பரிச்ச்சய பார்வையில் துவங்கி- அந்த பார்வைலேயே பரிணமித்த புன்சிரிப்பாய் தோழமை பிரிவோம் என்பதை உணராமல் பிணைத்துக்கொண்ட நட்பு முடிவுரை தெரியாமல் முகப்புரை நெருக்கம் தொங்கின முகங்குளுடன் தொலைத்த நட்பு தொடர் ரணங்களாய் மனதில் இலையுதிர் காலமாய் போன ஊடலில் இனிய வசந்தத்தின் தேடலாய் மனது சாலையோரத்தில் ரோமியோக்கள் போல சத்தமிட்டு திரிந்தது இனிய நினைவுகளாய் நெஞ்சில் நிஜங்களின் நிழலாய் நினைவில் நிறுத்த -சில நிழற்படங்கள் நட்பை காதலென்று நினைத்து மூக்குடைபட்டது நினைவின் ஒரு மூலையில் சுத்தமான காதலை […]
நண்பர்களே இது என் அறிமுக கிறுக்கல்
இந்த கிறுக்கனின் 13-ஆம் வயதில் இருந்து கண்ணில் படும் அழகு, அவலம், நன்மை, தீமை, சமுதய சீர்கேடு, மற்றும் அன்றாட நிகழ்வுகளில் மனதை பாதித்தவை காகிதத்தில் கிறுக்கல்களாக வெளிப்படும். அவற்றை வெகு சில நண்பர்களுக்கு மட்டும் காட்டுவேன். ஆனால் என் நண்பனின் வற்புறுத்தலால் இந்த கிறுக்கல் கிறுக்கனின் கிறுக்கல்களை இவ்விணையதளத்தில் கிறுக்குகிறேன். உங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் பின்னூட்டத்தில் கிறுக்குங்கள் இப்படிக்கு, கி.கி Thank you for reading. 🙂
சண்டை வராமலிருக்க ஒரே வழி
போனதடவ மச்சான் சக்கரை அட்வைஸ்+தத்துவ மழையில் ஒரு பதிவு போட்டிருந்தார். ஆனா நமக்குத்தான் ஒரு எழவும் புரியல. பதிவுலக வரலாறு தெரிஞ்சாத்தான் இவங்களோட பேனா சண்டை (பேனா முனை, கத்தி முனையை விடக் கூர்மையானது) புரியும் போல இருக்கு. புரியலன்னா போய்கிட்டே இருடா ஏனாவானான்னு(எவனோ ஒருவன், ஹி ஹி ஹி…) போய்கிட்டே இருந்தேன். இந்தத் தடவ பைத்தியக்காரனோட பதிவப் பார்த்தேன். சரி, நமக்கு இப்பவும் புரியாதுன்னு அப்படியே விட்டுருக்கனும். ஆபீஸ்ல, ஒரு வார புயலுக்குப் பின்னாடி, கொஞ்சம் […]
லேண்ட் வேல்யு ஏற நானுமா காரணம்?
சென்ற வாரம் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் சென்றிருந்தேன். பைக் பார்க்கிங் விட்டுவிட்டு எவ்வளவு என்றேன்; சொன்னார்கள். சொன்ன விலையைக் கேட்டு அதிர்ந்துவிட்டேன். ‘15 ரூபாய்’. ங்க்கொய்யால… காலையில் நான் சாப்பிடும் டிபனின் விலை! இதெல்லாம் நியாயமா? எக்மோர்ல இதே பைக்க விடுறதுக்கு 3 ரூபாய். இங்க மட்டும் 15 ரூபாயா? என்ன நெனப்புலதான் இப்படி பண்றாங்க? இங்க வர்றவங்க எல்லாரும் பணக்காரங்கதானா? இல்ல என்ன மாதிரி மிடில் கிலாஸ் வரமாட்டாங்களா? இல்ல வரக்கூடாதுன்னு முடிவு […]
எனக்கு வந்த கு.த.சே.கள் – 6
1)இளனிலயும் தண்ணீ இருக்குபூமிலயும் தண்ணீ இருக்குஅதுக்காகஇளனில போரப் போட முடியுமாஇல்லன்னாபூமிலதான் ஸ்ட்ரா போட முடியுமா? 2)டீச்சர்: மணல் அரிப்பைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?குழந்தை: மண்ணுக்கு சொரிஞ்சு விட்டு நைசில் பௌடர் போட வேண்டும்.டீச்சர்: ?? 3)காதலன்: நாம ரெண்டு பேரும் மோதிரம் மாத்திக்கலாமா?காதலி: வேணாம்காதலன்: ஏன்?காதலி: உன் மோதிரம் 2 கிராம், என் மோதிரம் 4 கிராம்ல!காதலன்: ?? 4)பொண்ணு: யூ ஸ்டுப்பிட், இடியட். நீ பைக்ல வந்த ஸ்பீட்ல என் மேல வந்து மோதிருந்தா […]
மீன் சாப்பாடு
நேற்று மதியம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் அருகே வேலை. எங்கு சாப்பிடுவதென்று தெரியவில்லை, தேடினேன். பேருந்து நிறுத்தம் பின்னாலேயே ஒரு சைவ உணவகம், வெரைட்டி ரைஸ் மட்டுமே இருந்தது. அருகிலேயே ஒரு அசைவ ஏசி உணவகம், பார்த்தவுடனேயே விலை அதிகம் என ஒதுங்கிகொண்டேன். பின் நண்பர் ஒருவருக்குப் போன் செய்து விசாரித்ததில் தெரிந்துகொண்ட இடம் இது. பேருந்து நிருத்தத்திற்கு சற்று தள்ளி, ஓட்டல் மேரியாட்டுக்கு நேர் எதிரே மீன் வளத்துறை அலுவலகம் உள்ளது. அதன் முன்னே சிவப்பு, மஞ்சள் […]
Recent Comments