அருகில் உள்ள மரங்கள் அகன்று செல்ல, தொலை தூர மரங்கள் துரத்தி வர, ரசிக்கிறேன் இயற்கையை ரயில் பயணங்களில்…….. Thank you for reading. 🙂
உண்மையான அன்பு
Thank you for reading. 🙂
ஒரு வழியா ஊருக்குப் போனேன்
வலையுலகில் மேய்ந்துகொண்டிருக்கும்போது சில நேரங்களில் ஓரங்களில் வரும் கிளப் மகிந்த்ரா அல்லது வேறு ஏதாவது டூர் விளம்பரத்தைப் பார்ப்பேன். நமக்கு மட்டும் ஏன் இது மாதிரி சுற்றுலா செல்ல வாய்ப்பு அமைவதில்லை என எண்ணியதில்லை. இப்போதுதான் புரிகிறது. வீட்டிலிருப்பவர்கள்தான் வெளியே செல்ல திட்டமிட வசதியாய் இருக்கும். வெளியே இருக்கும் நமக்கு விடுமுறை கிடைத்தால் வீட்டிற்குச் செல்லத்தான் திட்டமிடத்தோன்றுகிறது. வீட்டைவிட்டு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன, திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன, ஆனால் நான் மாறவேயில்லை. இப்போதும் […]
நான், அட்டக்கத்தி மற்றும் சில
வழக்கமாக தமிழ்ப் படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. தேவையில்லாமல் நூறு ரூபாயையும், மூன்று மணி நேரத்தையும் வீணடிக்கும் அளவுக்கு வேலை இல்லாமல் இல்லாததால், தேர்ந்தெடுத்த படங்களை மட்டுமே சென்று பார்ப்பேன். சமீப காலமாக நிறைய தம்ழ்ப்படங்களைப் பார்ப்பது போன்று தோன்றுகிறது. நல்லதுதான்.இவைதான் சமீபத்தில் பார்த்த படங்கள். உதயம் காம்ப்லக்ஸில் பார்த்தேன். மிகச் சிறிய படம். ஆங்காங்கே சுவாரஸ்யமான விசயங்கள் இருந்தாலும், முழுதும் லயித்துப் பார்க்க முடியவில்லை. அடியில், சீட்டின் அழுத்தம் அடிக்கடி தெரிந்தது. இந்தப் படத்தில் முக்கியமாக எனக்குப்படுவது, […]
அலுப்பே நெருங்காதே
முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பின், அதை ஓட்டுவது எப்படி இருந்தது? முதன் முதலில் வாங்கிய நோக்கியா 1100 தொலைத்த தூக்கங்கள் எத்தனை? முதன் முதலில் குடித்த பாதி பாட்டில் பீர், கால் டம்ளர் ரம் – இவைகள் தந்த போதை இப்போது எதிலும் கிடைக்காதது ஏன்? பள்ளி நண்பர்களுடனான முதல் சுற்றுலா, கல்லூரி நண்பர்களுடனான கடைசி சுற்றுலா ஏக்கம் தருவது ஏன்? முதல் பணியில் வெற்றிகரமாக செய்த சிறு வேலை தந்த மகிழ்ச்சி எங்கே? […]
மீண்டும் ஒரு முறை
மீண்டும் ஒரு முறை பதிவு எழுத முயற்சி செய்யலாம் எனத் தோன்றியது. ஏன் எழுதுவது நின்று போனது என்று யோசித்துப் பார்க்கிறேன், சரியாகத் தெரியவில்லை, அதைப் பற்றி மேலும் யோசித்து அறிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம். திருமணத்திற்குப் பிறகு எழுதுவது சிறிது குறைந்தது. குழந்தை பிறந்த பிறகு படிப்பதும் குறைந்தது. குழந்தையைப் பற்றி சொல்லிக்கொண்டெ போகலாம். வெர்னிகா. ஒரு குழந்தை பிறந்தது முதல், வளர்வதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. […]
Recent Comments