முதன்முறையாக எக்மோர் இரயில் நிலையம் சென்றிருந்தபோது பிரமித்துப் போனேன், எவ்வளவு இரயில்கள், அத்தனையும் சரியாக வருகின்றன போகின்றன, அதற்கான அறிவிப்புகளும் சரியாக வருகின்றன என்று. அதன்பின் பல தடவைகள் சென்றிருந்தபோதும் ஏதும் குறைபாடு கண்டதில்லை. ஆனால் நேற்று,மும்பையிலிருந்து வந்த தங்கமணியை அழைத்துவரப் போயிருந்தேன். இரவு 7.45க்கு வரவேண்டிய இரயில். அட்டவணையில் அதே நேரத்திற்கு வரும் என்றிருந்தது. ஆனால் நடைமேடை எண் இல்லை. ஒருவழியாக விசாரித்து, 7வது நடைமேடையில் வரும் என்று அறிந்து அங்கு சென்று நின்றேன் 7.30 […]
ஒரு கதை பல கோணங்கள்
சமீபத்தில் INCEPTION படம் பார்த்தேன். பிரமித்துப் போனேன். இப்படியொரு இடியாப்பச் சிக்கலான கதையை, கண் முன்னே தெரியும்படி, நம்பும்படி, முக்கியமாக புரியும்படி எடுத்திருக்கும் இப்படக் குழுவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. சிறு நேரம்கூட திரையை விட்டு நம் கவனத்தைத் திருப்பினால் படம் வேறுவிதமாகப் புரிந்துவிடும். நல்ல வேளை பக்கத்தில் இருந்த மனைவி தொந்தரவு செய்யாதது எனது பணத்தை மிச்சப்படுத்தியது. இருந்தாலும் இன்னும் இரண்டு முறை பார்க்கவேண்டும். அது என்ன இரண்டு முறையா? சொல்கிறேன். கதைப்படி, ஒரு கனவை […]
சுடச்சுட பிளாக்கிங்
இந்த வாரம் வெளிமாநிலத்திற்குச் செல்வதால் roaming ல் booster ஏதாவது உள்ளதா என ஏர்டெல் தளத்தை மேய்ந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் அவை கண்களுக்குத் தட்டுப்பட்டன 3G என்ற எழுத்துக்கள். எவ்வளவு நாட்களாக காத்திருந்தேன் இந்த வசதிக்காக. அதன் விலை விபரங்கள் பார்த்ததும் மேலும் மகிழ்ச்சி. என்னால் உபயோகிக்கக்கூடிய விலைதான். ஒரு புறம் மகிழ்ச்சி, ஒரு புறம் கோபம், விளம்பரம் ஏதும் செய்து தெரியப்படுத்தவில்லையே என்று. அப்படி என்ன இருக்கிறது இதில் என்ற எண்ணமா? அதைக் கடைசியில் நீங்களே புரிந்துகொள்வீர்கள். […]
அவதிப்படும் 100 அடி ரோடு
(படம் beta.thehindu.com லிருந்து எடுக்கபட்டது) சென்னையில் வாகன நெரிசலைச் குறைக்க மேம்பாலங்கள் ஆங்காங்கே முளைத்துக்கொண்டே இருக்கின்றன. நல்ல விசயம்தான். ஆனால், அது கட்டி முடிக்கப்படும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியில் சில பாதைகள் மறைக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அதனால் ஏற்படும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் சொல்லமுடியாத அயற்சியைத் தருகிறது. என்ன செய்ய? பல காலத்து நன்மைக்காக சில காலம் கஷ்டம் அனுபவிப்பதில் குறையேதுமில்லை. ஆனால் இதுபோன்று ஏற்படும் கூடுதல் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்துத் […]
ஏதோ ஒன்னு
படிக்கவும் முடியல, எழுதவும் முடியல. சில நேரம் படிக்காம படுக்கவும் முடியல. ஒரு சில விசயங்களைப் பழகிட்டோம்னா திரும்ப விடுறது எனக்கு கொஞ்சம் கஷ்டம். அது எல்லாமே ஒரே மாதிரியா இருக்காது. இப்போ காபி குடிக்கிறத எடுத்துக்கலாம். வீட்டுல இருக்குறவரைக்கும் காலைல எந்திரிச்ச உடனே காபி குடிக்கனும்போல இருக்கும். அம்மா கேட்டவொடனே குடுக்கலைனா சண்டையே வரும். அந்த சமயத்துல எங்காவது வெளியூரு போயிருந்தா, காலைல எந்திரிச்சவொடனே எங்கயாவது தேடிப்பிடிச்சாவது குடிக்கிறது பழக்கம். அப்புறம் சென்னை வந்ததுக்கு அப்புறம் […]
Recent Comments