குழந்தைக்குப் பெயர் வைக்கும் போது…

Published by: 14

உங்கள் குழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி?
பெயர் வைக்கும்போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்னென்ன?
பெயர் வைத்தால் மட்டும் போதுமா? அதை மெய்ண்டெய்ன் செய்வது எப்படி?!

மற்ற இடங்களில் எப்படியோ தெரியாது, தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இது பயன்படலாம்.
(இங்கு ரெக்கார்டுகளில் என்பது ரேசன் கார்டு, லைசன்ஸ், டி.சி., பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றைக் குறிக்கும்)

பெயரின் நீளம்
பெயரை முடிந்த அளவு சுருக்கமாகவும், சிறியதாகவும் வைக்கவும். அனந்தராமகோபாலகிருஷ்ணன் எனுமாறு வைத்தால், பிற்காலத்தில் படிவங்கள் நிரப்பும் போது குழந்தைகள் பெற்றோரை நினைத்துப் பார்க்கக் கூடும். (திட்டுறதுக்குத்தான்).

வார்த்தைகள்
முடிந்த வரை ஒற்றை வார்த்தையாக வைப்பது நலம்; இரண்டிற்கு மேல் செல்வது நல்லதல்ல.

முதல் பதிவு மற்றும் ஸ்பெல்லிங்
குழந்தையின் பெயர் முதன்முதலில் ஏதாவதொரு ரெக்கார்டுகளில் வரும்போது (முன்பு டி.சி. இப்போது பிறப்புச் சான்றிதழாக இருக்கும்), ஸ்பெல்லிங் மற்றும் இன்சியலை (இன்சியல் அடுத்து வருகிறது) சரி பார்த்துக் கொள்ளவும். தவறு ஏதேனும் இருந்தால் முதலிலேயே சிரமம் பார்க்காமல் திருத்திக் கொள்ளவும்.

எனக்குத் தெரிந்து, நண்பர் பிரசாத்(Prasath) என்பவரது பெயர் Presath என்று முதலில் வாங்கிய டி.சி. யில் தவறுதலாக ஏறி விட்டது. அதன்பின் அனைத்து இடங்களிலும் (லைசன்ஸ், பாஸ்போர்ட்…) அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
இதுபோன்ற தவறுகள் ஆரம்பத்திலேயே திருத்தப்படுவதற்கு பெற்றோரே பொறுப்பு.

தந்தை பெயர் மற்றும் இன்சியல்
குழந்தைக்கான ரெக்கார்டுகளில் தந்தை பெயர் என்னும் இடங்களில், தந்தை பெயர் ரெக்கார்டுகளில் என்ன இருக்கிறதோ அதேபோல் இருக்க வேண்டும்.
(தந்தை பெயர் ஆனந்த கிருஷ்ணன் என ரெக்கார்டுகளில் இருக்கும் போது, குழந்தையின் ரெக்கார்டுகளில் தந்தை பெயர் எனும் இடத்தில் ஆனந்த் என இருக்கக் கூடாது)

தந்தை பெயரும் இன்சியலும் ஒத்துப் போக வேண்டும்.
இன்சியல் ஒன்றே ஒன்று இருப்பது நலம். இரண்டுக்கு மேல் இருப்பது நல்லதல்ல.
(குழந்தையின் பெயர் சேகர், தந்தை பெயர் ஆனந்த் என்றால், A.சேகர் என்பது பிரச்சனை இல்லை. தந்தை பெயர் ஆனந்த கிருஷணன் என்றால், A.K.சேகர் என்று வைக்கலாம். ஆனால், தந்தை பெயர் எனும் இடத்தில் ஆனந்த் என்றும், குழந்தை பெயர் A.K.சேகர் என்றும் இருப்பது தவறு. அதேபோல, தந்தை பெயர் G.ஆனந்த் எனும்போது, குழந்தைக்கு G.A.சேகர் என்று வைப்பது நல்லதல்ல; A.சேகர் என்பதே சிறந்தது)

அழைக்கும் பெயர்
ரெக்கார்டுகளில் ஒரு பெயரும், அழைப்பதற்கு இன்னொரு பெயரும் வைக்கும் பழக்கத்தைத் தவிர்க்கவும்.

சுப்பிரமணி என ரெக்கார்டுகளில் இருக்கும்போது, ராம்ஜி என அழைத்து, அந்த பெயரே நிலைத்துவிட்டது நண்பர் ஒருவருக்கு. இங்கு, அவர் வீட்டிலில்லாதபோது தபால் வந்தால், பக்கத்து வீடுகளில் விசாரிக்கப் படும்போது, ‘சுப்பிரமணி’ என்றால் யார் என்றே தெரியாது என சொல்லப்பட வாய்ப்பு உள்ளது.

அதேபோல, ஆனந்த கிருஷ்ணன் போன்று இரு வார்த்தை உள்ளவர்களுக்கு இதே பிரச்சனை வரலாம். குடும்பத்தார் ஆனந்த் என்றும், பிறர் கிருஷ்ணன் என்றும் அழைத்துப் பழகிவிட வாய்ப்புள்ளது. இங்கும் அதேபோல, யாரேனும் உறவினர் அவரைத் தேடி வரும்போது, பக்கத்து வீட்டுக்காரரிடம் ‘ஆனந்த் வீடு தெரியுமா?’ எனக் கேட்க, கிருஷ்ணன் என்றே தெரிந்த அவர் ‘தெரியாது’ எனக் கூற வாய்ப்புள்ளது. ஆகவே ஒரே வார்த்தையில் பெயர் வைப்பது நலம்.

(இப்போது உள்ள நடைமுறைகள் என்னவென்று தெரியவில்லை, ஆயினும் ஒரு சில கருத்துக்கள் பயன்படலாம்)

(எனது கேரள நண்பர்களின் ரெக்கார்டுகளைப் பார்க்கும்போது, அவர்கள் இன்சியல் பயன்படுத்தாதது தெரிந்தது. அவர்களது ரெக்கார்டுகளில் TIJU ANTONY எனுமாறே இருக்கிறது, ANTONY என்பது தந்தை பெயர், இங்கு இன்சியல் பிரச்சனை இல்லை.)

சில சந்தேகங்கள்….
1. கெசட்டில் பெயர் மாற்றுவது என்றால் என்ன?
2. அதைச் செய்வது எப்படி?
3. அப்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?
4. பெயர், தந்தை பெயர் என வழக்கில் இருக்கும் நமக்கு, படிவங்களில் First Name, Middle Name, Last Name, Surname என்றெல்லாம் இருப்பது ஏன்?

யாரேனும் பதில் சொன்னால் நல்லது.

மேலும், பெயர் சம்பந்தமான இதர பிரச்சனைகள் மற்றும் மனோரீதியான பாதிப்புகளைப் பற்றி யாரேனும் தொடர்ந்து கூறினால் நலம்.

Thank you for reading. 🙂

14 comments

  1. Suresh

    சூப்பர் பதிவு பாஸ் என் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது முதல் லேட்டர் ஆ அ வில் வைக்கவில்லை காரணம் நான் படிக்கும் போது பரீட்ச்சை பேப்ப்ர் கொடுக்கும் போது அடிப்பாங்க 😉 ஹீ ஹீ

  2. Beski

    -> Suresh
    நன்றி.

    சரிதான், எதுக்கெடுத்தாலும் முதல் ஆளாய் போய் நிக்க வேண்டி இருக்கும்…
    அடி வாங்குறதா இருந்தாலும் சரி… லட்டு வாங்குறதா இருந்தாலும் சரி…

  3. dondu(#11168674346665545885)

    நீங்கள் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கேள்விகளை நான் எனது டோண்டு பதில்கள் – 11.06.2007-க்கன வரைவில் சேர்த்து பதிலும் அளித்தாகி விட்டது. பதிவு வியாழனன்று காலை 5 மணிக்கு வருமாறு அமைவு கொடுக்கப்பட்டு விட்டது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  4. Beski

    மிக்க நன்றி dondu(#11168674346665545885)அவர்களே.

    அதென்ன உங்களுக்கு பெயருடன் ஏதோ எண்ணும் சேர்ந்து இருக்கிறது.

    தங்களிடமிருந்து பதில் வராததால், அந்தப் பகுதியை சிறிது எடிட் செய்து போட்டுவிட்டேன்.

  5. Beski

    யூர்கன் க்ருகியர்,
    தங்கள் வருகைக்கு நன்றி.

    அதென்ன ’யூர்கன் க்ருகியர்’, வித்தியாசமா இருக்கே! என்ன அர்த்தம்?

  6. சுனா பானா

    நல்ல பதிவு. தமிழ்நாட்டில் தமிழ் பெயர்கள் வைக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. தமிழ் பெயர் வைத்தால் நல்ல முன்னுதாரணமாக இருக்கும். புதுமையான தமிழ் பெயர்களை தேர்ந்தெடுப்பதோ, உருவாக்குவதோ பெரிய கம்ப சூத்திரம் இல்லையே.

  7. Beski

    //சுனா பானா said…
    நல்ல பதிவு.//
    நன்றி சுனாபானா. இதெல்லாம் எனது அனுபவங்களில் இருந்து வந்தவையே.

    //தமிழ்நாட்டில் தமிழ் பெயர்கள் வைக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. தமிழ் பெயர் வைத்தால் நல்ல முன்னுதாரணமாக இருக்கும். புதுமையான தமிழ் பெயர்களை தேர்ந்தெடுப்பதோ, உருவாக்குவதோ பெரிய கம்ப சூத்திரம் இல்லையே.//
    உண்மைதான். உங்களது பட்டியலில் இருந்தே எடுத்துக் கொள்கிறேன்.

Leave a Reply