ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் – ஜூலை14

முதலில் கொஞ்சம் பயனுள்ள தகவல்கள்1. கூகுல் மொழிமாற்றியில் (Google Translator) புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு இணையதளப் பக்கத்தின் லிங்கை கொடுத்து, தேவைப்படும் மொழிகளில் இப்போது பார்த்துக்கொள்ளலாம். அடுத்து, முன்பு எழுத்துக்களை காப்பி பேஸ்ட் செய்தே மொழிமாற்றம் செய்து பார்க்க முடியும். இப்போது ஃபைலை அப்படியே அப்லோடு செய்து மொழிமாற்றம் செய்து பார்க்கலாம்.2. இமெயில்களை எப்படி கையாளுவது என்பது பற்றி இங்கே பார்க்கலாம் – http://gmail.com/tips3. கூகுல் பாஸ்வேர்ட் ரெகவரியில் இப்போது எஸ்எம்எஸ் மூலம் பாஸ்வேர்டை மீட்டுக்கொள்ளும் […]

மோகன்லாலுக்கு லெப்டினண்ட் கர்னல் பதவியா?? அப்போ எங்களுக்கு………………..?

திரைப்படங்களில் ராணுவ அதிகாரியாக திறம்பட நடித்ததாலும், ராணுவத்தில் சேரவேண்டும் என்ற ஆசை இருந்ததாலும், சமீபத்தில் மலையாள பட நடிகர் பத்ம ஸ்ரீ மோகன்லாலுக்கு கௌரவ லெப்டினண்ட் கர்னல் பதவி அளித்து கௌரவித்துள்ளது இந்திய ராணுவம். இதை கேள்விபட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கும் தாங்கள் திறம்பட நடித்த வேடங்க்ளுக்கு ஏற்ப தங்களுக்கும் பதவி கிடைக்கும் என்ற கனவில் மிதக்கின்றனர்.அந்த கனவுகளில் சில.. ரஜினி காந்த் – ராகவேந்திர பக்தனாகிய நான் ராகவேந்திரராகவே நடித்துள்ளதால் தனக்கு 2-ஆம் ராகவேந்திரர்பதவி கிடைக்கும் […]

ஏன் அலைய விட்டாய்………..

உனக்குரியவன் சகலத்திலும் சிறந்தவனாய், சாந்த குணத்தினனாய்,- நன்கு சிரித்து பேசும் முகத்தினனாய்,- உன்னிடம் சீற்றம் சிறிதும் கொள்ளாதவனாய் சுத்த மனத்தினனாய், சூது வாது அற்றவனாய்,- எங்கும் செல்வாக்கு மிக்கவனாய், சேனையையும் அடக்கும் திறத்தினனாய், சைத்தான்யம் விரும்பாதவனாய், சொல்லில் மாறாதவனாய்,- உனக்கு சோகம் உருவாக்காதவனாய்,- சகல சௌபாக்கியம் தருபவனாய் இருக்கின்றான் அப்படி இருந்த போதிலும் உன் மனதை ஏன் அலைய விட்டாய்?? என் இனிய தோழியே!!!!!!!! பி.கு:-நல்ல கணவன் இருந்தும் மனதை அலையவிடும் தோழிகளுக்கு எழுதியது (sep -1996) […]

நிஜமானதால்…………

பரிச்ச்சய பார்வையில் துவங்கி- அந்த பார்வைலேயே பரிணமித்த புன்சிரிப்பாய் தோழமை பிரிவோம் என்பதை உணராமல் பிணைத்துக்கொண்ட நட்பு முடிவுரை தெரியாமல் முகப்புரை நெருக்கம் தொங்கின முகங்குளுடன் தொலைத்த நட்பு தொடர் ரணங்களாய் மனதில் இலையுதிர் காலமாய் போன ஊடலில் இனிய வசந்தத்தின் தேடலாய் மனது சாலையோரத்தில் ரோமியோக்கள் போல சத்தமிட்டு திரிந்தது இனிய நினைவுகளாய் நெஞ்சில் நிஜங்களின் நிழலாய் நினைவில் நிறுத்த -சில நிழற்படங்கள் நட்பை காதலென்று நினைத்து மூக்குடைபட்டது நினைவின் ஒரு மூலையில் சுத்தமான காதலை […]

நண்பர்களே இது என் அறிமுக கிறுக்கல்

இந்த கிறுக்கனின் 13-ஆம் வயதில் இருந்து கண்ணில் படும் அழகு, அவலம், நன்மை, தீமை, சமுதய சீர்கேடு, மற்றும் அன்றாட நிகழ்வுகளில் மனதை பாதித்தவை காகிதத்தில் கிறுக்கல்களாக வெளிப்படும். அவற்றை வெகு சில நண்பர்களுக்கு மட்டும் காட்டுவேன். ஆனால் என் நண்பனின் வற்புறுத்தலால் இந்த கிறுக்கல் கிறுக்கனின் கிறுக்கல்களை இவ்விணையதளத்தில் கிறுக்குகிறேன். உங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் பின்னூட்டத்தில் கிறுக்குங்கள் இப்படிக்கு, கி.கி Thank you for reading. 🙂

சண்டை வராமலிருக்க ஒரே வழி

போனதடவ மச்சான் சக்கரை அட்வைஸ்+தத்துவ மழையில் ஒரு பதிவு போட்டிருந்தார். ஆனா நமக்குத்தான் ஒரு எழவும் புரியல. பதிவுலக வரலாறு தெரிஞ்சாத்தான் இவங்களோட பேனா சண்டை (பேனா முனை, கத்தி முனையை விடக் கூர்மையானது) புரியும் போல இருக்கு. புரியலன்னா போய்கிட்டே இருடா ஏனாவானான்னு(எவனோ ஒருவன், ஹி ஹி ஹி…) போய்கிட்டே இருந்தேன். இந்தத் தடவ பைத்தியக்காரனோட பதிவப் பார்த்தேன். சரி, நமக்கு இப்பவும் புரியாதுன்னு அப்படியே விட்டுருக்கனும். ஆபீஸ்ல, ஒரு வார புயலுக்குப் பின்னாடி, கொஞ்சம் […]