ஜூலை 29-ம் தேதி கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு நானும் என் மனைவியும் மற்றும் 2 தம்பிகளுமாக இரண்டு இரண்டுசக்கர வாகனத்தில் சென்றோம் .சென்றது தம்பிகளில் ஒருவனுக்கு மண்டையில் உள்ள மசாலா பாக்கெட் சேதமடைந்துள்ளதா என்பதை CT SCAN செய்து பார்ப்பதற்காக. அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் சந்தோஷத்தை கொண்டாட என்ன செய்யலாம் என யோசித்தோம். மனைவி கூட வந்ததால் டாஸ்மாக் செல்ல முடியவில்லை. எனவே பொள்ளாச்சியிருந்து வால்பாறை செல்லும் வழியில் 30-வது கிலோமீட்டரில் உள்ள […]
அன்று ஓரு இரவில்………(2)
…………..வெளிச்ச புள்ளிகள் என்னை நெருங்க நெருங்க, என் உடலெல்லாம் சிறிது நடுங்க துவங்கியது. //குறை ஒன்றும் இல்லை !!! said… அப்புறம் அந்த ரெண்டு வெளிச்ச் புள்ளி ஏதாவடு மிருகம் தானே? இல்ல வண்டியா?\ நண்பர் நினைததுபோல் ஏதாவது மிருகமா..? இல்ல எதாவது வண்டியா..? என பலவாறு யோசித்து பார்த்தேன் ஆனால் அப்படி தோன்றவில்லை. ஏனென்றால் அந்த வெளிச்சப்புள்ளிகள், ஒரே நேர்க்கோட்டில் வராமல் வளைந்தும், நெளிந்தும், மேலும், கீழுமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. திரும்பி வந்த வழியே […]
மண்ட காஞ்சு போச்சு…
காலை 7 மணிக்கு முழிப்பு. ஆபீஸ் கிளம்பி 9.30 க்கு அஜர். நெறைய வேலைகள், கொஞ்சம் பின்னூட்டங்கள். மதிய உணவுக்கு அலைச்சல். மீண்டும் ஆபீஸ். மாலை 7/8 மணிக்கு மீண்டும் வீடு. கொஞ்சம் டிவி. இரவு உணவு. அப்புறம் தனியே எடுக்கும் ஆர்டர்களுடன் மல்லுக்கட்டல். நிறைய அழைப்புகள் மொபைலில். கிடைக்கும் நேரத்தில் பதிவுகள். 1/2 மணிக்கு படுத்தவுடன் தூக்கம். மீண்டும் 7 மணிக்கு முழிப்பு, வந்த கனவுகள் கூட ஞாபகமில்லாமல். ஆபீஸ் கிளம்பி…. இப்படியே கடந்த மூன்று […]
பள்ளிக்கூடம் 3 – பம்பரம்
பள்ளிக்கூடம் 2 – உப்புமூட்டசண்ட இதன் தொடர்ச்சி… — சின்ன வயதில் பல விளையாட்டுக்கள் விளையாண்டபோதும், இந்தப் பம்பரமும், கோலிக்காயும்தான் வீரவிளையாட்டுக்களாக கருதப்பட்டது எங்களால். அதிலும் பம்பரத்தின்மீது கொஞ்சம் ஈர்ப்பு அதிகமே. முந்தைய பதிவில் உப்புமூட்டசண்ட விளையாடுவது எப்படி என்பது பற்றி பார்த்தோம் (டேய்…. ச்சூ ச்சூ…), இங்கு பம்பரம் விளையாடுவது எப்படி என்பது பற்றி பார்க்கலாம். (இதில் நிறைய விடுபட்டிருக்கலாம், முடிந்தவரை ஞாபகப்படுத்தி எழுதியிருக்கிறேன்) பம்பரத்தில் வட்டம் பொடியர்களின் விளையாட்டாகக் கருதலாம், இதில் பம்பரத்திற்கு ஆபத்து […]
நட்பே… நீ எனக்கு நட்பாக வேண்டும்.
மழலைப் பருவத்தில்ர்மழலைப் பருவத்தில் பார்த்து வியக்க ஒரு நட்பு… குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாட ஒரு நட்பு… காளைப் பருவத்தில் ஊர் சுற்ற ஒரு நட்பு… வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க ஒரு நட்பு… முதிர்ந்த பின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு… நட்புகள் ஆயிரம் இருந்தும் நட்பின் தேவை குறையவில்லை… தேவையின் போது தோள்களில் சாய நட்பு வேண்டும்… துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்… மகிழ்ச்சியின் போது மனம் மகிழ நட்பு […]
அன்று ஒரு இரவில்……….
நான் சத்தியமங்கலத்திற்கு அருகாமையில் உள்ள தூக்கநாயக்கன் பாளையத்தில் பட்டய படிப்பில் காலடி எடுத்து வைத்த முதலாம் ஆண்டு (1994) நடந்த திகில் சம்பவம். நான் அங்கு படிக்க சென்ற காலத்தில் என் சக நண்பர்களிடம் “நான் நாகர்கோவில்காரன் எனக்கு பயம் என்பது கிடையாது, இரவானாலும் பகலானாலும் எவ்விடத்திற்கும் செல்ல அஞ்சமாட்டேன், சுடு காட்டிற்கு வேண்டுமானாலும் இரவில் செல்வேன்” என பிதற்றி திரிவேன் (உண்மையும் கூட) இதை அடிக்கடி கேட்ட நண்பர்கள் என்னை என்றாவது சோதித்து பார்க்கும் திட்டத்தில் […]
Recent Comments