புதுச்சட்டை இங்கே ஃபாண்ட் மாற்றுவது எப்படி என கேட்கப்பட்டது… அதனால்…
பிளாக்கரில் லாகின் செய்தபின்,
முதலில் தங்களது DASHBOARD க்கு செல்லவும். அங்கு LAYOUT க்ளிக் செய்யவும்.
இப்போது படத்திலிருக்கும் எண்களுடன் கவனிக்கவும்.
1. LAYOUT TAB ஓபனில் இருக்கும்.
2. FONTS AND COLORS க்கு செல்லவும்.
3. எந்த FONT கலரை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செயுது கொள்ளவும்.
4. தேவையான கலரைத் தேர்வு செய்யவும்.
5. கீழே அதன் SAMPLE தெரியும்.
சரியான கலர் செட் ஆனவுடன், ஓக்கே என்றால் SAVE CHANGES க்ளிக் செய்யவும்.
எதுவுமே ஒத்துவரவில்லையெனில், CLEAR EDITS க்ளிக் செய்யவும். இப்போது முதலிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கலாம்.
இதைப் பயன்படுத்தி Text Color, Post Title Color, Blog Title Color, Sidebar title color, Blog Description Color, Link Color, Link Visited Color, Link Mouseover color போன்றவற்றை மாற்றலாம்.
வேறு எதைப் பற்றியாவது தெரியவேண்டுமென்றால் கேளுங்கள்…. தெரிந்தவரை சொல்கிறேன்.
எவனோ ஒருவன், 🙂
மெனக்கெட்டு தனியாக பதிவெழுதி எல்லோருக்கும் பயன்படுமாறு ஆலோசனை சொன்னதற்கு நன்றி. Fonts and Colours ஆப்ஷனை ஏற்கெனவே முயன்று பார்த்தேன். ஆனால் அதில் வரும் கட்டம் வெறுமையாகவே இருக்கிறது. எந்த நிறமும் தெரியவில்லை. popout என்பதை கிளிக் செய்தாலும் ஏதும் நிகழவில்லை. கீழே பிளாக் தெரிகிறது.
ஒருவேளை நான் தேர்வு செய்த வடிவமைப்பிற்கும் பிளாக்கருக்கும் பங்காளி பகையாளி சண்டை ஏதாவது இருக்குமோ என்னவோ 🙂
அதற்கும் வழி இருக்கும், ஆனால் தங்களது settings சென்று பார்த்தால்தான் சொல்ல முடியும்.
இன்னொரு வழி:
Layout ல் Edit HTML க்கு செல்லவும்…
Edit Template க்கு கீழே கட்டத்துக்குள் எழுத்துக்கள் edit செய்யுமாறு இருக்கும். அதில்
<Variable name="textColor" description="Text Color" type="color"
default="#29303b" value="#29303b">
என்பதைத் தேடவும். இதிலுள்ள #29303b என்பது கலரைக் குறிக்கும். இதை #000000 என மாற்றினால் textColor கருப்பாக மாறிவிடும்.
இது எனக்கு ஒர்க்அவுட் ஆகிறது… தாங்கள் முயன்று பார்த்து சொல்லவும்.
அப்படியும் முடியவில்லையெனில் நேரில் வந்தே செய்து தர முயற்சி செய்கிறேன்.
இதோ உங்களுக்கான சரியான வழிமுறை…
Layout ல் Edit HTML க்கு செல்லவும்…
Edit Template க்கு கீழே கட்டத்துக்குள் எழுத்துக்கள் edit செய்யுமாறு இருக்கும். அதில்
.post {
margin: 0px 0px 0 5px;
padding:0px 0px 0px 0px;
height: 100%;
text-align:left;
color:#666666;
font: 12px;
}
என்பதைத் தேடவும். இதிலுள்ள #666666 என்பது கலரைக் குறிக்கும். இதை #000000 என மாற்றினால் textColor கருப்பாக மாறிவிடும்.
ஓக்கே தானே?
எவனோ ஒருவன்,
சக்ஸஸ்! சக்ஸஸ்!!
(தேவர் படத்தோட ஆரம்ப டைட்டில் மாதிரி இருந்தாலும் என்னோட சந்தோஷத்த எப்படி சொல்றதுன்னு தெரியல)
நீங்க சொன்ன மாதிரியே கை நடுநடுங்க html என்கிற அந்த தேவபாஷைல பயந்துக்கிட்டே கை வெச்சேன். நம்பர மாத்திட்டு ப்ரிவியூ பாத்தவுடனே கலர் மாறிடுச்சு. உடனே ரொம்ப தைரியம் வந்து முந்திரிக்கொட்டை மாதிரி கமெண்ட் பாக்சலயும் அதே மாதிரி மாத்தினேன். சரியான்னு தெரியல.
ரொம்ப நன்றி எவனோ ஒருவன். இனிமே எந்த சந்தேகம் வந்தாலும் உங்களுக்குத்தான் முதல் மெயில். நீங்களா துரத்தற வரைக்கும் விடறதா இல்ல. :-))
சூப்பர்.
கமண்ட்க்கும் மாறியிருக்கிறதே! கலக்கிட்டீங்க.
//நீங்களா துரத்தற வரைக்கும் விடறதா இல்ல//
என்னால் முடிந்தவரை செய்வேன்.
ஒன்னு சொன்னா கப்புனு புடுச்சிகிறீங்களே… உங்களுக்கு தகவல் கொடுப்பது அவ்வளவு கஸ்டாமாக இருக்காது என நினைக்கிறேன். சில பேருக்கு போன் போட்டு விளக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டும். இருந்தாலும் ஒர்க்அவுட் பண்ணி ’ஓக்கே’ னு அவங்க சொல்றத கேக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.
Always Welcome.
நானும் இந்த தொழில் நுட்ப விஷயங்களில் BIG ZERO.
பகிர்விற்கு நன்றி
நன்றி வண்ணத்துபூச்சியார்.
அடுத்த பதிவையும் பாருங்கள், உபயோகமாய் இருக்கலாம்.