அன்று ஒரு இரவில்……….

நான் சத்தியமங்கலத்திற்கு அருகாமையில் உள்ள தூக்கநாயக்கன் பாளையத்தில் பட்டய படிப்பில் காலடி எடுத்து வைத்த முதலாம் ஆண்டு (1994) நடந்த திகில் சம்பவம். நான் அங்கு படிக்க சென்ற காலத்தில் என் சக நண்பர்களிடம் “நான் நாகர்கோவில்காரன் எனக்கு பயம் என்பது கிடையாது, இரவானாலும் பகலானாலும் எவ்விடத்திற்கும் செல்ல அஞ்சமாட்டேன், சுடு காட்டிற்கு வேண்டுமானாலும் இரவில் செல்வேன்” என பிதற்றி திரிவேன் (உண்மையும் கூட) இதை அடிக்கடி கேட்ட நண்பர்கள் என்னை என்றாவது சோதித்து பார்க்கும் திட்டத்தில் […]

இன்னும் இன்னமும்…….

உன்னை என் முன்னால் மண்டியிட வைத்திருப்பேன் மந்திரம் தெரிந்திருந்தால்…….! எனக்காய் நீ தவமிருக்கச் செய்திருப்பேன் தந்திரம் தெரிந்திருந்தால்…….! என்னிடம் உன்னை சரணடைய வைத்திருப்பேன் சாதுரியம் தெரிந்திருந்தால்…….! என்னை நீ சுற்றி வர செய்திருப்பேன், சூழ்ச்சி தெரிந்திருந்தால்…….! ஆனால்…. உன்னை காதலிக்க மட்டுமே தெரிந்திருக்கிறேன்?! ஆகையால் என் காதல் கை கூடுமோ என்னும் நினைவில் நிமிடங்கள் யுகங்களாய் சுகங்கள் இழந்து வாழ்கிறேன், இன்னும் இன்னமும்…… பி.கு:- இது நான் காதலிக்கும் முன் 1995-ம் ஆண்டு கல்லூரி முதலாமாண்டு ஆங்கில […]

மோகன்லாலுக்கு லெப்டினண்ட் கர்னல் பதவியா?? அப்போ எங்களுக்கு………………..?

திரைப்படங்களில் ராணுவ அதிகாரியாக திறம்பட நடித்ததாலும், ராணுவத்தில் சேரவேண்டும் என்ற ஆசை இருந்ததாலும், சமீபத்தில் மலையாள பட நடிகர் பத்ம ஸ்ரீ மோகன்லாலுக்கு கௌரவ லெப்டினண்ட் கர்னல் பதவி அளித்து கௌரவித்துள்ளது இந்திய ராணுவம். இதை கேள்விபட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கும் தாங்கள் திறம்பட நடித்த வேடங்க்ளுக்கு ஏற்ப தங்களுக்கும் பதவி கிடைக்கும் என்ற கனவில் மிதக்கின்றனர்.அந்த கனவுகளில் சில.. ரஜினி காந்த் – ராகவேந்திர பக்தனாகிய நான் ராகவேந்திரராகவே நடித்துள்ளதால் தனக்கு 2-ஆம் ராகவேந்திரர்பதவி கிடைக்கும் […]

ஏன் அலைய விட்டாய்………..

உனக்குரியவன் சகலத்திலும் சிறந்தவனாய், சாந்த குணத்தினனாய்,- நன்கு சிரித்து பேசும் முகத்தினனாய்,- உன்னிடம் சீற்றம் சிறிதும் கொள்ளாதவனாய் சுத்த மனத்தினனாய், சூது வாது அற்றவனாய்,- எங்கும் செல்வாக்கு மிக்கவனாய், சேனையையும் அடக்கும் திறத்தினனாய், சைத்தான்யம் விரும்பாதவனாய், சொல்லில் மாறாதவனாய்,- உனக்கு சோகம் உருவாக்காதவனாய்,- சகல சௌபாக்கியம் தருபவனாய் இருக்கின்றான் அப்படி இருந்த போதிலும் உன் மனதை ஏன் அலைய விட்டாய்?? என் இனிய தோழியே!!!!!!!! பி.கு:-நல்ல கணவன் இருந்தும் மனதை அலையவிடும் தோழிகளுக்கு எழுதியது (sep -1996) […]

நிஜமானதால்…………

பரிச்ச்சய பார்வையில் துவங்கி- அந்த பார்வைலேயே பரிணமித்த புன்சிரிப்பாய் தோழமை பிரிவோம் என்பதை உணராமல் பிணைத்துக்கொண்ட நட்பு முடிவுரை தெரியாமல் முகப்புரை நெருக்கம் தொங்கின முகங்குளுடன் தொலைத்த நட்பு தொடர் ரணங்களாய் மனதில் இலையுதிர் காலமாய் போன ஊடலில் இனிய வசந்தத்தின் தேடலாய் மனது சாலையோரத்தில் ரோமியோக்கள் போல சத்தமிட்டு திரிந்தது இனிய நினைவுகளாய் நெஞ்சில் நிஜங்களின் நிழலாய் நினைவில் நிறுத்த -சில நிழற்படங்கள் நட்பை காதலென்று நினைத்து மூக்குடைபட்டது நினைவின் ஒரு மூலையில் சுத்தமான காதலை […]

நண்பர்களே இது என் அறிமுக கிறுக்கல்

இந்த கிறுக்கனின் 13-ஆம் வயதில் இருந்து கண்ணில் படும் அழகு, அவலம், நன்மை, தீமை, சமுதய சீர்கேடு, மற்றும் அன்றாட நிகழ்வுகளில் மனதை பாதித்தவை காகிதத்தில் கிறுக்கல்களாக வெளிப்படும். அவற்றை வெகு சில நண்பர்களுக்கு மட்டும் காட்டுவேன். ஆனால் என் நண்பனின் வற்புறுத்தலால் இந்த கிறுக்கல் கிறுக்கனின் கிறுக்கல்களை இவ்விணையதளத்தில் கிறுக்குகிறேன். உங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் பின்னூட்டத்தில் கிறுக்குங்கள் இப்படிக்கு, கி.கி Thank you for reading. 🙂