காலடி தடங்கள்

அதே மாலை நேரம், அதே காற்று, அதே கடல் அலை, அதே கால் தடங்கள் மணலில்- என் காதலியினுடையது. அன்று தொலைவில் கண்ட தடங்கள் நேற்று அருகில் வந்த தடங்கள் இன்று என்னை விட்டுச்சென்ற தடங்கள். அன்று உன் காலடி தடங்களாலேயே உன் வருகையை அறிந்தவன் நான். இன்று பின்தொடர்கிறேன் உன் தடங்களை, உனக்குத்தெரியாமல். சில நாட்கள் காணவில்லை உன் கால் தடங்கள்,-பின் கண்டடைந்தேன் உன் கால் தடங்களை-நீ சரணடைந்தவனின் கால் தடத்தோடு. ஆண்டுகள் பல உருண்டோடின, […]

வெண்குழல் ஊதுபத்தி ——–(1)

வெள்ளையாய் ஒரு குழல்- அதில் விடுகிறான் புகைச் சுழல்- அது உருவாவதை கண்டு மகிழ்கிறான் -ஆனால் தான் உருகுவதை அறிய மறுக்கிறான் நண்பனே ! அதன் மென் புகை போல் உன் மென்னுயிரும் தினம் மென்மையாக அழிவதை ஏன் உணர மறுக்கிறாய்?! நாம் அதனை வேகமாக உறிஞ்சுவதால் நம்மை அது வேகமாக உறிஞ்சிவிடுகிறது உலகத்திலிருந்து விதவை என்று வாழ்வளித்தால் அவள் விளக்கேற்றுவாள்- இல்லை இல்லை அவளே விளக்காவாள்- ஆனால் வாழ்வளித்தவனின் உயிரையே அணு அணுவாக சுவைத்தளிப்பாள் பி.கு:- […]

அன்று ஓரு இரவில்………(3)

நண்பர்கள் சொன்ன போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, நடுவில் வெளிச்சத்தை பார்த்து பயந்தாலும் சுடுகாட்டிற்கு சென்று பூவை பறித்து, பின் என்னுடைய அறைக்குச்செல்லலாம் என கிளம்பினேன். கிளம்பிய 5 நொடிக்குள் அங்கு சட சடவென வித்தியாசமான சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் எரிந்துக்கொண்டிருந்த பெண்ணின் உடல் எழும்பிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்து நான் பயந்தேன் என யாராவது நினைத்தால் தவறு. உடலை எரிக்கும்போது அப்படி எழும்பும் என்பது எனக்கு தெரியும், அதனால் பயப்படவில்லை. சுடுகாட்டில் அந்தக்காட்சியை பார்த்துவிட்டு நான் நடக்க […]

குரங்கு அருவிக்கு ஒரு குட்டி விசிட்………

ஜூலை 29-ம் தேதி கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு நானும் என் மனைவியும் மற்றும் 2 தம்பிகளுமாக இரண்டு இரண்டுசக்கர வாகனத்தில் சென்றோம் .சென்றது தம்பிகளில் ஒருவனுக்கு மண்டையில் உள்ள மசாலா பாக்கெட் சேதமடைந்துள்ளதா என்பதை CT SCAN செய்து பார்ப்பதற்காக. அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் சந்தோஷத்தை கொண்டாட என்ன செய்யலாம் என யோசித்தோம். மனைவி கூட வந்ததால் டாஸ்மாக் செல்ல முடியவில்லை. எனவே பொள்ளாச்சியிருந்து வால்பாறை செல்லும் வழியில் 30-வது கிலோமீட்டரில் உள்ள […]

அன்று ஓரு இரவில்………(2)

…………..வெளிச்ச புள்ளிகள் என்னை நெருங்க நெருங்க, என் உடலெல்லாம் சிறிது நடுங்க துவங்கியது. //குறை ஒன்றும் இல்லை !!! said… அப்புறம் அந்த ரெண்டு வெளிச்ச் புள்ளி ஏதாவடு மிருகம் தானே? இல்ல வண்டியா?\ நண்பர் நினைததுபோல் ஏதாவது மிருகமா..? இல்ல எதாவது வண்டியா..? என பலவாறு யோசித்து பார்த்தேன் ஆனால் அப்படி தோன்றவில்லை. ஏனென்றால் அந்த வெளிச்சப்புள்ளிகள், ஒரே நேர்க்கோட்டில் வராமல் வளைந்தும், நெளிந்தும், மேலும், கீழுமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. திரும்பி வந்த வழியே […]

நட்பே… நீ எனக்கு நட்பாக வேண்டும்.

மழலைப் பருவத்தில்ர்மழலைப் பருவத்தில் பார்த்து வியக்க ஒரு நட்பு… குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாட ஒரு நட்பு… காளைப் பருவத்தில் ஊர் சுற்ற ஒரு நட்பு… வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க ஒரு நட்பு… முதிர்ந்த பின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு… நட்புகள் ஆயிரம் இருந்தும் நட்பின் தேவை குறையவில்லை… தேவையின் போது தோள்களில் சாய நட்பு வேண்டும்… துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்… மகிழ்ச்சியின் போது மனம் மகிழ நட்பு […]