனாலோ வீட்ட மாத்த முயற்சி பண்ணலாம். அல்லது வேற நல்ல வீடு கிடைச்சா வீட்ட மாத்திக்கலாம். வேற நல்ல வேலை, வேற ஊர்ல கிடைச்சாலோ, இந்த வீட்டுல தண்ணி வரல, அல்லது தண்ணி சரியா போகல (இது தண்ணி வரலங்கறத விட பெரிய பிரச்சனை) அப்டி இப்டின்னு பல காரணங்களுக்காக வாடகை வீட்டுல இருக்குறவங்க […]
சத்தம் போடாதே, நிசப்தம் கூடாதே!
வழக்கமாக வீட்டிற்கு வந்தவுடன், நேரமிருப்பின் ஏதாவதொரு படத்தைப் போட்டுப் பார்ப்பது வழக்கம். நல்ல தெளிவான சப்தம், ஆக்சன் மற்றும் த்ரில்லர் காட்சிகளில் வீடே அதிரும். இதுநாள் வரை எனக்கு அதில் பிரச்சனை இல்லை, இப்போது தங்கமணி. வழக்கமாக இந்த நேரங்களில் தங்கமணி சமையலறையில் இருப்பார். இங்கே சரவுண்டு சவுண்டு அதிகமாகும்போதெல்லாம் அங்கிருந்து டிடிஎஸ் எபெக்டில் வரும். “ஏங்க இப்படி சத்தமா வைக்கிறீங்க, கொஞ்சம் கொறச்சு வச்சுப் பாத்தா ஆவாதா? எத்தன வாட்டிதான் சொல்றது?”. நான் என்ன வேண்டுமென்றா […]
எந்திரனும் எனது பார்வைகளும்
எந்திரன் எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்த படம். எதிர்பார்ப்பா, அப்படி என்ன எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம்? ஒரு சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக, சினிமா விரும்பியாக, இயக்குனர் ஷங்கரின் ரசிகனாக? அல்லது இப்படி, ரஜினி படம் சொதப்பவேண்டும் என்ற எண்ணத்துடன்? கேப்புக்கு கேப்பு விளம்பரம் போட்ட சன் பிக்சர்ஸ் மேல் உள்ள வெறுப்பில் கவுந்து போகட்டும் என்ற எதிர்பார்ப்பில்? இருக்கலாம். அனைத்தும் ஒரு எதிர்பார்ப்பே. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சன் பிச்சர்ஸின் எதிர்பார்ப்பு மட்டும் நன்றாக ஈடேறியிருக்கிறது. மற்ற எல்லாம் அவுட். ஆட்டம் […]
தாதர் எக்ஸ்பிரசும் குழம்(/ப்)பிய ரயில்வேயும்
மும்பையிலிருந்து நான் மட்டும் தனியே வந்துகொண்டிருந்தேன். தாதர்-சென்னை எக்ஸ்பிரஸ், கிட்டத்தட்ட 24 மணி நேரப் பயணம். சென்னையிலிருந்து அதிகபட்சம் 12 மணி நேரம் மட்டுமே பயணம் செய்து பழக்கப்பட்டிருந்த நமக்கு இந்தப் பயணம் புதுசு. அதுவும் தெற்கு நோக்கி மட்டுமே பயணம், இரவு தூங்கி எழுந்தால் ஊர் வந்திருக்கும். ஆனால் இங்கு மூன்று வேளைச் சாப்பாட்டைப் பார்க்கவேண்டியது இருக்கும். அதாவது பரவாயில்லை, மும்பை போகும்போது பகலில் நிம்மதியாகப் பயணம் செய்யவே முடியாது, அதுவும் ஆணாக இருந்தால் முதல் […]
எக்மோர் இரயில் நிலையமும் ஒரு பயண அனுபவமும்
முதன்முறையாக எக்மோர் இரயில் நிலையம் சென்றிருந்தபோது பிரமித்துப் போனேன், எவ்வளவு இரயில்கள், அத்தனையும் சரியாக வருகின்றன போகின்றன, அதற்கான அறிவிப்புகளும் சரியாக வருகின்றன என்று. அதன்பின் பல தடவைகள் சென்றிருந்தபோதும் ஏதும் குறைபாடு கண்டதில்லை. ஆனால் நேற்று,மும்பையிலிருந்து வந்த தங்கமணியை அழைத்துவரப் போயிருந்தேன். இரவு 7.45க்கு வரவேண்டிய இரயில். அட்டவணையில் அதே நேரத்திற்கு வரும் என்றிருந்தது. ஆனால் நடைமேடை எண் இல்லை. ஒருவழியாக விசாரித்து, 7வது நடைமேடையில் வரும் என்று அறிந்து அங்கு சென்று நின்றேன் 7.30 […]
ஒரு கதை பல கோணங்கள்
சமீபத்தில் INCEPTION படம் பார்த்தேன். பிரமித்துப் போனேன். இப்படியொரு இடியாப்பச் சிக்கலான கதையை, கண் முன்னே தெரியும்படி, நம்பும்படி, முக்கியமாக புரியும்படி எடுத்திருக்கும் இப்படக் குழுவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. சிறு நேரம்கூட திரையை விட்டு நம் கவனத்தைத் திருப்பினால் படம் வேறுவிதமாகப் புரிந்துவிடும். நல்ல வேளை பக்கத்தில் இருந்த மனைவி தொந்தரவு செய்யாதது எனது பணத்தை மிச்சப்படுத்தியது. இருந்தாலும் இன்னும் இரண்டு முறை பார்க்கவேண்டும். அது என்ன இரண்டு முறையா? சொல்கிறேன். கதைப்படி, ஒரு கனவை […]
Recent Comments